2017 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்க போகுதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

Posted By:
Subscribe to Boldsky

புதிய ஆண்டில் நாம் காலடியை வைத்துவிட்டோம். இந்த வருடம் நமக்கு எப்படி இருக்கப் போகிறதோ என்று பலரும் நினைப்பார்கள். இந்த ஆண்டாவது நமக்கு திருப்புமுனையாக இருக்காதா என்று பலரும் நினைப்பார்கள். இதற்காக நம்மில் பலரும் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், நம் ராசி என்ன தான் சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவல் காட்டுவோம்.

2017 Horoscope For All Zodiac Signs

இக்கட்டுரையிலும் அது தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் வேடிக்கையாகவும், சாகசம் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த வருடத்தில் புதிய தொழில் ஆரம்பிக்க நினைத்தால், உடனே ஆரம்பிப்பது நல்லது. மேலும் இந்த வருடம் உங்கள் துணையுடன் சுற்றுலாப் பயணத்தை தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

இந்த ராசிக்காரர்கள் தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலில் எவ்வித பிரச்சனையும் வராது. காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முக்கியமாக இந்த வருடத்தில் யாருக்கும் வாக்குறுதியைக் கொடுக்காதீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அமைதியாக இருக்கும். இந்த வருடத்தில் மன அமைதியைத் தேடுவீர்கள். மேலும் இவ்வருடத்தில் உங்களிடம் உள்ள பயத்தால், உடல்நலத்தை அழித்துக் கொள்ளாதீர்கள். திருமணமான தம்பதிகள் இந்த வருடம் குழந்தைக்கு திட்டமிடுவது நல்லது. இவ்வருடத்தில் உடல்நலத்தில் பிரச்சனை வராமலிருக்க ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களின் அதிகப்படியான சுறுசுறுப்பான செயலால் சந்தோஷம் பாழாகும் வாய்ப்புள்ளதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த வருடத்தில் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும், நன்கு யோசித்து பின் ஈடுபடுவது நல்லது.

திருமணமாகாத மிதுன ராசிக்காரர்கள், 2017 ஆம் ஆண்டு தங்களுக்கான சரியான வாழ்க்கைத் துணையைத் தேடி தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் 2017 ஆம் ஆண்டு தங்களுக்கானதை தேர்ந்தெடுப்பதில் கடினத்தை உணர்வார்கள். இவ்வருடத்தில் உங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது என பணத்தை கண்டபடி செலவழிப்பதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் துணை தன்னிடம் உள்ள பயத்தைப் போக்க உங்களது உதவியை நாடுவார்கள். ஆரோக்கியம் மற்றும் உறவுகள் நிலையாக நிலைத்திருக்க கடக ராசிக்காரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2017 ஆம் ஆண்டு மிகவும் சிறந்த வருடமாக இருக்கும். இந்த வருடத்தில் அதிர்ஷ்டமும், சந்தோஷமும் நிலைத்திருக்கும். உறவுகள் அல்லது வேலைக்காக காத்திருக்காமல் உடனே அதற்கான முயற்சியில் இறங்குங்கள். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவியுங்கள். இந்த வருடத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் 2017 ஆம் ஆண்டு எதையும் ராஜதந்திர வழியில் கையாள வேண்டும். இந்த வருடத்தில் நீங்கள் கடந்த காலத்தில் தவறாக எடுத்த சில முடிவுகளால் பிரச்சனையை சந்திக்க நேரிடும். உங்களுக்கு வேலைக்காத உறவுகளில் இருந்து விலகுவதற்கான சரியான நேரமும் இது தான்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த வருடம் தங்களுள் இருக்கும் கற்பனை திறனை வெளிக்கொணர்ந்தால் அல்லது தன்னிடம் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்தால், மற்றவர்கள் அதைப் புரிந்து உங்கள் கனவை நனவாக்குவார்கள். முக்கியமாக இந்த வருடம் குடும்பத்தினருடன் போதுமான அளவு நேரத்தை செலவிடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வருடம் உங்களது குறிக்கோள் மற்றும் இலக்குகளை அடைய மேற்கொள்ளும் முயற்சி நன்மைக்கு வழிவகுக்கும். மனதளவிலும், உடலளவிலும் பிட்டாக இருக்க, நல்ல ஆரோக்கியமான டயட்டைப் பின்பற்ற வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் உற்சாகத்துடன் இருக்கும் மற்றும் தன்னிடம் உள்ள முன்னேறும் சக்தியால் மனம் உறுதியுடன் இருக்கும். இந்த ராசிக்காரர்களின் சமூக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத் திட்டங்கள் சவாலானதாக இருந்தாலும், லாபத்தை வழங்கும். இந்த வருடம் தனுசு ராசிக்காரர்கள் மிகுந்த ரொமான்டிக்கானவர்களாக இருப்பர்.

மகரம்

மகரம்

மகர ராசிக்கார்களுக்கு 2017 ஆம் ஆண்டு அமைதி மற்றும் நல்லிணக்கமாக இருக்கும். 2017 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்களின் புதுமையான பாணியால், அவர்களது ஆளுமையைக் காணலாம். காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்வில் ஒரு முக்கிய பகுதி என்பதால், இந்த வருடத்தில் இந்த ராசிக்காரர்கள் திருமணம் புரிவது நல்லது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அற்புதமாகவும், நேர்மறையான சந்தர்ப்பங்கள் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த வருடத்தில் வேலை போதுமானதாகவும், அதற்கேற்ற கைமாறும் கிட்டும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்கார்கள் 2017 ஆம் ஆண்டு தங்கள் வாழ்க்கை அமைதியான முறையில் கொண்டு செல்வார்கள். இவர்களது பொறுமை தான் எதிலும் வெற்றி கிட்டுவதற்கான ரகசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

2017 Horoscope For All Zodiac Signs

Let’s take a look at the overview of zodiac 2017 for each sun sign.
Story first published: Wednesday, January 4, 2017, 11:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter