இந்தியாவில் ஞாயிறு விடுமுறை நாள் அல்ல!

Posted By:
Subscribe to Boldsky

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஞாயிறு தான் விடுமுறை நாளாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வழக்கம் தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது சில துறை சார்ந்து வேறுப்படும்.

ஊடகம், காவல், மருத்துவம் போன்ற துறைகளில் இந்த கிழமை தான் விடுமுறை என்றில்லை. ஒவ்வொருவருக்கும் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படும்.

When was Sunday a holiday started in India?

அது எந்த கிழமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை வீக் ஆஃப் என்பார்கள். பெரும்பாலான அரசு, ப்ரைவேட் துறைகளுக்கு ஞாயிறு அன்று விடுமுறை வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த முறை எப்போது அமலுக்கு வந்தது? எதனால், யாரால் கொண்டுவரப்பட்டது? என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவிப்பு ஏதும் இல்லை!

அறிவிப்பு ஏதும் இல்லை!

இந்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை தகவலின் படி சனி, ஞாயிறு விடுமுறை நாள் தான் என்ற அறிவிப்பு ஏதும் இல்லை. வேலைநாள் என்று அறிவிக்கும் பட்சத்தில் பணியாளர்கள் வேலை செய்து தான் ஆகவேண்டும்.

இது போன்ற சூழல்கள் பலமுறை எழுந்து, அந்நாட்களில் அரசு பணியாளர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் வேலை செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் கூட வங்கி ஊழியர்கள் சனி, ஞாயிறு அன்று வேலை செய்ய வேண்டும் என அரசு உத்தரவின்படி பணியாளர்கள் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாள் வேலை முறை!

ஐந்து நாள் வேலை முறை!

ஆனால், மே 21, 1985-ல் அரசேட்டில் பதிவாகியுள்ள உத்தரவின்படி இந்திய அரசு பணியாளர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் ஐந்து நாள் வேலை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது அறிய வருகிறது.

இதனால் அரசு அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செயல்படும். சனி, ஞாயிறுகளில் செயல்படாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு விடுமுறை அல்ல!

ஞாயிறு விடுமுறை அல்ல!

இந்த உத்தரவில் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஐந்து நாள் வேலை முறை என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர, ஞாயிறு அன்று விடுமுறை நாள் என குறிப்பிடப்படவில்லை. எனவே, அரசு உத்தரவிடும் பட்சத்தில் ஞாயிறுகளிலும் வேலை செய்து தான் ஆகவேண்டும்.

பிரிட்டிஷ் நிர்வாகம்!

பிரிட்டிஷ் நிர்வாகம்!

இந்தியா பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு கீழ் இருந்த போது, கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் ஞாயிறு விடுமுறை வேண்டி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

சில அதிகாரிகள் இப்படி விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் ஊதியத்தில் மாதத்தில் நான்கு நாட்களின் ஊதியம் பிடிக்கப்படும் என அறிவித்ததாகவும். பின்னாட்களில் அது பாதி நாள் ஊதிய பிடிப்பாக மாறியதாகவும் தகவல்கள் அறியப்படுகிறது.

வேறு சில கருத்துக்கள்...

வேறு சில கருத்துக்கள்...

கிறிஸ்துவர்கள் ஞாயிறு அன்று தேவாலயம் சென்று வழிபட வேண்டும் என்பதற்காக விடுமுறை வழங்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

முகலாய காலத்தில் இந்தியாவில் 1530 - 1707 வரை வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்தது. ஏனெனில், அன்று தான் இஸ்லாமியர்கள் மசூதியில் தொழுகை செய்வார்கள் எனவும் சிலர் கருத்துக்கள் நிலவுகின்றன.

ஆனால், இவை எந்தளவிற்கு உண்மை என்பது அறியப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

When was Sunday a holiday started in India?

When was Sunday a holiday started in India?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter