For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அர்த்தநாரீஸ்வரர் பற்றி பலரும் அறியாத ஆன்மீக தகவல்கள்!

|

அர்த்தநாரீஸ்வரர், சிவனும், பார்வதியும் ஒரே உருவாய் சேர்ந்த அருள்பாலிக்கும் தோற்றமாகும். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தி இல்லையேல் சிவனில்லை என்ற விளக்கத்தை அளிக்கும் கூற்றாகவும் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் விளங்குகிறது. திருச்செங்கோட்டில் இருக்கும் சிவன் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர் மூலவராக வழங்கப்படுகிறார்.

பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்புடையதாகவும், தனித்தன்மை உடையதாகவும் திகழ்கிறது. ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி, வாழ்வியல் ரீதியாகவும் கூட, ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் என்ற வாழ்க்கை சாத்தியமற்றது என்பதை விளக்கும் விதமாகவும் திகழ்கிறது அர்த்தநாரீஸ்வரர் அவதாரம்.

சிவபெருமானை ஏன் லிங்க வடிவில் வணங்குகிறோம்?

இனி அர்த்தநாரீஸ்வரர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் உருவ தோற்றத்துடன் தொடர்புடைய பிருங்கி முனிவரின் கதை பற்றிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெயர்க்காரணம் / சொல்லிலக்கணம்

பெயர்க்காரணம் / சொல்லிலக்கணம்

அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில், அர்த்தம் என்றால் பாதி என்று பொருள்; நாரி என்றால் பெண் என்று பொருள். சிவன் பாதி, பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரி+ ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது.

வேறு பெயர்கள்

வேறு பெயர்கள்

அர்த்தநாரீஸ்வரர் எனும் பெயர் மட்டுமின்றி வேறு சில பெயர்களும் இருக்கின்றன.

1) உமையொரு பங்கன்

2) மங்கையொரு பாகன்

3) மாதொரு பாகன், என இந்த மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார்.

பொருள் விளக்கம்

பொருள் விளக்கம்

சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்கிறது இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம். வாழ்வியலில், ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை இல்லை என்ற பொருளையும் தருகிறது அர்த்தநாரீஸ்வரர் உருவம்.

இலக்கியத்தில் அர்த்தநாரீஸ்வரர்

இலக்கியத்தில் அர்த்தநாரீஸ்வரர்

"நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்திலும், "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்றுள் அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தை பற்றி பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.

தேவார பதிகங்களிலும்

தேவார பதிகங்களிலும்

"வேயுறு தோளி பங்கன்", "வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவனர்" அர்த்தநாரீஸ்வரர் பற்றி குறிக்கும் வரிகள் என கூறுகிறார்கள்.

பழைய வடிவம்

பழைய வடிவம்

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் தான் தென்னிந்தியாவிலேயே காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பார்வதி வீணையுடனும், சிவன் காளையில் ஏறி அமர்ந்திருக்கும் கோலத்தில் காணப்படுகிறார்கள்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு

திருச்செங்கோடு சிவன் கோயிலில் மூலவராக அமைந்திருக்கிறார் அர்த்தநாரீஸ்வரர். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீஸ்வரி, பாகம்பிரியாள் என்ற பெயர்களும் இருக்கின்றன. இங்கு அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

பிருங்கி முனிவரின் வரலாறு

பிருங்கி முனிவரின் வரலாறு

அர்த்தநாரீஸ்வரர் உருவ தோற்றத்துடன் பிருங்கி முனிவரின் கதையும் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிப்பட்டு வந்த தீவிரமான சிவன் பக்தர் ஆவார்.

கோபமடைந்த இறைவி (பெண் கடவுள்)

கோபமடைந்த இறைவி (பெண் கடவுள்)

தொடர்ந்து தவம் செய்து அர்த்தநாரி வடிவம் பெற்ற போதும் கூட பிருங்கி முனிவர் இறைவியையும் சேர்த்து வழிப்பட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத் துளைத்துத் தனிப்படுத்தி வழிப்பட்டு வந்தாராம். பிருங்கி முனிவரின் இந்த செயலைக் கண்டு கோபமடைந்த இறைவி அவரை தன்னிலைப்படுத்தி அவரை வலிவிழந்து போகும்படி சாபமிட்டார்.

நடக்க முடியாத நிலை

நடக்க முடியாத நிலை

இறைவியின் சாபத்தினால் நடக்க முடியாமல் ஆனார் பிருங்கி முனிவர். வலிவிழந்து போயினும் கூட தன்னிலை மாறாமல் இருந்தார் பிருங்கி முனிவர். இதனைக் கண்டு சிவன், தன் பக்தனில் நிலையை கண்டு வருந்தி மூன்றாவது காலை அருளினார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் பிருங்கி முனிவர் மூன்று கால், மூன்று கையுடன் அமைக்கப்படுவதுண்டு என்றும் சில கூற்றுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Know About Ardhanarishvara

Things To Know About Ardhanarishvara, take a look.
Desktop Bottom Promotion