உண்மையில் உலகை காக்கும் 8 ரியல் சூப்பர் ஹீரோஸ்!

Posted By:
Subscribe to Boldsky

திரையில் மட்டும் இன்றி தரையிலும் உண்மையாக மக்களுக்காக போராடுபவர்கள் தான் மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பெறுகிறார்கள். மற்றவர்கள் வெறும் நடிகர்கள் தான்.

அந்த வகையில் காலநிலை மாற்றம், அடிப்படை சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் மாற்றம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு நடத்தி வரும் உலக பிரபலங்களை பற்றி தான் நாம் இங்கு பார்க்கவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லியோனார்டோ டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோ

ஆஸ்கர் மேடையிலேயே உலகம் வெப்பமடைந்து வருவதை பற்றி எடுத்துரைத்தார் லியோனார்டோ டிகாப்ரியோ. இவர் "லியோனார்டோ டிகாப்ரியோ ஃபவுண்டேஷன்" மூலமாக காலநிலை மாற்றம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.

லியோனார்டோ டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோ

ஹெய்டி பூகம்பத்திற்காக நிறைய நன்கொடை வசூலித்து உதவினார் லியோனார்டோ டிகாப்ரியோ. மேலும் ஐ.நா காலநிலை மாற்றத்திற்கான மெசெஞ்சர் ஆப் பீஸ் என லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரை அறிவித்தது.

ஜார்ஜ் குளூனி

ஜார்ஜ் குளூனி

ஜார்ஜ் குளூனி ஒரு அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், ஆக்டிவிஸ்ட் என பன்முகம் கொண்டவர்.இவர் மாலத்தீவு-ல் மனித உரிமைக்காக போராடியவர். அனைவரும் காலநிலை மாற்றத்தை பற்றி பேசிக் கொண்டிருந்த போது இவர், அதற்காக வாதிட துவங்கினார்.

ஜார்ஜ் குளூனி

ஜார்ஜ் குளூனி

மேலும் அமெரிக்காவில் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் எண்ணெயையும் இவர் எதிர்த்தார். தனது பி.எம்.டபிள்யூ காரை சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற வகையில் எலக்ட்ரிக் காராக மாற்றியமைத்தார்.

ராகுல் போஸ்

ராகுல் போஸ்

விஸ்வரூபம் படத்தில் நாம் கண்டு வியந்த பாலிவுட் நடிகர். இவர் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து போராடி வரும் ஒரு ஆக்டிவிஸ்ட் ஆவார்.

ராகுல் போஸ்

ராகுல் போஸ்

கோபன்ஹேகனில், டென்மார்க் பாராளுமன்றத்தின் முன்னர் பத்தாயிரம் பேரை திரட்டி மெழுகுவர்த்தி ஏந்தி காலநிலை மாற்றத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினார்.

மார்க் ருஃப்பால்லோ

மார்க் ருஃப்பால்லோ

ஏவன்ஜெர் படத்தில் ஹல்க்காக தோன்றிய இவர். தனது சொந்தமான வாட்டர் டிஃபென்ஸ் எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் இயற்கை மற்றும் சுத்தமான எரிசக்தியை ஆதரித்து வருகிறார். சிறந்த மனிதாபிமானி என்ற விருது இவருக்கு பாஃட்டா விருது விழாவில் வழங்கப்பட்டது.

பிராட் பிட்

பிராட் பிட்

பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி பல சமூக தொண்டாற்றி வருகிறார்கள். கடந்த 2007-ம் ஆண்டு இவர் தி மேக் இட் ரைட் ஃபவுண்டேஷன் என்பதை ஆரம்பித்து உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்கு நிலையான வீடுகள் அமைத்து தந்து வருகிறார்கள்.

பிராட் பிட்

பிராட் பிட்

கிரீன் ஹவுஸிங் திட்டம் மற்றும் கருத்துப்படிவத்தை இவர் ஆதரிப்பவர். அமெரிக்க கிரீன் ஹவுஸ் அமைப்பு இவருக்கு விருது கோடுத்து கௌரவம் செய்தது.

குல் பனாக்

குல் பனாக்

குல் பனாக் ஒரு இந்திய நடிகை, மாடல், பின்னணி குரல் கொடுப்பவர் ஆவார். இவர் குல் 4 சேன்ஜ் (Gul 4 Change) என்ற இவரது அமைப்பின் மூலம் அடிப்படை சுகாதாரத்திற்காக நிறைய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

குல் பனாக்

குல் பனாக்

மேலும், கிரீன் ஹோம் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றையும் இவர் ஆதரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நிலத்தடி நீர் சேமிப்பு, சூரிய எரிசக்தி போன்றவற்றை பயன்படுத்த கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மாட் டாமன்

மாட் டாமன்

அமெரிக்க நடிகரான மாட் டாமன்பல வருடங்களாக சுத்தமான நீருக்காக போராடி வருகிறார். H2O ஆப்ரிக்கா என்ற அமைப்பை துவங்கி ஆப்ரிக்கா மக்களுக்கு சுத்தமான நீரை பெற்றுத்தர இவர் போராடி வருகிறார். water.org என்ற இணையத்தை துவங்கி சுத்தமான நீர் குறித்த பிரச்சாரம் செய்து வருகிறார் மாட் டாமன்

எம்மா வாட்சன்

எம்மா வாட்சன்

ஹாரி பாட்டர் மூலம் இந்தியர்களுக்கு நன்கு அறியப்படுபவர் எம்மா வாட்சன். இவர் நிலையான ஃபேஷனை ஆதரித்து வருகிறார். அதவாது இயற்கையில் இருந்து, இயற்கையோடு ஒத்துப்போகும், மண்ணில் மக்கும் வகையிலான பொருட்களை ஆதரிக்கிறார்.

எம்மா வாட்சன்

எம்மா வாட்சன்

முக்கியமாக மண்ணுக்கு சேதம் உண்டாக்காத இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் உடைகளை இவர் ஆதரித்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Eight Admirable Celebrities Are Fighting To Save Our Earth

These Eight Admirable Celebrities Are Fighting To Save Our Earth, read here in tamil.