நீச்சல் குளத்தில் குளித்த 1 மணிநேரத்தில் உயிரை விட்ட சிறுவன்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நீச்சலை கற்றுக் கொடுக்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அவர்களை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று, குடும்பத்துடன் அங்கு நேரத்தை செலவிடுகின்றனர்.

பொதுவாக நீரில் சிறிது நேரம் விளையாடினாலே, நாம் மிகுந்த களைப்பையும், தூக்க உணர்வையும் பெறுவோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வயதைக் கொண்ட ஜானி என்னும் சிறுவனின் கதையைக் கேட்டால், நிச்சயம் பல பெற்றோர்களும் அதிர்ந்துபோவார்கள். சொல்லப்போனால், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உண்மை சம்பவம், தற்போதைய பெற்றொர்களுக்கு ஒரு விழிப்புணர்வைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேஸன்ட்ரா ஜாக்சன்

கேஸன்ட்ரா ஜாக்சன்

கேஸன்ட்ரை ஜாக்சன் தன் மகன் ஜானியுடன் நீச்சல் குளத்தில் ஒரு நாள் முழுவதும் செலவழித்தார். அப்போது ஜானி திடீரென்று தனக்கு தூக்கம் வருவதாகவும், வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டான். கேஸன்ட்ராவும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

Image Courtesy

ஜானி

ஜானி

வீட்டை அடைந்ததும், ஜானி தூங்க சென்றுவிட்டான். கேஸன்ட்ரா சிறிது நேரம் கழித்து, தன் மகனைக் காண படுக்கை அறைக்கு சென்றார். அப்போது தான் ஒரு அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது.

மரணப் படுக்கை

மரணப் படுக்கை

படுக்கை அறையில் ஜானியைக் கண்ட கேஸன்ட்ரா அதிர்ச்சி அடைந்தார். ஜானி வாயில் நுரை தள்ளிய படி மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். மருத்துவமனையை அடைவதற்குள் ஜானி இறந்துவிட்டான்.

மருத்துவர்கள் கூற்று

மருத்துவர்கள் கூற்று

ஜானிக்கு இரண்டாம் நிலை ட்ரவுனிங் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நீரைக் குடித்ததால் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த நிலை குளத்தில் நீரைக் குடித்த 72 மணிநேரத்தில் அனுபவிக்கக்கூடும் எனவும் மருத்துவர்கள் கூறினர்

நுரையீரல் பாதிப்பு

நுரையீரல் பாதிப்பு

நீச்சல் குளத்தில் குழந்தைகள் குளிக்கும் போது, சிறிது நீரைக் குடித்தாலும், அது நுரையீரலில் எரிச்சலூட்டி, அழற்சியை ஏற்படுத்தும். சிறிது தண்ணீர் உடலினுள் போனாலும், அது நுரையீரலில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்

கவனம் அவசியம்

கவனம் அவசியம்

எனவே நீச்சல் குளத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால், திரும்பி வரும் போது அவர்களின் மீது சற்று அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்.

எப்போது மருத்துவரை அவசியம் அணுக வேண்டும்?

எப்போது மருத்துவரை அவசியம் அணுக வேண்டும்?

நீச்சல் குளத்தில் நேரத்தை செலவழித்துவிட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவையாவன:

* குளியலுக்கு பின் அளவுக்கு அதிகமான சோர்வு

* குளியலுக்குப் பின் மூச்சு விடுவதில் சிரமம்

* காரணமின்றி மனநிலையில் ஏற்ற இறக்கம் அல்லது எரிச்சலுடன் இருப்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Boy Died an Hour after Bathing. All Parents Should See This

After spending the day at the swimming pool, Cassandra Jackson and her ten-year-old son Johnny were exhausted. But suddenly the boy died an hour after bathing. Read on to know more...
Story first published: Wednesday, November 30, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter