அரவிந்த்சாமி பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தளபதியில் பூத்த ஆண் ரோஜா என்றே கூறலாம் அரவிந்த்சாமியை. ஆண்களே பொறாமைப்படும் அளவிற்கு என்றால் பெண்கள் பற்றி கூறவா வேண்டும். சிவந்த நிறம், அழகு தோற்றம், மணி ரத்னம் அறிமுகப்படுத்திய நவரத்தினம் அரவிந்த்சாமி, காதல், காமெடியில் தூள் கிளப்பி திரை துறையில் தனக்கான ஓர் தனி ரசிகைகள் கூட்டமே வைத்திருந்தார்.

பிரபலங்களின் திருமணம் விவாகரத்தில் முடிய காரணங்கள் என்ன??

ஆனால், அப்படியிருந்தும் திடீரென திரையுலகில் இருந்து விலகி வேறு துறையில் கால் பதித்து அதிலும் வெற்றிபெற்றார். சில காலம் அரவிந்த்சாமி என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்து. விபத்துள்ளாகி கவலைக்கிடமாவும் இருந்தார் அரவிந்த்சாமி. மிக குறுகிய நட்பு வட்டார மக்களுக்கு மட்டுமே இது தெரியும். அதில் மணியும் ஒருவர்.

பிரபல நடிகர், நடிகைகளின் சில முகம் சுளிக்கவைக்கும் பழக்கவழக்கங்கள்!

பிறகு மணி அவர்கள் மீண்டும், தான் தொலைத்த ரத்தினத்தை கடலில் இருந்து மீட்டெடுத்து கூட்டி வந்தார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நட்சத்திர அந்தஸ்து

நட்சத்திர அந்தஸ்து

திரையுலகில் மிக சிலர் மட்டுமே தங்களது நட்சத்திர அந்தஸ்தில் இருந்து எப்போதும் ஒதுங்கியே இருப்பர்கள். அவர்களில் அரவிந்த்சாமியும் ஒருவர். வீட்டின் செல்ல பிள்ளையான இவர் அதிகம் தனிமையை விரும்பும் நபர், பெரிதாக யாரிடமும் பேசமாட்டார். திரையுலகில் இவருக்கு நண்பர்கள் என நிறைய பேர் கிடையாது.

 நட்சத்திர அந்தஸ்து

நட்சத்திர அந்தஸ்து

ஆயினும் மகா புத்திசாலி. தினமும் ஏதேனும் ஓர் விஷயத்தை கற்றுக் கொள்ளாமல் இவர் உறங்குவதில்லை என்கிறார். குறைந்தபட்சம் கூகுள் செய்தாவது எதையாவது கற்றுக் கொண்டு தான் உறங்குவாராம்.

 விளையாட்டில் ஆர்வம்

விளையாட்டில் ஆர்வம்

அரவிந்த்சாமிக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. தனியாக ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுகளை விரும்பி விளையாடுவார். உண்மையில், இதை ஓர் சிறந்த பொழுதுபோக்கு நேரமாக வைத்திருந்தார் அரவிந்த்சாமி.

 விளையாட்டில் ஆர்வம்

விளையாட்டில் ஆர்வம்

சமீபத்தில் கேம் ஆப் வார்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு என அரவிந்த்சாமி கூறியிருக்கிறார்.

 ஆப் டெவெலப்பர்

ஆப் டெவெலப்பர்

இது பலருக்கும் தெரியாத ஒன்று, அரவிந்த்சாமி ஓர் தொழில்நுட்ப வழிகாட்டியும் கூட. அரவிந்த்சாமிக்கு மென்பொருள் செயலிகள் உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த நிறைய பிசினஸ் செய்து வருகிறார்.

 ஆப் டெவெலப்பர்

ஆப் டெவெலப்பர்

தன் நிறுவனம் மூலமாக வர்க் ஃப்ளோ ஆப்ஸ், ப்ராசஸ் அவுட் சோர்ஸிங் போன்ற வேலைகளும் செய்து தருகிறார் அரவிந்த்சாமி. இவரது நிறுவனத்தின் பெயர் Talent Maximus. தற்சமயத்தில் ஆப்கள் டெவெலப் செய்து வருவதாகவும் ஓர் பேட்டியில் கூறியிருந்தார்.

குடும்பம்

குடும்பம்

அரவிந்த்சாமி இரண்டு முறை திருமணம் ஆனவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது முதல் மனைவி பெயர் காயத்திரி ராமமூர்த்தி. இவரது குழந்தைகளின் பெயர் ஆதிரா (மகள்) மற்றும் ருத்ரா (மகன்).

குடும்பம்

குடும்பம்

நட்சத்திர ஒளியில் இருந்து தனது குழந்தைகளை தள்ளியே வைத்திருந்தார் அரவிந்த்சாமி. இவர் ஒரு ஹீரோ என்பதே தெரியாத படியும் வளர்த்திருக்கிறார். டிவி-களில் பார்த்து தான் இவர் பெரிய ஹீரோ என்பதே அவர்கள் அறிந்தார்களாம்.

 மராத்தான் ரன்னர்

மராத்தான் ரன்னர்

ஓர்முறை விபத்துள்ளாகி அரவிந்த்சாமி பாரளைஸ் ஆகியிருந்தார். இதிலிருந்து இவர் மீண்டு வர சில வருடங்கள் ஆனது. இதில் இருந்து மீண்டு வந்து இவர் மராத்தான்-ல் கலந்து கொண்டு ஓடினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

 மராத்தான் ரன்னர்

மராத்தான் ரன்னர்

ஆம்! எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் திறன் அரவிந்த்சாமியிடம் இருக்கிறது. எழுந்து சில அடி தூரம் நடக்கவே முடியாது என்று இருந்த நிலையை கடந்து, 21 கி.மீ ஓடியுள்ளார் அரவிந்த்சாமி.

 பன்முக வித்தகன்

பன்முக வித்தகன்

மாடலிங்கில் ஆரம்பித்து, நடிகராகி, பெரிய இளம் பெண்களின் ரசிகை கூட்டம் இருந்த தருணத்தில் அதில் இருந்து விலகி தொழில்நுட்ப ஆர்வலராக ஜொலித்து. நல்ல அப்பாவாக இருந்து, விபத்தை கடந்து மீண்டெழுந்து இப்போது தனி ஒருவனாக விஸ்வரூபமும் எடுத்துவிட்டார் அரவிந்த்சாமி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அறுசுவையும் நாவில் நாட்டியம் ஆட வைக்கும் உடன்குடி கருப்பட்டி!!

English summary

Surprising Unknown Facts About Arvind Swamy

Do you know about Surprising Unknown Facts About Arvind Swamy? read here in tamil.
Story first published: Thursday, May 26, 2016, 11:59 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter