பெண்களை பாலியல் ரீதியாக கேவலப்படுத்தி பேசிய டொனால்ட் ட்ரம்ப்-ன் கொச்சையான கருத்துகள்!

Posted By:
Subscribe to Boldsky

டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சையின் மொத்த உருவம் என கூறலாம். இவர் பேசுவது, செய்வது என பலவனவும் சர்ச்சையில் தான் முடிந்திருக்கிறது. முக்கியமாக இவர் வெளியிடும் / பதிவு செய்யும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சைக்குள்ளானவை தான்.

பெண்களை குறித்து கேவலமாகவும், பாலியல் ரீதியாக அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பலமுறை கருத்துக்கள் பதிவு செய்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலூட்டிய அன்னையை!

பாலூட்டிய அன்னையை!

வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்த போது, தனது மூன்று மாத குழந்தைக்கு பாலூட்ட சென்ற போது. அந்த வழக்கறிஞர் பெண்மணியை கண்டு இது அருவருப்பாக இருக்கிறது என கூறியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

ட்விலைட் ஹீரோயின்!

ட்விலைட் ஹீரோயின்!

ட்விலைட் ஹீரோயின் கிறிஸ்டன் ஸ்டீவர்ட்டினை அவரது கணவர் மீண்டும் ஏற்க கூடாது. அவர் நாய் போன்று ஏமாற்றுபவர். கிறிஸ்டன் ஸ்டீவர்ட்டின் மீண்டும் அதை செய்வார். இவரை ஏற்பதற்கு பதிலாக வேறு நல்லதாக ஏதேனும் ராபர்ட் (கணவர்) செய்யலாம் என கருத்து தெரிவித்திருந்தார்.

செய்தியாளர் மேகின் கெல்லி!

செய்தியாளர் மேகின் கெல்லி!

சி.என்.என் செய்தியாளர் மேகின் கெல்லியை ஒரு பேட்டியின் போது, கெல்லியின் கண்களில் மட்டுமல்ல, அவரது உடல் முழுவதிலும் இருந்து இரத்தம் வெளிவருகிறது என கொச்சையான கருத்தை பதிவு செய்திருந்தார்.

நடிகை - செய்தியாளர் அரியன்னா!

நடிகை - செய்தியாளர் அரியன்னா!

அரியன்னா ஹபிங்டன் வெளிப்புறம், உட்புறம் என எப்படி பார்த்தாலும் ஈர்ப்பின்றி இருக்கிறார். இப்போது தான் தெரிகிறது, ஏன் இவரது கணவர் இவரை பிரிந்து சென்றார் என. அவரது முடிவு சரியானது தான் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார் டொனால்ட்.

சாரா ஜெசிகா பார்கர்!

சாரா ஜெசிகா பார்கர்!

சாரா ஜெசிகா பார்கர் எனும் நடிகையை உயிருடன் இருக்கும் கவர்ச்சியற்ற (Unsexiest) பெண், இதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்ற கருத்தினை பதிவு செய்துள்ளார்.

ரோஸ்ஸி ஓ'டோனெல்!

ரோஸ்ஸி ஓ'டோனெல்!

ரோஸ்ஸி ஓ'டோனெல் ஒரு அமெரிக்க நடிகை, எழுத்தாளர் ஆவார். ரோஸ்ஸி ஓ'டோனெல் ஒரு கச்சா, முரட்டுத்தனமான, அருவருப்பான, ஊமை பற்றப்படி அவரை நான் மிகவும் விரும்புகிறேன் என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.

டயபர்!

டயபர்!

ஒருமுறை ரேடியோ பேட்டியில், "நான் டயபர் மாற்ற மாட்டேன், என்னை குழந்தைகளின் டயபர் மாற்ற கூறும் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளவும் மாட்டேன். டயபர் மாற்றுவது பெண்களின் வேலை" என கூறியிருந்தார்.

பாலியல் வன்முறை!

பாலியல் வன்முறை!

பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானால் வேறு வேலை அல்லது வேறு இடத்திற்கு செல்ல வேண்டியது தானே. என்ற அருவருக்கத்தக்க கருத்தை பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் முன் பதிவு செய்திருக்கிறார்.

பலமுறை!

பலமுறை!

இது மட்டுமின்றி தேர்தல் சமயத்தில் பல பெண் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசி, அவர்களை குறித்து கருத்து வெளியிட்டு மக்கள் மத்தியில் அவப்பெயர் பெற்றவர் டொனால்ட் ட்ரம்ப். இதை எல்லாம் கடந்து வந்து இவர் அதிபர் போட்டியில் வெற்றிப்பெற்றது வியப்பை அளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

So Many Times Donald Trumph Badly Insulted Women in His Quotes.

So Many Times Donald Trumph Badly Insulted Women in His Quotes.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter