இந்திய நடிகர், நடிகைகள் கூறிய சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சில சமயங்களில் மனம் திருந்தியோ அல்லது சில காரணங்களாலோ, காதல் வலியின் காரணத்திலோ பிரபலங்கள் தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கூறிவிடுவது இயல்பு. சிலர் இதை டிவி நிகழ்ச்சி, பேட்டிகளில் கூட பதிவு செய்திருக்கின்றனர்.

 சிலர், தாங்கள் ஈர்ப்பு கொண்டவர் மீதான தகவல்களையும், சிலர் தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், சிலர் தங்கள் முன்னாள் காதல் பற்றியும் கூறியுள்ளனர். அப்படி பிரபலங்கள் பதிவு செய்து சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரன்பீர் கபூர்!

ரன்பீர் கபூர்!

"ஆம், நான் ஒருவரை ஏமாற்றினேன்..."

கத்ரீனா கைஃப்புடன் உறவில் இருப்பதற்கு முன்னர், ரன்பீர் தீபிகா படுகோனேவுடன் உறவில் இருந்தார். கிட்டத்தட்ட இந்த ஜோடி இரண்டு வருடங்கள் காதலித்து வந்தனர். இந்த பிரிவிற்கு கத்ரீனா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. ரன்பீரும் ஒருமுறை நான் ஏமாற்றியது உண்மை என கூறியிருந்தார்.

வித்யா பாலன்!

வித்யா பாலன்!

"என் புதிய வீட்டிற்காக நான் லஞ்சம் கொடுத்தேன்..."

மும்பையில் ஒரு புது வீட்டை வாங்க தான் லஞ்சம் கொடுத்ததாக வித்யா கூறியிருந்தார். மேலும், இது போன்ற காரியத்தில் இன்னொரு முறை ஈடுபட மாட்டேன் என்றும் கூறினார்.

சோனம் கபூர்!

சோனம் கபூர்!

"எனக்கு கொழுப்பு இருக்கிறது, பிகினி உடை அணிய முடியாது."

தனக்கு செலுலைட் (Cellulite) இருக்கிறது என்னால் பிகினி அணிய முடியாது என சோனம் கூறினார். செலுலைட் என்பது கொழுப்பு காரணமாக தொடை, இடுப்பு, போன்ற இடங்களில் குழிகள் போன்று உருவாவது.

ஷாருக்கான்!

ஷாருக்கான்!

"எனக்கு நண்பர்களை எப்படி உருவாக்கி கொள்வது என தெரியாது!"

காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் ஷாரூக் தனக்கு நண்பர்களை உருவாக்கிக் கொள்ள தெரியாது. அவர்களுடன் சரியாக தொடர்பில் இருக்கவும் தெரியாது என கூறியிருந்தார்.

ஆலியா பட்!

ஆலியா பட்!

"ஹிரித்திக்கை கேன்வாஸில் கேப்ச்சர் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் ..."

பெரிய ஆர்டிஸ்ட் இல்லை எனிலும் ஹிரிதிக்கை வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார் ஆலியா. இதில் ஹிரித்திக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

சிம்பு!

சிம்பு!

"நான் ஒருவரை ஏமாற்றினேன், என்னை ஒருவர் ஏமாற்றினார்..."

சிம்பு ஒருமுறை காதலில் நான் ஒருவரை ஏமாற்றினேன், ஒருவர் என்னை ஒருமுறை ஏமாற்றினார் என கூறியிருந்தார். இந்த இரண்டு காதலும் யாருடனானது என்பது பலரும் அறிந்தது தான்.

கரீனா கபூர்!

கரீனா கபூர்!

"நான் எனது ஜீன்ஸை பெரும்பாலும் துவைக்க மாட்டேன்.."

தான் உடுத்தும் ஜீன்ஸை பெரும்பாலும் துவைக்க மாட்டேன். அப்படியே தான் மறுமுறையும் உடுத்துவேன் என கரீன கூறியிருந்தார்.

ஹிரித்திக் ரோஷன்!

ஹிரித்திக் ரோஷன்!

"உளறுவது எனது சிறுவயதில் நரகம் போன்று இருந்தது"

ஹிரித்திக் சிறுவயதில் பேசுவதில் சில கோளாறுகள் கொண்டிருந்தார். அவரால் சரியாக பேச முடியாது. உளறுவது போன்று இருக்கும். இதனால் இவரது நண்பர்கள் இவரை கேலி கிண்டல் செய்வார்கள். இதனால், காலப்போக்கில் பேசும் போது நிதானமாகவும், கவனமாகவும் பேச துவங்கினார் ஹிரித்திக்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Indian Celebrity Confessions

Shocking Indian Celebrity Confessions, read here in tamil
Please Wait while comments are loading...
Subscribe Newsletter