இந்திய நடிகர், நடிகைகளின் முக்கோண காதல் கதைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சிலரது வாழ்க்கையில் முக்கோண காதல் கதைகள் இருக்கும். ஆண் ஒருவரை காதலிக்க, அந்த பெண் வேறொருவரை காதலிக்க, பின் யார் இணைகின்றனர் என்பது கிளைமேக்ஸாக இருக்கும்.

நெருக்கமாக பழகியும் திருமணம் செய்யாமல் பிரிந்த நடிகர், நடிகைகள்!

பொது மக்கள் வாழ்வில் நடக்கும் இந்த முக்கோண காதல் கதையே சினிமா போல இருக்கிறது எனில், சினிமா பிரபலங்கள் மத்தியில் உண்மையாக நடந்த முக்கோண காதல் கதைகள் எப்படி இருக்கும்?

ஆம், கிட்டத்தட்ட 1970-80களில் துவங்கி இன்று வரை பிரபலமான இந்திய நட்சத்திரமாக திகழும் பெரும்பாலான நடிகர், நடிகைகள் இந்த முக்கோண காதல் கதையில் சிக்கியுள்ளனர்.

பிரபலங்களின் திருமணம் விவாகரத்தில் முடிய காரணங்கள் என்ன??

சிலர் இதை ஜஸ்ட் லைக் தட் என்பது போல கடந்து வந்துள்ளனர். ஒரு சில பிரபலங்களுக்கு முக்கோண காதல் கதையே ஒன்றிரண்டு இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரேகா - அமிதாப் - ஜெயா

ரேகா - அமிதாப் - ஜெயா

தோ அன்ஜானே எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அமிதாப், ரேகாவிற்கு மத்தியில் காதல் மலர்ந்ததாகவும், ஆனால், கடைசியில் அமிதாப் ஜெயாவை திருமணம் செய்துக் கொண்டார் எனதும் பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றன.

கத்ரீனா - ரன்பீர் - தீபிகா

கத்ரீனா - ரன்பீர் - தீபிகா

ரன்பீர், தீபிகா முதலில் நண்பர்களாக இணைந்து, பிறகு காதலில் விழுந்தனர். இது ஊர் அறிந்த கதை. ஆனால், தீபிகாவை லவ்விக் கொண்டிருக்கும் போதே, கல்தா கொடுத்துவிட்டு, கத்ரீனாவுடன் கைக்கோர்த்துவிட்டார் ரன்பீர்.

ஷாஹித் - கரீனா - சயிப்

ஷாஹித் - கரீனா - சயிப்

ஷாஹித் கபூர், கரீன இருவரும் "ஜப் வீ மெட்" படம் துவங்கும் போது காதலர்கள். இவர்களை தேர்வு செய்ததே இவர்களுக்கு மத்தியில் இருந்த நெருக்கமான காதலின் பெயரால் தான். ஆனால், படம் முடிவதற்குள் இவர்களது காதல் முடிந்துவிட்டது. பிறகு கரீன சயிப் அலிகானுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

ஹர்மன் பவேஜா - பிரியங்கா சோப்ரா - ஷாஹித் கபூர்

ஹர்மன் பவேஜா - பிரியங்கா சோப்ரா - ஷாஹித் கபூர்

லவ் ஸ்டோரி 2050 படத்தில் நடிக்கும் போது ஹர்மன் பவேஜா - பிரியங்கா சோப்ரா நெருக்கமாக பழகினர். ஆனால், இந்த படம் தோல்வியடைந்தது. பிறகு, இருவரம் பிரிந்தனர். பிறகு ஷாஹித்-வுடன் காமினி எனும் படத்தில் இணைந்த போது மனதளவிலும் இணைந்தனர். ஆனால், இந்த உறவும் விரைவாக முறிந்து போனது.

சுசன்னே கான் - ரித்திக் ரோஷன் - பார்பரா மோரி

சுசன்னே கான் - ரித்திக் ரோஷன் - பார்பரா மோரி

ரித்திக் தனது குழந்தை பருவ தோழியான சுசன்னே கானை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 17 வருட உறவு முறிந்தது. இதற்கு காரணம் கைட்ஸ் படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்த பார்பரா மோரி-யுடன் ரித்திக் நெருக்கம் காட்டியது தான் என கூறப்படுகிறது.

அபிஷேக் பச்சன் - கரிஷ்மா கபூர் - சஞ்சய் கபூர்

அபிஷேக் பச்சன் - கரிஷ்மா கபூர் - சஞ்சய் கபூர்

அபிஷேக் பச்சன் - கரிஷ்மா கபூர் உறவு நிச்சயம் வரை சென்று பிரிந்தது. பிறகு கரிஷ்மா சஞ்சய்யை திருமணம் செய்துக் கொண்டார், அபிஷேக் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டார்.

சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓபராய்

சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓபராய்

சல்மானும், ஐஸ்வர்யாவும் நெருக்கமான காதலில் இருந்தனர். சல்மான் தந்த அதிக நெருக்கடியின் பேரில் ஐஸ்வர்யா பிரிந்தார். பிறகு ஐஸ்வர்யா- விவேக் காதலில் மூழ்கினர். ஆனால், இவர்களது காதலும் கூட துவங்கிய வேகத்தில் முறிந்துவிட்டது.

டினோ மொரியா - பிபாஷா பாசு - ஜான் ஆபிரகாம்

டினோ மொரியா - பிபாஷா பாசு - ஜான் ஆபிரகாம்

டினோ மொரியா - பிபாஷா பாசு நீண்ட காலம் காதலித்து வந்தனர். ஆனால், இவர்கள் பிரிந்த மிக விரைவில் இவர் ஜானுடன் காதல் பயணத்தை துவங்கிவிட்டார். ஆனால், இவர்களும் பிரிந்துவிட்டனர்.

ஷில்பா ஷெட்டி - அக்ஷய் குமார் - டுவிங்கிள் கன்னா

ஷில்பா ஷெட்டி - அக்ஷய் குமார் - டுவிங்கிள் கன்னா

ஷில்பா ஷெட்டி - அக்ஷய் குமார் மெய்ன் கில்லாடி தூ அனாரி எனும் படத்தில் நடிக்கும் போது காதல் வயப்பட்டுள்ளனர். ஆனால், அக்ஷய் இவரை காதலிக்கும் போதே, இவரது தோழியான டுவிங்கிள் கன்னாவுடனும் பழகியது விரும்பாமல், ஷில்பா பிரிந்து போக, அக்ஷய் டுவிங்கிள் கன்னாவை திருமணம் செய்துக் கொண்டார்.

சல்மான் கான் - கத்ரீனா கைஃப் - ரன்பீர் கபூர்

சல்மான் கான் - கத்ரீனா கைஃப் - ரன்பீர் கபூர்

முதலில் சல்மான் கான் - கத்ரீனா கைஃப் காதலித்து வந்தனர். பிறகு, இவரை பிரிந்து ரன்பீருடன் பழக ஆரம்பித்தார் கத்ரீனா. எதிர்பாராத விதமாக இந்த உறவும் பிரிந்து போக, இப்போது, மீண்டும் சல்மானின் பாசவலையில் தஞ்சம் புகுந்துள்ளார் கத்ரீனா.

வாணி கணபதி - கமல் - சாரிகா

வாணி கணபதி - கமல் - சாரிகா

முதலில் க்ளாசிக்கல் டான்சர் வாணி கணபதியை தான் கமல் திருமணம் செய்துக் கொண்டார். 10 வருட திருமண வாழ்க்கை முறிந்த பிறகு, இவர் சரிகாவுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தார். இரு மகள்கள் பிறந்தவுடன், இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

மோனா ஷோரி - போனி கபூர் - ஸ்ரீதேவி

மோனா ஷோரி - போனி கபூர் - ஸ்ரீதேவி

மோனா ஷோரி - போனி கபூர்-க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். பிறகு போனி கபூர் - ஸ்ரீதேவி மத்தியில் நெருக்கம் அதிகரிக்க, மோனாவை விவாகரத்து செய்துவிட்டு, ஸ்ரீதேவியை திருமணம் செய்துக் கொண்டார் போனி.

பிரகாஷ் கவுர் - தர்மேந்திரா - ஹேமமாலினி

பிரகாஷ் கவுர் - தர்மேந்திரா - ஹேமமாலினி

தர்மேந்திரா ஏற்கனவே பிரகாஷ் கவுர் என்பவருடன் திருமணம் செய்து குழந்தை பெற்றவர். ஆனால், தும் ஹசீன் மெய்ன் ஜவான் எனும் படத்தில் நடிக்கும் போது ஹேமா மாலினியுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். முதலில் மறுத்த ஹேமா, கடைசியில் காதலுக்கு ஒப்புதல் வழங்கினார். பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real Life Triangle Love Stories Of Indian Celebrities

Real Life Triangle Love Stories Of Indian Celebrities, take a look on here.
Subscribe Newsletter