இந்தியாவின் கோர சம்பவங்களின் சாட்சியாக திகழும் 5 சக்தி வாய்ந்த புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஊடகவியலில் ஒரு சொற்றொடர் அவ்வப்போது பயன்படுத்தப்படும். "ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்". ஆம் எழுத்துகள் கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வை அளிக்கும். ஆனால், புகைப்படம் அனைவருக்கும் பாரபட்சம் பாராது ஒரே உணர்வை, அழுத்தமாக அளிக்கும்.

புகைப்படம் என்பது ஒரு நினைவின் தேக்கம். பார்க்கும் போதெல்லாம் உணர்சிகளை ஊற்றெடுக்க வைக்கும் தன்மை கொண்டவை புகைப்படங்கள். அந்த வகையில் இந்தியாவில் நடந்த கோர சம்பவங்களை இன்றளவும் அழுத்தமாக பதியவைக்கும் ஐந்து சக்தி வாய்ந்த புகைப்படங்கள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒடிசா மனிதர்!

ஒடிசா மனிதர்!

கடந்த ஆகஸ்ட் மாதன், பணம் இல்லாத ஒரே காரணத்தால் 10 கிலோமீட்டர் இறந்த மனைவியின் சடலத்தை தனது தோளில் சுமந்து சென்ற ஒடிசா மனிதர்!

குஜராத் கலவரம்!

குஜராத் கலவரம்!

2002-ல் நடந்த குஜராத் கலவரத்தில் தாக்கப்பட்டவர். இரத்த கரையுடன், அழுத விழிகளுடன் காட்சியளிக்கும் இவர் பெயர் அன்சாரி.

இவரது புகைப்படம் ஊடகத்தை, உலகத்தை ஒட்டுமொத்தமாக திருப்பி பார்க்க வைத்தது. இவரது படம் தான் குஜாராத் கலவரத்தின் அட்டைப்படமாக இருந்தது.

போபால் விஷவாயு தாக்கம்!

போபால் விஷவாயு தாக்கம்!

ஏறத்தாழ முப்பது வருடங்கள் ஓடிவிட்டன. 1984 -ல் நடந்த இந்த போபாப் விஷவாயு தாக்கம் உலகையே உலுக்கியது.

30 மெட்ரிக் டன் விஷவாயு கசிந்து 2,500 உயிர்களை பலிவாங்கியது, 5 லட்சத்திற்கும் மேலான மக்களை பாதிப்படைய வைத்தது. இன்றளவும் இதன் தாக்கம் மரபணு வாயிலாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ரயில் விபத்து!

ரயில் விபத்து!

இந்தியாவில் ரயில் விபத்தில் யானைகள் இறப்பது வருடாவருடம் நடக்கும் சம்பவமாக ஆகிவிட்டது. ஆனால், இந்த யானை கிட்டத்தட்ட 200 மீட்டர் வர இழுத்து செல்லப்பட்டது தான் கொடூரத்தின் உச்சம்.

இந்தியா - பாக் பிரிவு!

இந்தியா - பாக் பிரிவு!

சுதந்திரம் பெற்று இந்தியா - பாகிஸ்தான் பிரிந்த போது, தங்கள் உடமைகள், உறவுகள், போன்றவற்றை இழந்த கொடுமையான சூழலில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் கொத்து கொத்தாக கனத்த மனமுடன் பிரியாவிடை பெற்று சென்ற தருணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: india, pulse, இந்தியா
English summary

Powerful But Shocking Photographs That Came To Define Tragedies In India

Powerful But Shocking Photographs That Came To Define Tragedies In India
Story first published: Saturday, September 17, 2016, 15:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter