ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ஸ்டெம்பை எடுத்து செல்வது ஏன்? தோணி கூறும் காரணம்!

Posted By:
Subscribe to Boldsky

தோணியின் வருகைக்கு பிறகு கிரிக்கெட்டில் பல மாற்றங்களை ரசிகர்கள் கண்கூட கண்டுள்ளனர். ஃபீல்டிங் அமைப்பு, பந்துவீச்சாளர் தேர்வு, கேப்டன்ஸி என தோணி பல புதுமைகளை கிரிக்கெட்டில் புகுத்தினார் என்பது மிகையல்ல. ஆனால், இந்த மனிதரிடம் விசித்திரமாக காணப்பட்டது ஸ்டெம்ப் கலக்ட் செய்வது.

தல தோணி, தல அஜித் இடையேயான வியக்க வைக்கும் ஒற்றுமைகள்!

முன்பு உலக கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் வெல்லும் போது கிரீசில் இருக்கும் வீரர்கள் ஸ்டெம்ப் எடுத்து செல்வார்கள் அதுவும், மிக அரிதாக. ஆனால், தல தோணி தான் வெல்லும் அனைத்துப் போட்டிகளின் போதும் ஸ்டம்ப்பை பிடிங்கிக் கொண்டுதான் நடையைக் கட்டுவார். அது ஏன்? எதற்காக என்பதற்கான் விடை இப்போது கிடைத்துவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
10 வருட புதிர்

10 வருட புதிர்

கடந்த பத்து வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுவொரு புதிராக தான் இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் போட்டியில் வெல்லும் போதும் பேட்டிங் செய்து கொண்டிருந்தாலும் சரி, கீப்பிங் செய்துக் கொண்டிருந்தாலும் சரி, தோணி ஸ்டம்ப்பை பிடிங்கிக் கொண்டு தான் நடையைக் கட்டுவார்.

ஜோதிட ஆராய்ச்சிகள்

ஜோதிட ஆராய்ச்சிகள்

இதுவொரு வேளை தோணி ஜோதிட ராசி பலாபலன்களின் மூலம் கொண்டுள்ள விசித்திர குணாதிசயமோ என்று கூட சில கிண்டலாக கூறுவதுண்டு. ஆனால், இதன் பின்னணியில் தல தோணி ஓர் காரணமும் வைத்திருக்கிறார் என்பது தான் இப்போது வெளிவந்துள்ள சுவாரஸ்ய தகவல்.

எந்த குறிகளும் இல்லை

எந்த குறிகளும் இல்லை

இதுவரை தோணி சேர்த்து வைத்திருக்கும் எந்த ஸ்டெம்ப்பிலும் அது எந்த போட்டியில் வென்றது, எங்கு விளையாடியது என எந்த குறியும் குறித்து வைக்கப்படவில்லையாம். எந்த ஸ்டெம்ப் எப்போது, எந்த வருடம் எடுத்தது என கூட தோணிக்கு தெரியாதாம்.

மாஸ்டர் ப்ளான்

மாஸ்டர் ப்ளான்

உண்மையில் தோணி ஓய்வு பெற்ற பிறகு டிவி-யில் போட்டிகளை காணும் போது எந்த ஸ்டெம்ப் எந்த போட்டியில் எடுக்கப்பட்டது என கண்டரிந்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு வைத்திருக்கிறாராம். இது தான் தலயின் மாஸ்டர் ப்ளானாம்.

விசித்திரமான தல

விசித்திரமான தல

தோணியிடம் ஃபீல்டிங் செட் செய்வதில் இருந்து, பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்வது வரை பல விசித்திர முடிவுகள் எடுத்து பார்த்திருக்கிறோம். ஆனால், ஸ்டெம்ப் கலக்ட் செய்வதில் கூட இப்படி விசித்திரமான காரணம் வைத்திருப்பார் என யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கேலி, கிண்டல்

கேலி, கிண்டல்

சிலர் தோணி ஸ்டெம்ப் எடுத்துக் கொண்டு போவது அவரது வீட்டிற்கு தடுப்பு அமைப்பதற்காக இருக்கும் என ஆன்லைன் ப்ளாக்குகளில் கேலி கிண்டல் கூட செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுப்பு

மறுப்பு

ஒரு முறை தோணி ஸ்டெம்ப் எடுத்து செல்லும் போது கேமரா வைக்கப்பட்டிருந்த ஸ்டெம்பை உருவி எடுத்தால் அதை மைதான அலுவலர்கள் தடுத்தனர். பிறகு தோணி வேறொரு ஸ்டெம்பை எடுத்து சென்றார். இதுப் போன்று தோணியின் ஸ்டெம்ப் கலக்ஷன்-ல் பல சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mahendra Singh Dhoni Reveals The Real Reason For Collecting Stumps After Every Victory

Mahendra Singh Dhoni Reveals The Real Reason For Collecting Stumps After Every Victory, Read here in tamil.
Subscribe Newsletter