திருமணத்திற்கு பின் சினிமாவிற்கு 'பை-பை' சொன்ன நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சினிமா துறையில் நடிகைகளுக்கு திருமணம் என்ற ஒன்று நடந்த பின்னர், அவர்களை மீண்டும் திரையில் காண்பது என்பது மிகவும் அரிது. வெகுசிலரே திருமணம் முடிந்த பின்னர் மீண்டும் நடிக்கிறார்கள்.

தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

ஆனால் பல நடிகைகள் திருமணம் முடிந்த பின்னர், குடும்பம், குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கி, தம் நடிக்கும் தொழிலுக்கு 'பை-பை' சொல்லிவிடுகிறார்கள்.

திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!!

குறிப்பாக அப்படி திரையுலகை விட்டு சென்ற பல நடிகைகளும், பலரது மனதைக் கவர்ந்த கன்னிகள். இங்கு அப்படி திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை விட்ட பிரபல நடிகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நிறைய திருமணங்கள் செய்து கொண்ட மிகவும் பிரபலமான தமிழ் நடிகர், நடிகைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோனாலி பிந்த்ரே

சோனாலி பிந்த்ரே

நடிகை சோனாலி பிந்ந்தே பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இவர் திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். ஆனால் திருமணத்திற்கு பின் 2 படங்களில், அதுவும் சிறப்புத் தோற்றங்களில் வந்தார்.

சாய்ரா பானு

சாய்ரா பானு

பழங்கால நடிகை சாய்ரா பானு மிகவும் பிரபலமானர். இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான திலிப் குமாரை திருமணம் செய்த பின் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார்.

பாக்யஸ்ரீ

பாக்யஸ்ரீ

க்யூட் நடிகையான பாக்யஸ்ரீ 'Maine Pyaar Kiya' என்னும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு திருமணம் செய்தார். பின் திரையுலகிற்கு பை-பை சொல்லிவிட்டார்.

பபிதா

பபிதா

பழங்கால நடிகை பபிதா ரன்தீர் கபூரை திருமணம் செய்த பின், பாலிவுட்டிற்கு பை-பை சொல்லி கிளம்பிவிட்டார். இதற்கு காரணம், திருமணத்திறகு பின் திரையுலகில் நடிப்பதை கபூர் குடும்பத்தினர் விரும்பாதது தான்.

நம்ரதா ஷிரோத்கர்

நம்ரதா ஷிரோத்கர்

இந்தி நடிகை நம்ரதா ஷிரோத்கர் யார் என்று தெரியுமா? தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் குவிக்கும் மகேஷ் பாபுவின் மனைவி தான் இவர். இவரும் திருமணத்திற்கு பின் நடிப்பதை விட்டுவிட்டார்.

காயத்ரி ஜோஷி

காயத்ரி ஜோஷி

மனம் கவர்ந்த அழகிகள் பட்டியலில் இருந்த நடிகை காயத்ரி ஜோஷி, விகாஷ் ஓபராயை 2005 இல் திருமணம் செய்து கொண்ட பின், வெள்ளித்திரையில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

டிவிங்கிள் கன்னா

டிவிங்கிள் கன்னா

டிவிங்கிள் பாலிவுட்டில் அவ்வளவாக வெற்றிப் படங்களைக் கொடுக்காவிட்டாலும், இவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார்.

மந்தாகினி

மந்தாகினி

இந்தி நடிகை மந்தாகினி ராம் தேரி கங்கா மைலி என்னும் ராஜ்கபூரின் திரைப்படத்தில் கவர்ச்சிக் காட்டி மிகவும் புகழ்பெற்றவராவார். இவரும் திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதைத் விட்டுவிட்டார்.

நஸ்ரியா

நஸ்ரியா

குறுகிய நாட்களிலேயே பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகை நஸ்ரியா மலையாள ரொமான்டிக் ஹீரோவான ஃபகத் பாசிலை திருமணம் செய்த பின், திரையுலகை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

'காதல்' சந்தியா

'காதல்' சந்தியா

'காதல்' திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகி சந்தியா பல ஹிட் படங்களைக் கொடுக்காவிட்டாலும், திருமணத்திற்குப் பின் திரையுலகிற்கு பை-பை சொல்லிவிட்டார்.

அசின்

அசின்

கேரளாவில் பிறந்து, தமிழ்நாட்டில் நடிப்பைக் கற்றுக் கொண்டு, பாலிவுட் சென்ற நடிகை அசிட் பிரபல தொழிலதிபரை மணந்து, சினிமாவை கைவிட்டு, வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.

ஷாலினி

ஷாலினி

நடிகை ஷாலினியும் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் மற்றும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர். இவர் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின், திரையுலகை விட்டு சென்றுவிட்டார்.

பார்வதி

பார்வதி

மலையாள நடிகர் ஜெய்ராம் அவர்களின் மனைவியான அஸ்வதி, ஆரம்ப காலத்தில் ஓர் நடிகை. இவர் திரையுலகில் இருந்த போது பார்வதி என்று தன் பெயரை வைத்திருந்தார். பின் நடிகர் ஜெய்ராம்மை காதலித்து திருமணம் செய்த பின், திரையுலகை விட்டு வெளிவந்துவிட்டார்.

சரண்யா மோகன்

சரண்யா மோகன்

திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், தன் க்யூட்டான நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் சரண்யா மோகன். இவரும் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார்.

முக்தா

முக்தா

தமிழில் தாமிரபரணி படத்தில் நடித்த நடிகை முக்தா அவர்களும், திருமணம் செய்து கொண்ட பின் திரையுலகை விட்டு சென்றுவிட்டார்.

ஜோதிகா

ஜோதிகா

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஜோதிகாவும் திருமணத்திற்கு பின் நடிப்பதை விட்டிருந்தார். ஆனால் பல வருடங்களுக்கு பின் பெண்களுக்கான ஓர் திரைப்படத்தில் மீண்டும் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Actresses Who Quit Acting After Marriage

Here are some indian actresses who quit acting after marriage. Read on to know more...