மாலையில் செய்யும் இந்த செயல்கள் வீட்டில் இருந்து செல்வத்தை விலக செய்யும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

யாருக்கு தான் தன்னிடம் செல்வம் மற்றும் பணம் அபரிமிதமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்காது. நிச்சயம் ஒவ்வொருவருக்கும் இந்த ஆசை இருக்கும். அதற்காக நாள் முழுவதும் கடினமாக வேலை செய்து, பணத்தை சம்பாதிக்கிறோம். பணத்தை சம்பாதிப்பது மட்டும் கஷ்டமல்ல, அதை தன்னிடம் தக்க வைத்துக் கொள்வதும் கடினமானது தான்.

இந்து மதத்தின் படி, லட்சுமி தேவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டால், அவரிடம் செல்வம் எப்போதும் நீடித்து இருக்கும். ஒருவரிடம் செல்வம் நீடித்து நிலைக்க, இந்து புராண சாஸ்திரம், செல்வத்திற்கு உகந்த கடவுளான லட்சுமி தேவியை குளிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள பரிந்துரைக்கிறது.

ஆனால், நம்மில் பலர் நம்மை அறியாமல் செய்யும் சில செயல்களால் லட்சுமி தேவியின் கோபத்திற்குள்ளாகி, வறுமையால் வாட நேரிடுகிறது. இங்கு லட்சுமி தேவியின் கோபத்தைத் தூண்டும்படி மாலையில் நாம் செய்யும் செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, இனிமேல் அதை பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசியைத் தொழுவது

துளசியைத் தொழுவது

இந்து சாஸ்திரத்தின் படி, சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசியை தொழுவது அல்லது தொடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால் அந்த வீட்டில் துரதிர்ஷ்டம் வருவதோடு, வறுமை நீங்காமல் இருக்கும்.

அதுவே துளசியை அதிகாலையில் நீர் ஊற்றி, நெய் விளக்கேற்றி தொழுது வந்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி, லட்சுமி தேவி குளிர்ச்சியடைந்து, செல்வத்தை ஈர்க்கச் செய்வாள்.

வீட்டைப் பெருக்குவது

வீட்டைப் பெருக்குவது

சூரிய அஸ்தமனத்திற்கு பின், வீட்டைப் பெருக்குவது என்பது கெட்ட சகுணமாக கருதப்படுகிறது. சாஸ்திரத்தின் படி, இப்படி வீட்டைப் பெருக்கினால் வீட்டில் உள்ள அனைத்து சந்தோஷம் மற்றும் அதிர்ஷ்டத்தை வெளியேற்றுவதற்கு சமமாகும்.

உடலுறவு

உடலுறவு

மாலை வேளையில் உடலுறவு கொள்வது நல்லதல்ல என சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில், இந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபட்டால், அது துரதிர்ஷ்டத்தை ஈர்க்குமாம்.

தூங்குவது

தூங்குவது

சூரிய அஸ்தமனத்திற்கு பின் தூங்கினால், துரதிர்ஷ்டம் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படும். அதுமட்டுமின்றி, இந்நேரத்தில் தூங்கினால், உடல் பருமன் மற்றும் இதர உடல்நல கோளாறுகளால் அவஸ்தைப்படக்கூடும்.

பாத்திரங்களை கழுவுவது

பாத்திரங்களை கழுவுவது

உணவு உட்கொண்ட பின்னர், பாத்திரங்களை அப்போதே சுத்தம் செய்யாவிட்டால், அதனால் சனி மற்றும் சந்திரனின் கெட்ட செல்வாக்கை பெற நேரிடும். உணவு உண்ட உடனேயே பாத்திரத்தை சுத்தம் செய்தால், லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பை அளிப்பார்.

படிப்பது

படிப்பது

நிச்சயம் இது உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும். மாலையில் சூரிய அஸ்தனத்தின் போது படிப்பது, லட்சுமி தேவியின் கோபத்தை தான் ஈர்க்கும். ஆகவே மாலையில் ஒரே இடத்தில் அமர்த்து படிப்பதை விட்டு, விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

அசுத்தமான சுற்றுச்சூழல்

அசுத்தமான சுற்றுச்சூழல்

வீடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதியை அசுத்தமாக வைத்துக் கொண்டால், அது லட்சுமி தேவியை கோபப்படுத்துவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Doing These Things In Evening Can Invite The Wrath Of Goddess Lakshmi

Do you know your small habits can change your luck and financial status instantly? Want to know about the small habits that could be bringing bad luck to you? Read on…
Subscribe Newsletter