தன் தாயின் தலையை பரசுராமன் ஏன் வெட்டினான் என தெரியுமா?

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் தான் பரசுராமன். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியவர் தான் இவர். இந்த அவதாரத்தில் பரசுராமன் தன் தாய் மற்றும் தந்தையிடம் மிகவும் அன்பு கொண்டவராக இருப்பார்.

இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

அத்தகைய பரசுராமன் தன் தாயின் தலையை ஏன் வெட்டினான் - நிஜ வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட பல கதாபாத்திரங்களைப் பற்றிய சுவாரஸ்யமான பல கதைகளை கொண்டுள்ளது இந்து புராணம்.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரேணுகாவும்.. மண் சட்டியும்..

ரேணுகாவும்.. மண் சட்டியும்..

ஜமதக்னி துறவி மற்றும் ரேணுகாவின் மகன் தான் பரசுராமன். கற்பு மற்றும் கணவன் மீதான பக்தி பெயர் பெற்றவள் தான் ரேணுகா. இந்த நம்பிக்கையின் பெயரால் அவளால் வேகாத மண்ணில் செய்யப்பட்ட பானையை கொண்டு ஆற்றில் தண்ணீர் சுமக்க முடிந்தது. தன் பக்தியின் வலிமை காரணமாகவே அவளால் இந்த பானையை தூக்க முடிந்தது.

ஒரு துரதிஷ்டவசமான நாளன்று

ஒரு துரதிஷ்டவசமான நாளன்று

ஒரு நாள் அவள் ஆற்றில் இருக்கும் போது, கந்தர்வர்கள் தங்கள் தேரில் வானில் கடந்து சென்றார்கள். அதை கண்டு ஒரு நொடிப்பொழுதிற்கு அவள் கொண்ட ஆசையினால் அவள் வைத்திருந்த பானை ஆற்றில் கரைந்தது. தன் கணவனிடம் மீண்டும் திரும்பிச் செல்ல பயந்த அவள், என்ன செய்வதென தெரியாமல் நதிக்கரையிலே காத்திருந்தாள். அதே நேரத்தில் தன் மனைவி இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்த ஜமதக்னி துறவி தன் யோக சக்திகளை கொண்டு நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்டார். அதனால் கடும் கோபத்திற்கு ஆளானார்.

கொலை செய்வதற்கு கட்டளையிட்டார் ஜமதக்னி துறவி

கொலை செய்வதற்கு கட்டளையிட்டார் ஜமதக்னி துறவி

தன் மூத்த மகனை அழைத்த ரிஷி அவனிடம் ஒரு கோடாலியை கொடுத்து தன் தாயை கொலை செய்ய சொன்னார். இதை கேட்டு அதிர்ந்து போன அவன் முதலில் மறுத்தான். அதனால் அவனை கல்லாக மாற்றினார் ஜமதக்னி துறவி. பின் தன் ஒவ்வொரு மகன்களிடமும் இதே கட்டளையை பிறப்பித்தார். அனைவரும் மறுத்ததால் அனைவரையும் கல்லாக மாற்றினார். கடைசியாக அவருடைய கடைசி மகனான பரசுராமன் மட்டுமே மீதமிருந்தான். தந்தை சொல்லுக்கு கீழ்படிந்து நடக்கும் அவன் தன் தாயின் தலையை வெட்டினான்.

இரண்டு வரங்களை கொண்ட கதை

இரண்டு வரங்களை கொண்ட கதை

இதை கண்டு மனம் குளிர்ந்த ஜமதக்னி பரசுராமனுக்கு இரண்டு வரங்களை அளித்தார். தன் தாய் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்றும், கல்லாய் மாறிய தன் சகோதரர்களும் அனைவரும் உயிர் பெற வேண்டும் என்றும் அவன் கோரினான். அவன் கொண்டிருந்த பாசம் மற்றும் பக்தியின் மீது ஈர்க்கப்பட்ட அவர், அவனின் கோரிக்கைகளை நிறைவேற்றினார்.

எல்லம்மா தேவியின் புராணம்

எல்லம்மா தேவியின் புராணம்

இந்தியாவின் தென் பகுதிகளில் புகழ்பெற்ற கடவுளாக விளங்குபவர் எல்லம்மா தேவி. ஏழை எளிய மக்களுக்கான கடவுள் அவர். எல்லம்மா தோன்றிய கதை தனித்துவம் பெற்றதாகும். இக்கதைக்கும் பரசுராமனின் தாயான ரேணுகா தேவிக்கும் கூட தொடர்பு உள்ளது. பரசுராமன் தன் தாயை கொல்ல கோடாலியை உயர்த்திய போது, தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஏழையான ஒரு கீழ் ஜாதி பெண்ணின் வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்தார்.

இறைத்தன்மையுள்ள கலவை

இறைத்தன்மையுள்ள கலவை

தன் தாயை தொடர்ந்து சென்ற பரசுராமன், அவரின் தலையை துண்டிக்கும் போது, அதை தடுக்க முன் வந்த அந்த ஏழை கீழ் ஜாதி பெண்ணின் தலையை தவறுதலாக துண்டித்தான். தன் தாயை உயிருடன் கொண்டு வரலாம் என ஜமதக்னி வரம் அளித்த போது, ஏழை கீழ் ஜாதி பெண்ணின் தலையை தன் தாயின் உடலுடன் தவறுதலாக பொருத்திவிட்டான். ரேணுகா தேவியின் தலையை அது முதல் எல்லம்மா தேவி என வழிப்பட தொடங்கி விட்டார்கள். அதனால் இந்த கடவுளை ரேணுகா எல்லம்மா எனவும் அழைக்கின்றனர்.

காமதேனுவின் வரலாறு

காமதேனுவின் வரலாறு

இந்த நிகழ்வுக்கு பிறகு, ஒரு முறை ஹைஹயாவை சேர்ந்த கர்டவிர்யா மன்னன் ஜமதக்னி துறவி வாழ்விடத்திற்கு வந்தார். பரசுராமன் காட்டில் இருந்த போது நடந்தது அவரின் இந்த வருகை. பெரும் படையுடன் அரசர் வந்திருந்த போதிலும் கூட மன்னருக்கு மிகப்பெரிய விருந்தை அளித்தார் சப்தரிஷி. எது எப்படி சாத்தியமாயிற்று என அவரிடம் அரசர் கேட்ட போது, ஜமதக்னி துறவிக்கு இந்திர தேவன் அளித்த அருளப்பட்ட காமதேனு பசுவை அவர் காண்பித்தார். அது நாம் கேட்கும் வரங்களை அளிக்கும் என்றும் கூறினார். பேராசை கொண்ட அந்த அரசன் அந்த பசுவை அபகரிக்க நினைத்தான்.

புனிதமான அந்த பசுவை கர்டவிர்யா திருடினான்

புனிதமான அந்த பசுவை கர்டவிர்யா திருடினான்

வீட்டிற்கு திரும்பிய பரசுராமன் இதை அறிந்தவுடன் கடும் கோபம் கொண்டு, அரண்மனைக்கு விரைந்தான். தன் கோடாலியை கொண்டு கர்டவிர்யா அரசனை கொன்றான் பரசுராமன். பின் காமதேனு பசுவையும் மீட்டான். வீட்டிற்கு திரும்பிய அவனை கண்டு அவன் தந்தை மனம் குளிர்ந்தார். ஆனால் இரத்தம் சொட்டும் அவனின் கோடாலியை கண்ட போது கவலை கொண்டார். கோபம் மற்றும் அகங்காரத்தைப் பற்றி அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என எச்சரித்தார். தன் தந்தையின் கண்டனத்தை ஏற்றுக் கொண்ட பரசுராமன் தவத்தில் ஈடுபட்டு, தூய்மை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் புனித பயணத்தை மேற்கொண்டான்.

கர்டவிர்யாவின் மகன்கள்

கர்டவிர்யாவின் மகன்கள்

அதே நேரத்தில் கர்டவிர்யாவின் மகன்கள் தங்கள் தந்தை அரண்மனையில் இறந்து கிடப்பதை தெரிந்து கொண்டனர். அவரை பரசுராமனால் மட்டுமே கொன்றிருக்க முடியும் என யூகிக்கவும் செய்தனர். இதற்கு பழி தீர்க்கும் விதமாக, துறவி இருந்த இடத்திற்கு பயணப்பட்ட அவர்கள் ஜமதக்னி துறவியை சூழ்ந்து கொண்டு, மானை வேட்டையாடுவதை போல், தங்களின் அம்புகளை எய்தி அவரை கொன்றனர். வீட்டிற்கு திரும்பிய பரசுராமன் தன் தந்தையின் இறந்த உடல் அருகில் கிடந்த தன் தாயை கண்டான். ஒரு பைத்தியத்தை போல் தன் மார் மீது 21 முறை அடித்துக் கொண்டு அவள் அழுது கொண்டிருந்தாள்.

க்ஷத்ரியாக்களை 21 முறை கொலை செய்தான்

க்ஷத்ரியாக்களை 21 முறை கொலை செய்தான்

வெகுண்டெழுந்த அவன் அரண்மனையில் கர்டவிர்யாவின் மகன்களை வேட்டையாட தொடங்கினான். அவர்கள் அனைவரையும் கொன்ற அவன், ஈம காரியங்களை செய்ய தன் தந்தையின் தலையுடன் திரும்பினான். தன் தாய் 21 முறை தன் மார்பில் அடித்துக் கொண்டதற்கு இணங்க, ஷத்ரிய வம்சத்தை 21 முறை இனப்படுகொலை செய்யப்போவதாக சத்தியம் செய்தான்.

ஷத்ரியர்களுக்கு எதிரான பழிக்குப் பழி

ஷத்ரியர்களுக்கு எதிரான பழிக்குப் பழி

பின் பூமியை சுற்றி வந்த பரசுராமன், நல்லவர்களோ கெட்டவர்களோ, கண்ணில் பட்ட அனைத்து ஷத்ரியர்களையும் கொன்று வந்தான். முதல் மகாபாரத புத்தகம் இப்படி கூறுகிறது: த்ரேட்டா மட்டும் ட்வபரா யுகங்களின் இடைவேளையில், பொறுமையின்மையால் தொடர்ச்சியாக உன்னத குலமான ஷத்ரியர்களை பரசுராமன் கொன்று வந்தான். தன் கோபத்தால் ஒட்டுமொத்த ஷத்ரிய குலத்தையே அழித்த பிறகு, இரத்தம் நிறைந்த சமந்த-பஞ்சக என்ற 5 ஏரிகளை உருவாக்கினான். - மகாபாரதம் 1:2.

பரசுராமன் பற்றிய புராண கதைகள்

பரசுராமன் பற்றிய புராண கதைகள்

பல்வேறு புராணங்களில் பரசுராமனைப் பற்றி பல விதமான கதைகள் உள்ளது. அதில் வெவ்வேறு இந்து கடவுள்களுடன் அவன் நடத்திய உரையாடல்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அவன் சிரஞ்சீவியாக இருப்பதால், பல்வேறு யுகங்களில் அவன் நடத்திய உரையாடல்கள் பற்றி கூட விவரிக்கப்பட்டுள்ளது

ஏகடண்டா

ஏகடண்டா

புராணங்களின் படி, தன் குருவான சிவபெருமானுக்கு மரியாதை செலுத்த பரசுராமன் இமயமலைக்கு பயணித்தான். அப்படி பயணிக்கையில், விநாயகர் அவன் பாதைக்கு தடங்கலாக இருந்தார். யானை முகத்தோன் மீது தன் கோடாலியை எறிந்தான் பரசுராமன். பரசுராமனுக்கு தன் தந்தையால் அளிக்கப்பட்ட கோடாலி என்பதை அறிந்த விநாயகர், தன் இடது தும்பிக்கையை வெட்ட அனுமதித்தார் விநாயகர். இதை பார்த்து கடும் கோபம் கொண்ட பார்வதி தேவி, பரசுராமனின் கைகளை வெட்டி எறிவேன் என கூறினார்.

பரசுராமனுக்காக மன்னிப்பு

பரசுராமனுக்காக மன்னிப்பு

துர்கையம்மனின் அவதாரம் எடுத்த அவர், சர்வ வல்லமை படைத்தவராக மாறினார். ஆனால் கடைசி தருணத்தில், அவனை தங்கள் மகனின் அவதாரமாக காட்டிய சிவபெருமான், பார்வதி தேவியை சமாதானப்படுத்தினார். பரசுராமனும் மன்னிப்பு கோரினான். போர்வீரனாக விளங்கும் இந்த துறவிக்காக விநாயகர் ஆதரவாக பேசியதும் பார்வதி தேவி மனம் மாறினார். பின் தன் புனிதமான கோடாலியை விநாயகரிடம் கொடுத்த பரசுராமன், அவருக்கு ஆசி வழங்கினான். இந்த நிகழ்வால் விநாயகருக்கு ஏகடண்டா என்ற பெயரும் கிடைத்தது. அதற்கு "ஒற்றை பல்" என பொருள் தரும்.

அரபிக் கடலை எதிர்த்து போராட்டம்

அரபிக் கடலை எதிர்த்து போராட்டம்

கொந்தளிப்பான அலைகள் மற்றும் புயலால் இந்தியாவின் மேற்கு கரைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டது என புராணங்கள் கூறுகிறது. அதனால் கடலால் நிலப்பகுதிகள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முன்னேறிய நீருடன் போரிட்ட பரசுராமன், கொண்கன் மற்றும் மலபார் நிலங்களை விட்டு செல்லுமாறு வருணா தேவியிடம் கேட்டான். அந்த சண்டையின் போது தன் கோடாலியை கடலில் வீசியெறிந்தான் அவன். அப்போது அப்பெரிய நிலப்பகுதி மேலே வந்தது. ஆனால் அதில் உப்பு கலந்துள்ளதால் அந்த நிலம் தரிசு நிலமாக தான் இருக்கும் என வருணா தேவி கூறினார்.

தற்போதைய கேரளாவை அவன் உருவாக்கினான்

தற்போதைய கேரளாவை அவன் உருவாக்கினான்

பாம்புகளின் அரசனான நாகராஜாவை நினைத்து தபஸ் தவத்தில் ஈடுபட்டான் பரசுராமன். அந்த நிலம் முழுவதும் பாம்புகளை பரவ விடும் படி கோரினான். இதனால் அவைகளின் விஷம் உப்பு நிறைந்த நிலத்தை நடுநிலையான நிலைக்கு மாற்றும் என எண்ணினான். அதற்கு ஒப்புக்கொண்ட நாகராஜா அதை நிறைவேற்றினார். அந்த பூமி பசுமையான மற்றும் வளமான ஒன்றாக மாறியது. பின் இந்த கரையை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் மற்றும் அரபிக்கடலின் நடுவில் வைத்து, தற்போதைய கேரளாவை உருவாக்கினான் பரசுராமன்.

பரசுராமனும் சூரியனும்

பரசுராமனும் சூரியனும்

அளவுக்கு அதிகமான வெப்பத்தை உண்டாக்கியதால் சூரியக் கடவுள் மீது ஒரு முறை கோபம் கொண்டான் பரசுராமன். போர் வீரராக விளங்கும் இந்த துறவி விண்ணை நோக்கி பல அம்புகளை எய்தி சூரியனை அச்சுறுத்தினான். பரசுராமனிடம் அம்புகள் தீர்ந்து போன போது, இன்னும் கொஞ்சம் எடுத்து வர தன் மனைவி தரணியை அனுப்பி வைத்தான். அப்போது தன் கதிர்களை அவள் மீது படரச் செய்தான் சூரியன். இதனால் அவள் நிலை குலைந்து போனால். அதன் பின் பரசுராமன் முன்பு தோன்றிய சூரிய இரண்டு புதிய கண்டுபிடிப்புகளை அளித்தான். அது தான் குடையும் செருப்பும்.

தட்டத்ரேயா அவனுக்கு மோக்ஷம் அளித்தார்

தட்டத்ரேயா அவனுக்கு மோக்ஷம் அளித்தார்

தன் பழியை தீர்த்த பிறகு, ஆன்மீக வழிகாட்டலைப் பெற, தட்டத்ரேயாவை தேடி காந்தமதனா மலையின் உச்சிக்கு சென்றான் பரசுராமன். அவர்களின் உரையாடல் திரிபுர-ரகசியத்தை உண்டாக்கியது. அத்வைத்த வேதாந்தம் பற்றிய கட்டுரையாக இது விளங்கியது. இங்கே தான் போர் வீரரான இந்த துறவிக்கு சமயத்திருநூல் பற்றிய ஞானம், உலகளாவிய நடவடிக்கைகளை துறந்து செல்லுதல் போன்றவற்றைப் பற்றி அறிவுறுத்தினார். இதனால் இறப்பு மற்றும் மறு பிறப்பு கர்மா சுழற்சியில் இருந்து விடுதலை பெற்றார்.

சந்நியாசியும்.. அவருடைய முடிவு நேரமும்..

சந்நியாசியும்.. அவருடைய முடிவு நேரமும்..

வேத காலம் முடியும் வேளையில், இரத்தம் சிந்துவதை பார்த்து வெறுத்துப் போன பரசுராமன் சந்நியாசியாக மாறினான். தன் உடைமைகளை துறந்து, தியானத்தில் ஈடுபட தொடங்கினான். முதல் மகாபாரத புத்தகம் இப்படி கூறுகிறது: இந்த உலகத்தில் உள்ள ஷத்ரியர்களை 21 முறை கொலை செய்த பின், ஜமதக்னி துறவியின் மகன் தன்னால் முடிந்த சிறந்த செயலை மகேந்திர மலைகளில் செய்ய தீர்மானித்து, தன் சந்நியாசம் சார்ந்த தியானத்தை தொடங்கினான். - மகாபாரதம் 1:14.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Did Parshurama Cut His Mother’s Head?

Why did Parshurama cut his mother's head - Hindu mythology is filled with interesting stories about characters that are larger than life.