For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலத்தை கடந்து கிரிக்கெட் உலகில் அழியாத தடம் பதித்த 'டாப் 25' சாதனை வீரர்கள்!!!

|

18ஆம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டு வரும் விளையாட்டு கிரிக்கெட். நமது ஊர்களில் விளையாடிய கில்லியின் தழுவல் என்று கூட கூறலாம். ஏறத்தாழ மூன்றாவது நூற்றாண்டை கடந்து விளையாடப்பட்டு வரும் இந்த விளையாட்டை உலகெங்கிலும் இருந்து ஆயிரம், ஆயிரம் வீரர்கள் விளையாடியிருந்தாலும்.ஒருசிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் தங்களது அபார விளையாட்டு திறனால் நீங்கா இடம் பிடித்தனர்.

கிரிக்கெட் கடவுளின் சொர்க்க வாசல், சச்சினின் டெண்டுல்கரின் வியக்கதகு ஆடம்பரமான வீடு!!

அதிலும் டான் பிராட்மேன், சச்சின், வார்னே போன்ற சில வீரர்கள் நாடுகள் எனும் எல்லையின்றி, உலக ரசிகர்களையும் ஈர்த்தனர். அந்த வகையில் கிரிக்கெட் வரலாற்றின் தொடக்கம் முதல் இன்று வரை தங்களது அபார திறமையால் கிரிக்கெட் உலகில் அழியாத தடம் பதித்த "டாப் 25" சாதனை வீரர்களை பற்றி தான் இனி பார்க்கப் போகிறோம்...

சச்சின் டெண்டுல்கரின் சில க்யூட்டான ஹேர் ஸ்டைல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடம் கில்கிறிஸ்ட்

ஆடம் கில்கிறிஸ்ட்

ஆஸ்திரேலிய அணி என்று மட்டுமில்லாது உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இடதுகை பேட்ஸ்மேனான "கில்லி" ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர். முதல் பத்து ஓவர்களிலேயே ரன்களை குவித்து அணிக்கு வலிமை சேர்க்கும் தன்மை கொண்டவர் ஆடம் கில்கிறிஸ்ட். சிறந்த விக்கெட் கீப்பர் என்றாலே பெரும்பாலானோருக்கு கில்லியின் பெயர் தான் மனதில் எதிரொலிக்கும்.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

சிக்ஸர் என்றால் கிரிக்கெட் வரலாற்றில் இவர் பெயரை தான் பொறிக்க வேண்டும். களத்தில் நிற்கும் வரை பந்துவீச்சாளர்களை பயமுறுத்தும் அசுரன். ஆக்ரோஷமான விளையாட்டை, இவரை மீறி அதிகமாக வெளிப்படுத்துவது கொஞ்சம் சிரமம் தான்.

ஸ்டீவ் வாக்

ஸ்டீவ் வாக்

தலைசிறந்த கேப்டன், ஆல்-ரவுண்டர். 16 டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து வென்று சாதனை செய்தவர். ஏறத்தாழ 20 வருடங்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

இந்திய அணியின் சுவர் என்று போற்றப்பட்ட வீரர். டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்கள் குவித்து சாதனை செய்தவர். இவரை ஆட்டமிழக்க செய்வது எப்போதுமே பந்துவீச்சாளர்களுக்கு ஓர் பெரும் சவால் தான்.

இன்சமாம் உல் ஹக்

இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தான் அணியின் ஓர் சிறந்த வீரர் என்ற பருமை மட்டுமின்றி தலை சிறந்த கேப்டன் என்றும் இவரை குறிப்பிடலாம். 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் உலக கோப்பை வென்ற போது, முக்கிய பங்கு வகித்தவர் இன்சமாம்.

ஜாக் ஹோப்ஸ்

ஜாக் ஹோப்ஸ்

பேட்டிங்கில் இவரது நுண்ணிய ஆற்றலை கண்டு இவரை "மாஸ்டர்" என்று செல்லமாக கூறுவார்கள். இவரது டெஸ்ட் சராசரி 56.95. இங்கிலாந்து அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார் (1908 - 1930)

வால்லி ஹம்மொந்த் - Wally Hammond

வால்லி ஹம்மொந்த் - Wally Hammond

தனது சிறப்பான ஆட்டத் திறமையால், இங்கிலாந்து அணியின் கேப்டனாக வளர்ந்தவர் வால்லி ஹம்மொந்த். முதல்தர போட்டிகளில் 50,000 ரன்களும். டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களும் குவித்தவர். (1920 - 1951)

ஷான் பொல்லாக்

ஷான் பொல்லாக்

கிரிக்கெட் உலகில் வேக பந்துவீச்சில் தனக்கான தனி இடத்தை பிடித்தவர் ஷான் பொல்லாக். தனது அணி தடுமாறும் போது கைக் கொடுத்தும் (பேட்டிங்கிலும்) உதவியிருக்கிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகளை, 23.11 என்று சிறந்த சராசரியில் வீழ்த்தியவர்.

ஜாவத் மியாதத்

ஜாவத் மியாதத்

மியாதத் ஓர் கடுமையான முறையில் செயல்படும் கிரிக்கெட் விளையாட்டு வீரர். இவரது இந்த குணம், இவரை கிரிக்கெட் உலகில் தனியாக எடுத்துக்காட்டியது.

கிளென் மெக்ரா

கிளென் மெக்ரா

மிதவேக பந்துவீச்சாளர் கிளென் மெக்ரா, ஆஸ்திரேலியாவின் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்தார். உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமை இவரை சார்ந்தது ஆகும்.

சனத் ஜெயசூர்யா

சனத் ஜெயசூர்யா

தொடக்க வீரர்களில் குறிப்பிட்டு பேசும் அளவு சிறந்து திகழந்தவர் சனத் ஜெயசூர்யா. ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யும் இவர், அதே சமயத்தில், சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார்.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

இவரது தலைமையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. மிகவும் நுட்பமாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் இவர். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 27,000 ரன்கள் குவித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.

பிரைன் லாரா

பிரைன் லாரா

டெஸ்ட் போட்டியின் சிகரம் என பிரைன் லாராவை குறிப்பிடுவது மிகையாகாது. ஒரே இன்னிங்ஸில் 400* ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர் பிரைன் லாரா. உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களின் கண்களில் கூட தனது பேட்டை விட்டு ஆ(ட்)டியவர் பிரைன் லாரா.

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம்

"கிங் ஆப் ஸ்விங்" என்ற பெருமையுடன் அழைக்கப்படும் இவருக்கு, பேட்ஸ்மேன்களை ஸ்டெம்ப் தெறிக்க, உடைய ஆட்டமிழக்க செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 900+ விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வாசின் அக்ரம்.

ஷேன் வார்னே

ஷேன் வார்னே

பேட்ஸ்மேன்களுக்கு தனது பெயரால் மட்டுமின்றி, சுழற்பந்து வீச்சின் மூலமாகவும் வார்னிங் (எச்சரிக்கை) செய்தவர் வார்னே. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 708 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை செய்தவர்.

முத்தைய்யா முரளிதரன்

முத்தைய்யா முரளிதரன்

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 800 விக்கெட்டுகள் சாய்த்த பெருமை இவருக்கு உண்டு. பந்தோடு சேர்த்து தனது கண்களையும் உருட்டியபடி ஓடி வந்து பந்துவீசி பயமுறுத்துபவர்.

காலிஸ்

காலிஸ்

உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் காலிஸ். 24,000+ ரன்களும், 500+ விக்கெட்டுகளும் கைப்பற்றி சாதனை செய்தவர்.

டென்னிஸ் லில்லி

டென்னிஸ் லில்லி

அபாயகரமானதாக பந்துவீசும் வேக பந்து வீச்சாளர் என்ற புகழ்பெற்றவர் டென்னிஸ் லில்லி. ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியவர்.

இயான் போத்தம்

இயான் போத்தம்

இங்கிலாந்து அணியின் வரலாற்றிலேயே சிறந்த ஆல்-ரவுண்டர் என இவரை குறிப்பிடலாம். 1970-களில் உலகளவில் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் இயான் போத்தம்.

இம்ரான் கான்

இம்ரான் கான்

கடந்த 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பை பெற்றுக்கொடுத்த வீரர். சிறந்த பவுலிங் ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார் இம்ரான் கான்.

கபில் தேவ்

கபில் தேவ்

1983ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முதல் உலக கோப்பை பெற்றுக் கொடுத்த பெருமை இவரையே சேரும். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்திய இந்தியாவின் அசத்தல் கேப்டன்.

விவியன் ரிச்சர்ட்ஸ்

விவியன் ரிச்சர்ட்ஸ்

1980-களிலேயே 90-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்தவர். சராசரியாக 47+ வைத்திருந்தவர் விவியன் ரிச்சர்ட்ஸ். பந்துகளை நாலு பக்கமும் அடித்து ஆடும் திறன் கொண்டவர். ஆக்ரோஷமான ஆட்டத்திறனுக்கு புகழ்பெற்று திகழ்ந்தவர் விவியன் ரிச்சர்ட்ஸ்.

கேரி சோபர்

கேரி சோபர்

உலக கிரிக்கெட் வரலாற்றில் ஓர் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் கேரி சோபர். அப்போதைய தலைசிறந்த பேட்ஸ்மேன்களை விட அதிக சராசரி கொண்டிருந்தார் கேரி சோபர். டெஸ்டில் 8000+ ரன்கள், 235 விக்கெட்டுகள், மற்றும் முச்சதம் (365*) அடித்து சாதனை செய்தவர்.

சச்சின்

சச்சின்

கிரிக்கெட் கடவுள், லிட்டில் மாஸ்டர் என பல செல்ல பெயர்களுக்கு சொந்தக்காரர். சாதனை செய்ததிலேயே சாதனை செய்தவர். ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்தவர். அதிக ரன்கள், போட்டிகள், சதங்கள் என இவரது சாதனையை தெரிந்திருக்காத கிரிக்கெட் ரசிகர் ஒருவரும் இருக்க முடியாது.

சார் டான் பிராட்மேன்

சார் டான் பிராட்மேன்

டெஸ்ட் போட்டியில் இவரது சராசரியை எவராலும் எட்ட முடியாத கனியாக இருக்கிறது (99.94). கடைசி போட்டியில் இவர் "டக் அவுட்" ஆகாமல் இருந்திருந்தால் இது கண்டிப்பாக நூறை எட்டியிருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு ஓர் சிறந்த உதாரணம் இவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 25 Best Cricketers of All Time

Top 25 best cricketers of all time, who made a impact in cricket and impressed world audience. Take a look.
Desktop Bottom Promotion