லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தொடர் வெற்றியின் இரகசியங்கள் இது தானுங்கோ!!

Posted By:
Subscribe to Boldsky

எந்த சங்கமும், எந்த ரசிகர் மன்றமும் இல்லாமல் பொதுவான ரசிகர்களால் நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பட்டம் "லேடி சூப்பர்ஸ்டார்" திடீரென இது முளைத்து விடவில்லை. அடுத்தடுத்து தனது படங்களில், பாத்திரங்களில் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார் நயன். இதன் காரணமாக தான் இவருக்கு இந்த பட்டம் கிடைத்துள்ளது.

'ஹாட்' நடிகையான நயன்தாராவின் சில ஹாட் லுக்ஸ்...!

திரையுலகில் நுழைந்து பல சோதனை காலங்களை கடந்து, சினிமா வாழ்க்கையில் பெரிய இடைவேளை எடுத்துக் கொண்டு வந்த பிறகும் கூட தனக்கான அதே இடத்தில் நயன் இருப்பதற்கு காரணம் அவரது துணிவும், ரசிகர் பலமும் தான். மற்ற நடிகைகள் போல பாடல்களுக்கு மட்டும் வந்து செல்லாமல் கதையோடு பயணிப்பவர் நயன்தாரா.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்துல இதெல்லாம் நீங்க கவனிச்சிங்களா???

தொடர் வெற்றிகள் மூலம் தமிழ் திரை ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இனி, இந்த "லேடி சூப்பர்ஸ்டார் " நயன்தாராவின் தொடர் வெற்றியின் இரகசியங்கள் பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மை

நேர்மை

வாழ்க்கையில் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய முக்கியமான பண்பு நேர்மை. தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாராத தோல்விகள் நேர்ந்த போதிலும் கூட நயன்தாரா துணிவுடன் இருந்தார். சொந்த பிரச்சனைகள் படப்பிடிப்பை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டார். தொழில் மீது கவனமாகவும், அதற்கு நேர்மையாகவும் நடந்துக் கொண்டார்.

திறமை

திறமை

ஆரம்பத்தில் எல்லாரும் போல பாடலுக்கு மட்டும் வந்து போனாலும், மெல்ல, மெல்ல தனது திறமையையும் காண்பிக்க ஆரம்பித்தார் நயன். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது திறமையை வெளிக்காட்ட நயன்தாரா தவறவில்லை. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது போல வாய்ப்புகளை தவறவிடாமல் வெற்றிக் கண்டார்.

தைரியம்

தைரியம்

நயனிடம் ஒளிவு மறைவு இல்லை. எதையும் தைரியமாக நேருக்கு நேர் சந்திக்கும் குணம் கொண்டவர். இந்த தைரியம் தான் நயனின் பலம். நயன்தாராவின் நண்பர்களும் கூட இவரது வெற்றியின் இரகசியம் இது தான் என்கிறார்கள்.

பாப்புலாரிட்டி

பாப்புலாரிட்டி

சொந்த மாநிலம் கேரளா என்ற போதிலும் கூட தென்னிந்தியா மாநிலங்கள் முழுதும் நடிகர்களுக்கு இனியாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.

தொழில் vs சொந்த வாழ்க்கை

தொழில் vs சொந்த வாழ்க்கை

சினிமாவையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சேர்த்து குழப்பிக் கொள்ளும் குணம் நயனிடம் இல்லை. அதனால் தான் சிம்புவுடன் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை இருந்தும் சினிமாவில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

கொஞ்சும் அழகும்

கொஞ்சும் அழகும்

வயதாக, வயதாக நயனிடம் அழகு ததும்பிக் கொண்டே போகிறது. சொல்லப் போனால் சினிமாவில் நுழைந்த போதிருந்ததை விட, "நானும் ரௌடி தான்" திரைபடத்தில் நயன் கொள்ளை அழகோடு காட்சியளித்தார். இது தான் ரசிகர் மனதில் இவர் இன்றளவும் சிம்மாசனம் போட்டு அமரிந்திருப்பதற்கு காரணம்.

நல்ல தோழி

நல்ல தோழி

நயன்தாராவுக்கு சினிமா துறையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அனைவருடனும் இவர் நல்ல நட்புடன் பழகுவது இவரது மற்றுமொரு சிறந்த குணமாகும். முன்னணி நடிகர்களில் இருந்து புதுமுக நடிகர்கள் வரை அனைவரிடமும் ஒரே மாதிரி பழகும் குணம் கொண்டவர் நயன்.

வீண் பகட்டு இல்லை

வீண் பகட்டு இல்லை

தான் ஓர் முன்னணி நடிகை என்ற அகங்காரம் துளியும் இன்றி அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழகுபவர் நயன். யாரிடமும் வீண் பகட்டாக இவர் நடந்துக் கொள்வது இல்லை. ஏடாகூடமாக கேள்விகள் கேட்டாலும் சிரித்துக் கொண்டே பதில் கூறுபவர் நயன்.

சிங்கிள் பெண் சிங்கம்

சிங்கிள் பெண் சிங்கம்

மாடலிங், திரை துறையில் தெரிந்தவர்கள் யாரும் இன்றி, தனியே வந்து திரை திரையை கலக்கியவர் இந்த தனி ஒருத்தி.

செல்வம் மீது செல்லம் இல்லை

செல்வம் மீது செல்லம் இல்லை

தென்னிந்தியாவில் கோடிகளில் ஊதியம் வாங்கிய முதல் நாயகி. ஆனால், கேரளாவில் இவ்வளவு சம்பளம் யாருக்கும் கிடைக்காது. ஆனாலும், தன் ஊதியத்தை குறைத்துக் கொண்டு நடித்துக் கொடுக்கும் குணம் உடையவர் நயன்.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள்

சொந்த விஷயங்களாக இருந்தாலும், சினிமா சார்ந்த விஷயங்களாக இருந்தாலும், எதையும் எதிர்மறை பார்வையில் பார்க்கும் குணம் நயனிடம் இல்லை. இவர் எதையும் நேர்மறையாக தான் பார்ப்பார். இது தான் இவரது தொடர் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Learn From Lady Superstar Actress Nayanthara

Everyone should learn these things from Lady Superstar Nayanthara, read here in tamil.
Subscribe Newsletter