உலகெங்கிலும் நடந்த சில விசித்திரமான திருமணங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஜாதி, மதம், தேசம், இனம், கலாச்சாரம் போன்றவற்றில் மாறி திருமணம் செய்யும் சம்பவங்களை நாம் நமது ஊர்களிலேயே நிறைய பார்த்திருப்போம். தினசரி நாளிதழ், தொலைக்காட்சி போன்றவற்றில் படித்தும், பார்த்ததும் கூட உண்டு. ஆனால், விலங்கு, பொருட்கள், பொம்மைகள் போன்றவற்றை திருமணம் செய்துக் கொண்ட நிகழ்வுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?

உலகில் பிறந்த மிகவும் விசித்திரமான குழந்தைகள்!!!

ஆம், தங்கள் வாழ்வில் ஓர் அங்கமாக இருக்கும் பொருட்கள், அளவுக்கு அதிகமாக விரும்பியவை, அபரிமிதமான அன்பு, மற்றும் சடங்கு சம்பிரதாயம் என இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் இதுப் போன்ற விசித்திர திருமணங்கள் அரங்கேறியுள்ளன. அவற்றை பற்றி இனிக் காண்போம்....

உடலுறவுக் கொள்வது போன்ற விசித்திரமான கனவுகள் வருவது ஏன்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிட்சா

பிட்சா

ரஷ்யாவில் உள்ள டாம்ச்க் (Tomsk) எனும் நகரத்தை சேர்ந்த பட்டாதாரி ஒருவர் பிட்சாவின் மீது இருந்த அபரிமிதமான விருப்பதால் பிட்சாவையே திருமணம் செய்துக் கொண்டார்.

பாம்பு

பாம்பு

கடந்த 2006-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ஒரு இந்து பெண் தான் வளர்த்த பாம்பையே விரும்பி திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 2000 பேர் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டால்ஃபின்

டால்ஃபின்

ஓர் பிரிட்டிஷ் பெண்மணி டால்ஃபினுடன் திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணம் இஸ்ரேல் நாட்டில் நடந்தது. இவர் இந்த டால்ஃபினை கண்ட முதல் நாளே காதலிக்க தொடங்கிவிட்டதாக கூறியிருக்கிறார்.

ஆடு

ஆடு

ஆப்ரிக்காவில் உள்ள சூடான் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆட்டை திருமணம் செய்துக் கொண்டார். இந்நாட்டில் உள்ள சட்டத்தின்படி, ஓர் பெண்ணுடன் உறவில் ஈடுபட்டு பிடிப்பட்டுவிட்டால் அவரையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். சார்லஸ் எனும் இந்த நபர் ஆட்டுடன் உறவில் ஈடுபட்டதால் அந்த ஆட்டையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று 2006-ம் ஆண்டு சட்டம் அறிவித்தது.

நாய்

நாய்

உடல்நல குறைபாட்டால் பாதிக்கபப்ட்ட இந்திய விவசாயி ஒருவருக்கு என்ன மருத்துவம் செய்தும் சரியாகவில்லை. கடைசியில் ஒரு ஜோசியக்காரர் நாயுடன் திருமணம் செய்துக் கொள்ள கூறியுள்ளார். இவ்வாறு திருமணம் செய்து அந்த நாயுடன் வாழ்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூற. அவரும் திருமணம் செய்துக் கொண்டார்.

பூனை

பூனை

நாய்க்கு பிறகு பூனை மனிதர்களுடன் மிகவும் நட்புடன் பழகக் கூடிய விலங்கு. ஜெர்மனியை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் நோய்வாய்ப்பட்ட பூனை ஒன்றை திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே ஓர் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈபில் டவர்

ஈபில் டவர்

பாரிசில் இருக்கும் ஈபில் டவர் மீது அளவில்லாத மோகம் கொண்ட சான் பிரான்சிஸ்கோ பகுதியை சேர்ந்த ஓர் பெண் ஈபில் டவரையே திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணம் கடந்த 2008-ம் ஆண்டு நடைப் பெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது பெயரை Erika La Tour Eiffel என மாற்றிக் கொண்டார்.

சுவர்

சுவர்

கடந்த 1979-ம் ஆண்டு எய்ஜா ரீட்டா பெர்லினர் மௌர் என்பவர் பெர்லின் சுவரை திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு காரணாம் இவர் அந்த சுவரின் மீது கொண்ட அளவில்லாத பாசம் என்று கூறுகிறார். சிறு வயதில் டிவியில் அந்த சுவரை கண்ட போதே அந்த சுவர் மீது காதல் ஏற்பட்டுவிட்டது என்று இவர் கூறுகிறார். இப்போது இவரது பெயர் பெர்லின் வால்.

டிஜிட்டல் மனைவி

டிஜிட்டல் மனைவி

வீடியோ கேம்ஸ் மீது அளவில்லாத நாட்டம், விருப்பம் இருக்கலாம். ஆனால்ம அந்த கேமில் வரும் பெண் கதாபாத்திரம் மீது காதல் கொள்வது என்பது தான் கொஞ்சம் ஓவர். சால் எனும் நபர் இவர் விரும்பி விளையாடும் வீடியோ கேமில் வரும் அந்த பெண்ணையே கடந்த 2009ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

ரோலர் கோஸ்டர்

ரோலர் கோஸ்டர்

எமி எனும் நியூயார்க்கை சேர்ந்த ஒரு பெண் ரோலர் கோஸ்டர் மீது கொண்ட மிகுதியான காதலால் அந்த ரோலர் கோஸ்டரையே திருமணம் செய்துக் கொண்டார். இவர் 3000-க்கும் மேலான முறை இந்த ரோலர் கோஸ்டரில் ரைட் செய்துள்ளார். இந்த ரோலர் கோஸ்டரை கணவனாக ஏற்பதில் இவருக்கு பெரும் மகிழ்ச்சியாம்.

தலையணை

தலையணை

லீ ஜின் குயு என்பவர் தான் உறங்க பயன்படுத்தும் அனிமேஷன் கதாபாத்திர தலையணையை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

பொம்மை

பொம்மை

இவருக்கு தனது பணத்தை செலவு செய்யாத, இவருடன் பேசாத, எப்போதும் உடன் இருக்கக் கூடிய வகையில் மனைவி தேவைப்பட்டதாம். அதனால், காற்று நிரப்பும் தன்மை கொண்ட பெண் பொம்மையை இவர் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

பானை

பானை

மணமகன் தாமதம் செய்தமையால் நிச்சயித்த நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்ற காரணத்தால், ஓர் பானையை அந்த இடத்தில் வைத்து சல்விதா எனும் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Story first published: Wednesday, November 25, 2015, 11:07 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter