சிவபெருமானுடனான காளி தேவியின் நித்தியா நடனத்திற்கு பின்னணியில் உள்ள தத்துவம்!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

காளியின் படத்தை கோவில்களில் அல்லது நவராத்திரி சன்னதிகளில் நாம் பார்த்திருப்போம். காளியின் படங்களை அடிக்கடி பார்த்திருந்தாலும் அவரைப் பற்றி நமக்கு அதிகமாக தெரிவதில்லை. காளி யார் என்பதை பற்றியும், அவரை பற்றிய தத்துவ ரீதியான உள்நோக்கத்தைப் பற்றியும் தான் பார்க்க போகிறோம்.

ஆக்கிரோஷமாக, கருமையான நிறத்தில், பல ஆயுதங்களை வைத்துக் கொண்டு, கையில் தலையை வெட்டி வைத்துக் கொண்டு கொடூரமாக காட்சியளிக்கும் காளி தேவியைப் பற்றிப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காளி தேவி

காளி தேவி

நன்றாக தெரிந்த, ஆனால் சரியாக புரிந்து கொள்ளப்படாத இந்துக் கடவுள்களில் புகழ்பெற்ற ஒரு கடவுள் தான் காளி. காளி தேவி என்றாலே கருமையான நிறத்தில், அழிக்க கூடிய கொடூர தோற்றத்தை கொண்டிருப்பவள். சிவபெருமானுடன் அவர் ஆடும் படத்தை நாம் பொதுவாக பல இடங்களில் காணலாம். இப்படிப்பட்ட மறைபொருள் படங்களுக்கு பின்னால் பல அர்த்தங்கள் உள்ளது. இப்படிப்பட்ட கோணத்தில் நம் மதத்தை பற்றி ஆழமாக புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள் ஆழமான அர்த்தத்தை கொண்டிருக்கும். நம் வாழ்விற்கு அவைகள் ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்கும். தவறான கருத்துகளின் மீதான புரிதலை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். தீய சக்திகளின் கடவுள் எனவும், மனித பலியை எதிர்ப்பார்க்கும் கடவுள் எனவும் சில இந்துக்கள் அல்லாத சிலர் கூறுவதை நாம் கேட்டிருக்கலாம். தன் மதத்தின் மீது ஆழமான புரிதலும், ஞானமும் இருந்தாலொழிய, இந்து மதத்தினரால் இவ்வகையான தவறான புரிதலை கொண்டிருப்பவர்களிடம் வாதம் செய்ய முடியாது.

காளி என்றால் யார்?

காளி என்றால் யார்?

சமஸ்கிருதத்தில் காளி என்றால் காலம் என்ற அர்த்தமாகும். காலத்திற்கு பெண்பால் தான் காளி. அதற்கு ஆண்பால் "காலா". நாம் இருப்பதற்கான சான்றாக இருக்கும் முக்கிய மற்றும் முதன்மையான சக்தியாக இருப்பது இந்த காலம். காளி என்பவள் காலத்தை குறிப்பவள் ஆவாள். அதனால் காலத்தை குறிக்கும் கடவுள் கொடூரமாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. சொல்லப்போனால் காலம் என்பது நம்மை அழிக்கும் ஒன்று தானே. காலம் என்பது நம் வாழ்க்கையுடன் நேரடி தொடர்பில் உள்ளது - காலத்தை விரயம் செய்வது என்பது நம் வாழ்க்கையை வீணடிப்பது போலாகும்.

காலத்தை பெண்பாலாக கருதுவதற்கு காரணங்கள்

காலத்தை பெண்பாலாக கருதுவதற்கு காரணங்கள்

காலம் என்பது மிகச்சிறந்த கருப்பை, மிகச்சிறந்த தாய் - அங்கிருந்து தான் நாம் அனைவரும் உருவாக்கப்படுகிறோம். அதேப்போல் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இறப்பதற்கு வழிவகுப்பதும் காலம் தான். அதனால் தான் உருவாக்கிய குழந்தைகளை அழிக்கும் தாயை போல் காளி தேவி சித்தரிக்கப்பட்டுள்ளார். பயம் தரக்கூடிய அவருடைய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும் காலத்தின் மூலம் அவர் எடுக்கும் இந்த நடவடிக்கை நமக்கு உய்வு கிடைக்கும். காலத்தின் மூலமாக, தொடர்ச்சியான பிறப்புகளின் வழியாக, நாம் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவிக்கிறோம், நாம் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுக் கொள்கிறோம். நித்திய வாழ்க்கைக்குள் நாம் மீண்டும் இணைவதற்கான முயற்சியே இது. காளி என்பது உருமாற்றத்திற்கான கடவுளாகும். அவரை வழிபடுவதன் மூலமாக உருமாறும் சக்தியை யோகிகள் பெறுவார்கள். இதன் மூலம் உயர்ந்த ஞான நிலையில் எதிர்மறை போக்குகளை நீக்கலாம்.

ஏன் அவர் சிவபெருமானுடன் நடனமாடுகிறார்?

ஏன் அவர் சிவபெருமானுடன் நடனமாடுகிறார்?

சைவ மரபு படி, சிவபெருமான் என்பவர் அண்டம் மற்றும் அதையும் தாண்டி உட்புகுந்து பரவும் புராதன உணர்வு நிலையாவார். இறுதியான, மாறாத, காலமில்லாத, உண்மையான சிவபெருமானுடன் காளி (காலம்) நடனமாடுவார். இதனால் இந்த அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சி நிலையாக நடைபெறும். ஒரு படிவத்தின் கீழ் உள்ள மற்றொரு படிவம் தான் சிவபெருமான். அதன் மீது தான் காளி தேவி செயல்படுகிறார். இதனால் இந்து மத ஆன்மீக மரபுகளின் இந்த பகுதியில், உட்புகுந்து பரவும் புராதன உணர்வு நிலையான மாறாத சிவபெருமானுடன் காளி தேவி (காலம்) ஆடும் நடனம் ஒட்டுமொத்த ஆண்ட மெய்மையை குறிக்கும்.

காளி தேவிக்கு தனியாக உணர்வு நிலை உள்ளதா அல்லது அவர் காலத்தின் பிரதிநிதி மட்டுமா?

காளி தேவிக்கு தனியாக உணர்வு நிலை உள்ளதா அல்லது அவர் காலத்தின் பிரதிநிதி மட்டுமா?

இந்து மதம் ஆன்மீக உண்மைகளை கடவுள்களாக உருவகப்படுத்துகிறது. ஆன்மீக சிந்தனைகளை உருவமுள்ள படங்களாக சித்தரித்து, அவைகளுக்கு மனித உருவங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக இது தர்க்க அறிவு சிந்தனையின்மையை குறிக்காது. மாறாக வாழும் சக்திகளாக, உயரிய உண்மைகளை கொண்ட அனுபவ தொடர்பாகும். அண்டசராசரத்தில் உள்ள சக்திகளுக்கும் நமக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பந்தத்தை இந்து மதம் உருவாக்கியுள்ளது. இந்த சக்திகள் அனைத்தும் நம்முள்ளேயே இருக்கிறது என்பதும் காலப்போக்கில் நமக்கு புரியும். இந்த அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளும் உட்புகுந்து பரவும் உணர்வு நிலையே. உண்மையில் அவர்கள் உயிரினங்கள் என்பதால் அவர்கள் அம்மாதிரியே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

தெளிவான படங்களுக்கான காரணம் என்னவென்று தெரியுமா?

தெளிவான படங்களுக்கான காரணம் என்னவென்று தெரியுமா?

ஒரு படத்தை வைத்து தியானம் செய்யும் போது, நாம் புரிந்து கொண்டு, தெரிந்து கொள்ள விரும்பும் கருவின் மீது நம் மனது ஆழமாக நினைக்கும். நம் இயல்பு நிலை சிந்தனைகளை விட, இது அதிகமானது. அப்படிப்பட்ட வழியில் நாம் கண்டிப்பாக காலத்தின் உண்மையை உணர முடியும். காலம் என்பது அருமையான உணர்வு நிலை சக்தி என்பதும் புரியும். நம்முடைய இருப்பு எப்படி அதனுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதையும் குறிக்கும். குறிப்பாக காளி தேவி முக்கியமான கடவுளாகும். அதற்கு காரணம், அவரை புரிந்து கொள்வதால், நாம் நம்மை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதை நிறுத்திவிடுவோம். உடல் என்பது நிலையற்ற ஒன்று, அதையும் தாண்டி நிலைக்கும் உண்மையான இருப்பு உள்ளது என்ற முடிவுக்கு வந்து விடுவோம். இதை பலரும் நம்பினாலும் கூட நேரடியாக உணர விரும்புவார்கள். அதனால் ஈகோவை (சின்ன சின்ன விஷயங்கள் மீது பற்று வைத்தல்) கொல்லும் கடவுளாக அவர் பார்க்கப்படுகிறார். அதனால் ஒரு வெட்டப்பட்ட மனித தலையை அவர் கையில் வைத்திருப்பதை போல் அவருடைய படங்களில் சித்தரிக்கபப்ட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Philosophy Of Kali’s Eternal Dance On Lord Shiva

We have all seen the image of Kali at a temple or in a Navratri shrine. She is well known but poorly understood. This article provides a fascinating philosophical insight into who Kali really is!