For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக அளவில் தலைசிறந்து விளங்கும் இந்திய விஞ்ஞானிகளின் அறிய கண்டுப்பிடிப்புகள்!!!

|

"சுழியம்" கண்டுபிடித்துக் கணக்கை எல்லையில்லா தூரத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் நமது இந்தியர்கள். உலக அறிவியலின் தலைநகராய் விளங்கும் நாசாவில் பணிபுரியும் பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்தியர்கள் மற்றும் இந்திய-வாழ் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயத்தில் இருந்து விண்வெளி வரை அறிவியலை பயன்படுத்தியவர்கள் நமது இந்திய விஞ்ஞானிகள்.

உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!!

கணிதம், விண்வெளி, இயற்பியல், விவசாயம் என பல துறைகளில் நமது இந்திய விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். சார். சி.வி. ராமன் முதல் நமது முன்னாள் குடியரசு தலைவர். அப்துல் கலாம் அவர்கள் வரை அறிவியல் துறையில் தங்கள் கால் சுவடுகளை அழுத்தமாய் பதித்தவர்கள்.

கார்கில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!!

பெரும்பாலும் இந்த சாதனை விஞ்ஞானிகள் பற்றி தெரிந்திருந்தாலும், அவர்கள் செய்த சாதனைப் பற்றி நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அவரவர் துறையில் அவர்கள் எட்டிய மைல்கல் பற்றி இங்கு தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஸ்ரீனிவாச இராமானுஜன்

ஸ்ரீனிவாச இராமானுஜன்

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கணித மேதை என்ற புகழ் பெற்றவர் ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்கள். காஸ் (Gauss), உயர் வடிவியல் (Hyper Geometric), ஃப்ரேக்ஷன் (Fraction), நம்பர் தியரி போன்றவற்றை கண்டுபிடித்தார் ஸ்ரீனிவாச இராமானுஜன்.

பிரஃபுல்லா சந்திர ராய் (Prafulla Chandra Ray)

பிரஃபுல்லா சந்திர ராய் (Prafulla Chandra Ray)

ஆச்சார்யா பிரஃபுல்லா சந்திர ராய் கல்வியாளர், வேதியியல், ஆசிரியர், மற்றும் தொழிலதிபர் போன்ற பல முகம் கொண்டவர். இந்தியாவில் முதல் முறையாக மருந்து தயாரிக்கும் நிறுவனம் அமைத்தவர் இவர் தான். வேதியல் ராயல் சமூகம் இவரது நினைவாய் நினைவு சின்னம் அமைத்துள்ளனர்.

விஸ்வேஷ்வராய

விஸ்வேஷ்வராய

மொக்ஷகுண்டம் விஸ்வேஷ்வராய ஒரு பொறியியலாளர், காவேரி நதி குறுக்கே கிருஷ்ணராஜா சாகர் அணை கட்டியவர் இவர் தான். கடந்த 1955 ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரது பிறந்தநாளை தான் (செப்டம்பர்15) இந்திய பொறியியலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சார்.சி.வி. ராமன்

சார்.சி.வி. ராமன்

உலக அளவில் பெரும் புகழ்பெற்ற விஞ்ஞானி ராமன் அவர்கள். இயற்பியலில் இவர் கண்டுப்பிடித்த ராமன் விளைவு (Raman Effect/ light scattering effect) இவருக்கு 1930 ஆண்டிற்கான நோபல் பரிசு வாங்கி தந்தது!

ஹோமி பாபா

ஹோமி பாபா

இயற்பியல் துறையை சேர்ந்த ஹோமி பாபா டாட்டா தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் பாபா அணுமின் நிலையம் அமைக்க முன்னோடியாக இருந்தார். இந்திய அணுமின் சக்தி மையம் கட்டமைக்க தலைவராக இருந்தார். இந்திய அணுமின் சக்தி செயல்பாடுகளில் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

ஜகதீஸ் சந்திர போஸ்

ஜகதீஸ் சந்திர போஸ்

இயற்பியல், உயிரியல், தாவரவியல் மற்றும் தொல்பொருள் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர் ஜகதீஸ் சந்திர போஸ் அவர்கள். மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் எந்திரத்தை முதன் முதலில் வடிவமைத்த பெருமைக்கு உரியவர் ஜகதீஷ் சந்திர போஸ். மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை (photographic theory) அவர் உருவாக்கியவர் இவர்.

 சலீம் அலி

சலீம் அலி

பறவையியல் மற்றும் இயற்கை ஆய்வாளராக இருந்தவர் சலீம் அலி அவர்கள். பறவைகளை மிக அருகாமையில் இருந்து ஆராய்ந்து அதன் வகைகளை பிரித்து கூறியவர் சலீம் அலி. இந்தியா முழுதும் சென்று பறவைகள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தவர் சலீம் அலி. இவர் இந்தியாவின் பறவை மனிதன் என்று அழைக்கபட்டார்.

ராஜ் ரெட்டி

ராஜ் ரெட்டி

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையின் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் 1994 ஆண்டு அலன் டுரிங் (Alan Turing) விருது வென்றவர். கணினி துறையின் மிக உயர்ந்த விருது இது ஆகும்.

அப்துல் கலாம்

அப்துல் கலாம்

இந்தியாவின் ஏவுகணை என அழைக்கப்படும் காலம் அவர்கள். இந்திய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர். இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை திட்டங்களில் பெரும் பங்கு வகித்தவர் அப்துல் கலாம் அவர்கள்.

 சுப்ரமணிய சந்திரசேகர்

சுப்ரமணிய சந்திரசேகர்

இந்திய வான் அறிவியலாளரான சுப்ரமணிய சந்திரசேகர் கருப்பு துளை மற்றும் நட்சத்திரங்களின் வளர்ச்சி நிலையைப் பற்றி கண்டறிந்தமைக்காக 1983 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வென்றவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Legendary Indian Scientists And Their Inventions

Apart from giving the world zero '0', we Indians contributed to the field of Science and Technology in the form of many great scientists, mathematicians and biologists. Indian scientists have been contributing to the world since time immemorial.
Story first published: Friday, April 3, 2015, 14:03 [IST]
Desktop Bottom Promotion