சொந்தமாக தீவுகள் வைத்திருக்கும் பிரபலங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் மக்கள் வாழ இடமில்லை என்று தான் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் இடம் தேடி அலைகிறார்கள். ஆனால் ஒரு சில உலக பிரபலங்கள் தங்களுக்கென தனி தீவையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் ஹாலிவுட் நடிகர்கள் தான். இதுப் போக ஓரிரு பாப் இசைப் பாடகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள்.

பெரும்பாலும் இவர்கள் எல்லாம் கடலின் உள்ளே எல்லாம் போய் தேடாமல், கடற்கரை அருகாமையில் தான் தங்களுக்கான தீவுகளை வாங்கி வைத்திருக்கிறார்கள். இனி, சொந்தமாக தீவுகள் வைத்திருக்கும் பிரபலங்கள் யார், யார் மற்றும் எங்கே வாங்கியிருகிரார்கள் என்று பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜானி டெப்

ஜானி டெப்

"பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்" ஜானி டெப் 43 ஏக்கர் பரப்பளவில் "லிட்டில் ஹால்ஸ் பாண்ட் கே" (Little Hall's Pond Cay) என்ற பெயரில் கரீபியன் பகுதியில் ஓர் தீவினை சொந்தமாக வைத்திருக்கிறார். இதன் மதிப்பு 2004-ல் ஜானி டெப் வாங்கும் போது 3.5 மில்லியன் டாலர்கள்.

ஷகீரா

ஷகீரா

உலகின் முன்னணி பாடகியான ஷகீரா பஹாமாஸ் எனும் இடத்தில் பாண்ட்ஸ் கே (Bonds Cay) எனும் ரிசார்ட் போன்ற தீவை வாங்கியிருக்கிறார்.

பமீலா அன்டேர்சன்

பமீலா அன்டேர்சன்

இவர் ஒரு கவர்ச்சி மாடல் துபாயின் கடற்கரை ஓரத்தில் ஓர் தீவை இவர் சொந்தமாக வைத்திருக்கிறார். இதை டிம்மி லீ ஜோன்ஸ் என்பவர் அன்பளிப்பாக அளித்துள்ளார்.

லியோனார்டோ டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோ

டைட்டானிக் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ, ப்ளேக்டோர் கே (Blackdore Caye) தீவினை சொந்தமாக வைத்திருக்கிறார். இங்கு ஹோட்டல், ஏர்போர்ட் என சகல வசதிகளும் உண்டு.

ஸ்டீவென் ஸ்பில்பெர்க்

ஸ்டீவென் ஸ்பில்பெர்க்

ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டீவென் ஸ்பில்பெர்க் போர்ச்சுகலில் "மடேரியா ஆர்ச்சிபெலாகோ" (Maderia Archipelago) எனும் தீவை சொந்தமாக வைத்திருக்கிறார்.

ராபின் வில்லயம்ஸ்

ராபின் வில்லயம்ஸ்

மறைந்த நடிகர் ராபர்ட் வில்லியம்ஸ் கனடாவில் "பெண்டர் ஹார்பர்" எனும் தீவை சொந்தமாக வைத்திருந்தார்.

நிகோலஸ் கேஜ்

நிகோலஸ் கேஜ்

கோஸ்ட் ரைடர் நாயகன் நிகோலஸ் கேஜ் "எக்ஸுமா ஆர்ச்சிபெலாகோ" (Exuma Archipelagom) எனும் தீவை சொந்தமாக வைத்திருக்கிறார்.

ரிக்கி மார்ட்டின்

ரிக்கி மார்ட்டின்

பிரபல பாடகர் ரிக்கி மார்ட்டின் 8 மில்லியன் டாலர் கொடுத்து பிரேசில் கடற்கரை பகுதியில் ஓர் தீவை சொந்தமாக வாங்கியிருக்கிறார்.

ரிச்சர்ட் பிரான்சன்

ரிச்சர்ட் பிரான்சன்

விர்ஜின் குழும நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன், "நேக்கர்" எனும் தீவினை கடந்த 1978ஆம் ஆண்டே வாங்கிவிட்டார். ஓர் நாளுக்கு இந்த தீவின் மூலமாக மட்டுமே $62,000 சம்பாதிக்கிறார் இவர். கூகுள் நிறுவன Larry Page இங்கு தான் திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rich Popular Celebrities Who Own Private Island

விர்ஜின் குழும நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன், "நேக்கர்" எனும் தீவினை கடந்த 1978ஆம் ஆண்டே வாங்கிவிட்டார். ஓர் நாளுக்கு இந்த தீவின் மூலமாக மட்டுமே $62,000 சம்பாதிக்கிறார் இவர். கூகுள் நிறுவன Larry Page இங்கு தான் திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.