மகாபாரத ரகசியம்: அர்ஜுனன் ஏன் தருமனை கொல்ல நினைத்தார்?

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

இந்து மதத்தில் மிகவும் சமயப்பற்றான காவியமாக கருதப்படுகிறது மகாபாரதம். பகவத் கீதையும் கூட இந்த காவியத்தின் ஒரு பகுதியே. மகாபாரத கதை சுவாரசியமானதோடு, மிகவும் விந்தையான ஒன்றும் கூட. மகாபாரதத்தில் பல பேருக்கு தெரியாத பல விஷயங்கள் அடங்கியுள்ளது. அர்ஜுனன் தன் மூத்த சகோதரனான யுதிஷ்டிரரின் மீது மிகுந்த மதிப்பை கொண்டிருந்தது நம் அனைவருக்கும் தெரியும்.

மகாபாரதத்தில் வரும் மிகவும் சுவாரஸ்யமான பீமன் மற்றும் பகாசுரனின் கதை!!!

இருப்பினும் ஒரு சமயத்தில் அர்ஜுனன் யுதிஷ்டரை கொல்ல நினைத்தது நம்மில் பலருக்கும் தெரியாது. அது எதனால் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சேனாபதி ஆன கர்ணன்

சேனாபதி ஆன கர்ணன்

யுதிஷ்டிரரை கொல்ல அர்ஜுனன் ஆயுதத்தை எடுத்தார். இந்த சம்பவம் மகாபாரதத்தின் கர்ண பர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் படி, துரோணாச்சாரியாரின் மரணத்திற்கு பிறகு, கௌரவர்களின் படைக்கு கர்ணன் சேனாபதி ஆக்கப்பட்டார். சேனாபதி ஆனவுடனேயே பாண்டவர்களின் படைக்கு பல தொந்தரவுகளை கர்ணன் கொடுக்க ஆரம்பித்தார்.

பாண்டவர்களை தாக்கிய கர்ணன்

பாண்டவர்களை தாக்கிய கர்ணன்

கர்ணன் அவர் படையுடன் நடத்திய தொடர் தாக்குதலால், தன்னுடைய படையின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை கண்ட யுதிஷ்டர், கோபமடைந்து கர்ணனின் படையை தாக்க தொடங்கினார். யுதிஷ்டரை சிறை பிடித்து விடுமாறு அந்த நேரம் கர்ணனுக்கு துரியோதனன் பரிந்துரைத்தார். கர்ணனுக்கும் யுதிஷ்டருக்கும் இடையே பெரிய போர் மூண்டது. கூர்மையான அம்புகளால் யுதிஷ்டரை காயப்படுத்தினார் கர்ணன்.

யுதிஷ்டிரரைக் காப்பாற்றிய நகுலன் சகாதேவன்

யுதிஷ்டிரரைக் காப்பாற்றிய நகுலன் சகாதேவன்

யுதிஷ்டர் காயமடைந்ததை பார்த்த தேரோட்டி, அவரை போர்க்களத்தில் இருந்து அழைத்து சென்றார். யுதிஷ்டரை சிறைப்பிடிக்க துரியோதனனும் பிற போர் வீரர்களும் அவரை பின் தொடர்ந்தனர். ஆனால் அவர்களின் மீது தாக்குதல் நடத்தி நகுலனும் சகாதேவனும் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். கர்ணனிடம் தோற்று போன யுதிஷ்டர் அவமானமடைந்தார்.

வருத்தமடைந்த அர்ஜுனன்

வருத்தமடைந்த அர்ஜுனன்

காயமடைந்த யுதிஷ்டரை நகுலனும் சகாதேவனும் அவர்கள் இடத்திற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க தொடங்கினர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அர்ஜுனன் மிகுந்த வருத்தமடைந்தார். யுதிஷ்டரை காண கிருஷ்ணரின் கூடாரத்திற்கு அவர் சென்றார்.

தவறாக புரிந்து கொண்ட யுதிஷ்டிரர்

தவறாக புரிந்து கொண்ட யுதிஷ்டிரர்

அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் ஒன்றாக பார்த்த யுதிஷ்டர், கர்ணனை கொன்று, அவரை போரில் அர்ஜுனன் தோற்கடித்து விட்டு, தன் பழியை தீர்த்துக் கொண்டார் என எண்ணினார். அப்படி நினைத்த அவர் சிரித்த முகத்துடன் அர்ஜுனனை கட்டி தழுவினார். ஆனால் அவருக்கு உண்மை சீக்கிரமே தெரிய வந்தது.

அர்ஜுனன் மீது கோபமடைந்த யுதிஷ்டிரர்

அர்ஜுனன் மீது கோபமடைந்த யுதிஷ்டிரர்

அர்ஜுனன் கர்ணனை கொல்லவில்லை என்பதை அறிந்த யுதிஷ்டர், மிகுந்த கோபமடைந்தார். அதனால் அர்ஜுனனிடம் மிகவும் மோசமான வார்த்தைகளை கொண்டு அவரை திட்டினார். தன் ஆயுதங்களை யாரிடமாவது கொடுத்து விடும்படி அர்ஜுனனிடம் கூறினார். இதை கேட்ட அர்ஜுனன் கோபமடைந்தார். உடனே அவரை கொல்ல அர்ஜுனன் தன்னுடைய வாளை எடுத்தார்.

அர்ஜுனனை தடுத்து நிறுத்திய கிருஷ்ணர்

அர்ஜுனனை தடுத்து நிறுத்திய கிருஷ்ணர்

இருப்பினும் குறுக்கே வந்த கிருஷ்ணர் அர்ஜுனனை தடுத்து நிறுத்தினார். ஆனால் தன் ஆயுதங்களை கொடுத்து விடும்படி யாராவது கூறினால் அவர்களின் தலையை எடுத்து விடுவதாக தான் போட்டிருக்கும் சபதத்தை பற்றி அர்ஜுனன் கூறினார். எதுவும் செய்ய முடியாத நிலையில் தான் இருப்பதாக அவர் கூறினார்.

கிருஷ்ணரிடம் வழி கேட்ட அர்ஜுனன்

கிருஷ்ணரிடம் வழி கேட்ட அர்ஜுனன்

இதனை கேட்ட கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு மதத்தை பற்றி சொல்லிக் கொடுத்து ஒரு கதையையும் கூறினார். தன் சபதம் வீணாய் போகாமலும், அதே நேரம் யுதிஷ்டரை கொல்லாமல் இருக்கவும் என்ன வழி என கிருஷ்ணரிடம் அர்ஜுனன் கேட்டார். தன்னை பிறர் மதிக்கும் வரை தான் ஒருவன் உயிருடன் இருக்கிறான் என கிருஷ்ணர் கூறினார். என்று ஒருவன் தன் மரியாதையை இழக்கிறானோ அன்றே அவன் இறந்ததற்கு சமமாகும். அதனால் யுதிஷ்டிரருக்கு மரியாதை அளிக்க வேண்டாம் என கிருஷ்ணர் கூறினார்.

யுதிஷ்டிரரை அவமதிக்க ஆரம்பித்த அர்ஜுனன்

யுதிஷ்டிரரை அவமதிக்க ஆரம்பித்த அர்ஜுனன்

யுதிஷ்டிரரை தன் மூத்த சகோதரன் என நினைக்காமல், அவரை மரியாதை இல்லாமல் அர்ஜுனனை அழைக்க சொன்னார் கிருஷ்ணர். அது மதசார்பற்றது. அதனால் யுதிஷ்டிரர் தன் மரியாதையை இழந்து விடுவார். இந்த அவமரியாதை அவர் இறந்ததற்கு சமமாகும். கிருஷ்ணர் கூறியதை கேட்ட அர்ஜுனன், யுதிஷ்டரிடம் சென்று அவரை பல விஷயங்களுக்காக அவமதிக்க தொடங்கினார்.

தன்னையே அழிக்க துணிந்த அர்ஜுனன்

தன்னையே அழிக்க துணிந்த அர்ஜுனன்

இருப்பினும், தன் மூத்த சகோதரரான யுதிஷ்டரை அவமரியாதை செய்த பிறகு, அர்ஜுனன் மிகுந்த மனக்கவலை அடைந்தார். பொறுமையை இழந்த அர்ஜுனன் மீண்டும் தன் வாளை எடுத்தார். ஏன் மீண்டும் வாளை எடுக்கிறார் என கிருஷ்ணர் கேட்டார். நான் என் சகோதரனை அவமானப்படுத்தி விட்டேன். அதனால் அதற்கு தண்டனையாக தன் தலையை வெட்டிக் கொள்ள போவதாக கூறினார்.

அர்ஜுனனின் மனதை மாற்றிய கிருஷ்ணர்

அர்ஜுனனின் மனதை மாற்றிய கிருஷ்ணர்

தன் சகோதரனை கொல்வதை காட்டிலும், தன்னை தானே கொல்வதற்கு நரகத்தில் தண்டனை மிகவும் அதிகம் என கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்கினார். தன்னை தானே புகழ்ந்து கொள்ளும்படி அர்ஜுனனிடம் கிருஷ்ணர் கூறினார். இது தன்னை தானே கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை போக்கும் என்றும் கூறினார்.

யுதிஷ்டிரரிடம் மன்னிப்பு கேட்ட அர்ஜுனன்

யுதிஷ்டிரரிடம் மன்னிப்பு கேட்ட அர்ஜுனன்

கிருஷ்ணர் கூறியதை கேட்ட அர்ஜுனன், தொடர்ச்சியாக தன்னை தானே புகழ்ந்து கொண்டு, தன் ஆயுதங்களை தூக்கி எறிந்தார். பின் யுதிஷ்டரின் காலில் தலை வணங்கி மன்னிப்பு கோரினார். பின் யுத்த களத்திற்கு தயாரானார்.

அர்ஜுனனுன் போரில் களம் இறங்க ஒப்புக் கொண்ட யுதிஷ்டிரர்

அர்ஜுனனுன் போரில் களம் இறங்க ஒப்புக் கொண்ட யுதிஷ்டிரர்

தன்னுடைய முட்டாள் தனத்தால் இப்போது பெரும் பிரச்சனையில் உள்ளதாக அர்ஜுனனிடம் யுதிஷ்டர் கூறினார். அதனால் இனியும் தான் இங்கே இருக்க தனக்கு அருகதை இல்லை என்றும் கூறினார். இதனை கூறி விட்டு, யுதிஷ்டர் காட்டிற்குள் சென்றார். இருப்பினும் அர்ஜுனனின் சபதத்தை யுதிஷ்டருக்கு நினைவு கூறிய கிருஷ்ணர், அவரை காட்டிற்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினார். இறுதியில் இங்கேயே இருந்து, கௌரவர்களுக்கு எதிரான போரில் தன் சகோதர்களுக்கு உதவி செய்ய ஒத்துக் கொண்டார் யுதிஷ்டர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mahabharat secret: Arjun wanted to kill Yudhishthir!

No one knows that Arjun wanted to kill Yudhishthir at one time. Click on this slide show to know the full story…