நேபாள நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் - ஆச்சரியம்!!!

Posted By: John
Subscribe to Boldsky

நமது பூமியில் மூன்றில் ஒரு பங்கு தான் நிலம். மற்ற இரண்டு பங்கிற்கு நீர் தான் இருக்கிறது என்பது நாம் யாவரும் அறிந்தது தான். ஆனால், பூமியின் மொத்த நிலப்பரப்பும் ஓர் காலத்தில் ஒன்றாக தான் இணைந்திருந்தது.

இயற்கை சீற்றத்தினால் அழிந்த உலக நகரங்கள்!!!

பூமியின் அடியில் இருக்கும் புவித்தட்டுகள் தொடர்ந்து நகர்ந்துக் கொண்டே இருக்கும் தன்மையுடையது ஆகும். இதன் காரணத்தினால் தான் நிலங்கள் நகர்கின்றன. இவ்வாறு நகரும் போது ஏற்படும் விரிசல் மற்றும் குவிதல் காரணங்களினால் தான் அருவி, ஆறு, மலை, மேடு, பள்ளங்கள் போன்றவை உருவாகின்றன.

இந்தியாவில் அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய கொடூர நிலநடுக்கங்கள்!!!

அதே போல புவித்தட்டுகள் நகரும் போது ஏற்படும் உராய்வுகளின் காரணமாக தான் நிலநடுக்கங்கள், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளும் ஏற்படுகின்றன. இது போல, சமீபத்தில் நேபாள நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் குறித்து தான் இனி காணவிருக்கிறோம்....

மறக்க முடியாத அதிக தீங்கை விளைவித்த எரிமலை வெடிப்புகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலாறு

வரலாறு

நேபாளம் எனும் நாடு, இரண்டு புவித்தட்டுகளின் சேர்க்கையில் அமைந்திருக்கிறது. அதாவது, வெவ்வேறு பகுதிகளாக இருந்த இரு புவித்தட்டுகள், நகர்ந்து ஒரே இணைக் கோடுகளாக சேர்ந்த போது உருவாகியிருக்கிறது.

வலுவிழந்த நிலை

வலுவிழந்த நிலை

இதன் காரணத்தினால் தான் நேபாளத்தில் சிறு, சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும் போது கூட, பெரிய அளவில் நிலா சரிவுகள் ஏற்படுகின்றன, கட்டிடங்கள் சரிந்துவிடுகின்றன. இதற்கு காரணம் வலு குறைவான அந்த புவி அமைப்பு தான்.

டெக்டானிக் மண்டலங்கள்

டெக்டானிக் மண்டலங்கள்

நேபாளம் மற்றும் ஹிமாலயா மத்தியில் ஐந்து டெக்டானிக் மண்டலங்கள் இருக்கின்றன. டிராய் ப்ளைன் (Terai Plain), சப் -ஹிமாலயா (Sub Himalaya (Sivalik Range), கீழ் ஹிமாலயா (Lesser Himalaya - Mahabharat Range and mid valleys), மேல் ஹிமாலயா (Higher Himalaya) மற்றும் உள் ஹிமாலயா (Tibetan Tethys)

2015 நிலநடுக்கம்

2015 நிலநடுக்கம்

கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஹிமாலயா, காத்மாண்டு போன்ற நிலப்பரப்புகளில் சில புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

எவரெஸ்ட் மலை சிகரம்

எவரெஸ்ட் மலை சிகரம்

எவரெஸ்ட் சிகரதித்தில் அங்காங்கே புதியதாய் பனி சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. சில பனி சரிவுகளினால் பல தேசிய நெடுஞ்சாலைகளில் பாதைகள் தடைப்பட்டு இருக்கின்றன.

காணாமல் போன கிராமம்

காணாமல் போன கிராமம்

நேபாளத்தை சேர்ந்த இமாலயா மலை பகுதியில் அமைந்திருக்கும் லாங்க்டங் என்னும் பகுதியில் 250 பேர் வசித்து வந்து ஓர் கிராம பகுதி காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஏறத்தாழ மூன்று கிலோமீட்டர் தூரம் அளவு அகலமாக பனிச்சரிவின் ஏற்ப்பட்டிருக்கிறது. இந்த பனிச்சரிவில் தான் அந்த கிராமம் காணமல் போயிருக்கிறது என்று கருதுகின்றனர்.

மரண எண்ணிக்கை

மரண எண்ணிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவுகளினால் மட்டும் 300க்கும் மேற்பட்ட மக்கள் இமாலய சிகரம் மட்டும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உயிரிழந்துள்ளனர்.

எவரெஸ்ட் உயரம் குறைந்தது

எவரெஸ்ட் உயரம் குறைந்தது

சில மில்லி மீட்டர் அளவு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் கூட, எவரெஸ்ட் தான் உலகின் உயர்ந்த மலை சிகரமாக கருத்தப்படுகிறது.

காத்மாண்டு

காத்மாண்டு

நேபாளத்தின் தலை நகரான காத்மாண்டு, சில மீட்டர் தூரம் நகர்ந்துள்ளது. இதற்கு காரணம், புவித்தட்டுகளில் ஏற்பட்டுள்ள நகர்தல் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Geographical Changes Occurred After Nepal Earthquake

Do You Know About The Geographical Changes Occurred After Nepal Earthquake? Read Here.