மதம் மாறிய பிரபல நட்சத்திரங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஜாதி, மதம் என்பது ஓர் பன்னாட்டு நிறுவனத்தில் கடைபிடிக்கப்படும் எச்.ஆர் பாலிசியை போன்றது தான். அவரவர் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்பட்டது தான் ஜாதி, மதம் என்பவை. இங்கு யாரும் தீயதை செய்ய தூண்டுவது இல்லை. அனைவரும் நன்மைக்காகவும், அனைவரின் நலனிற்காகவும் தான் பாடுபட கூறியிருக்கிறார்கள்.

பிரபலங்களுக்கு பின் இருக்கும் அந்தரங்க கருப்பு பக்கங்கள்!!!

அவரவர் விருப்ப, வெறுப்புக்கு உட்பட்டது இவை. யாரையும் இந்த மதத்தில் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. நல்வழியில் செல்ல நாம் எந்த முறையை பின்பற்றினால் என்ன, நல்லபடியாக இருந்தால் அதுவே போதுமானது. எனவே, இங்கு மத மாற்றம் என்பது அவரவர் மனதிற்கு பிடித்த, அமைதியை தரவல்ல ஓர் தேர்வு தான். இதை அனைவரும் புரிந்து ஏற்றுக் கொண்டாலே போதுமானது....

சொந்தமாக தீவுகள் வைத்திருக்கும் பிரபலங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைக்கல் ஜாக்சன்

மைக்கல் ஜாக்சன்

பாப் இசை உலகின் மன்னனாக திகழ்ந்த மைக்கல் ஜாக்சன் இவரது இறப்பிற்கு சில வருடத்திற்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார். இது நிரூபணம் ஆகவில்லை எனிலும் ஊடகங்களில் பெரியளவில் பரபரப்பு செய்திகளாக உலா வந்தன.

ஜூலியா ராபர்ட்ஸ்

ஜூலியா ராபர்ட்ஸ்

"ஈட், ப்ரே லவ்" - Eat, Pray Love, என்ற படத்தில் நடித்த பிறகு ஜூலியா ராபர்ட்ஸ் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். அமைதி மற்றும் ஆன்மாவின் தேடுதலுக்காக இவர் இந்தியாவில் சுற்றுபயணமும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மான்

ரஹ்மான்

ரஹ்மான் ஓர் இந்து தந்தைக்கு மகனாக பிறந்தவர். வளரும் போது இவர் கடவுள் நம்பிக்கை இன்றி நாத்திகராக இருந்தார் என்று கூறப்படுகிறது. பின்னாட்களில் இஸ்லாம் மீது ஏற்பட்ட பற்றினால் மதம் மாறினார்.

ஜார்ஜ் ஹாரிசன்

ஜார்ஜ் ஹாரிசன்

உலகின் தலைசிறந்த கிட்டார் இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜார்ஜ் இந்தியாவிற்கு மேற்கொண்ட ஓர் பயணத்தின் போது கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியவர். இவர் வாழ்க்கை முழுதும் சைவ விரும்பியாகவே வாழ்ந்து வருகிறார்.

டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கிறிஸ்துவ மதத்தில் இருந்து "Scientology" எனும் சுய அறிவு மதத்திற்கு மாறினார்.

ஷர்மிளா தாகூர்

ஷர்மிளா தாகூர்

தேசிய விருது வாங்கிய இந்தி நடிகையான ஷர்மிளா தாகூர், நவாப் மன்சூர் அலி கான் பட்டோடி என்பவரை திருமணம் செய்துக் கொண்டபோது இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். மத மாற்றத்திற்கு பிறகு தனது பெயரை பேகம் ஆயிஷா என்று மாற்றிக் கொண்டார்.

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

சமீபத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார். மற்றும் கருத்து வேறுபாட்டால் இரு முறை விவாகரத்து பெற்ற இவர் மூன்றாவதாக ஓர் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.

நர்கிஸ் தத்

நர்கிஸ் தத்

பிரபல இந்திய நடிகையான நர்கிஸ் தத் இந்தி சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர். இவர் சுனில் தத்தை திருமணம் செய்த பிறகு இஸ்லாமில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். மத மாற்றத்திற்கு பிறகு தனது பெயரை நிர்மலா தத் என்று மாற்றிக் கொண்டார்.

ரிச்சர்ட் கேரி

ரிச்சர்ட் கேரி

பிரபல ஹாலிவுட் நடிகரான ரிச்சர்ட் கேரி கிறிஸ்துவ மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார். புத்த மதத்திற்கு மாறிய பிறகு சுத்த சைவமாக கடைபிடித்து வருகிறார்.

மைக் டைசன்

மைக் டைசன்

பிரபல குத்து சண்டை வீரரான மைக் டைசன் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

மடோனா

மடோனா

பிரபல பாப் இசை பாடகி, கவர்ச்சி மாடல் மடோன கிறிஸ்துவ மதத்தில் இருந்து யூத மதத்திற்கு மாறினார். இவரது பெயரையும் கூட ஈஸ்தர் என்று மாற்றிக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Famous Celebs Who Changed Their Religion

Do you know about the famous celebs who changed their religion? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter