சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிரபலங்கள்!!

By: John
Subscribe to Boldsky

உலக அளவில் பல்வேறு நாடுகளில் பாலியல் வன்கொடுமைகள், ஓர் சாதாரண தினசரி வாடிக்கை என்பது போல நடந்துக் கொண்டிருக்கிறது. சவுதி, அரபு போன்ற இடங்களில் மட்டுமே இதற்கான தண்டனைகள் மிக கடுமையாக அளிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் கூட, அந்த நாடுகளிலும் பாலியல் வன்கொடுமைகள் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கிறது.

18 வயதிற்கு முன்பே தங்களது கற்பை இழந்த பிரபலங்கள் - அம்மாடியோவ்!!!

இன்று பிரபலமாக நம் கண் முன்னே திகழும் சிலரும் கூட சிறு வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் என உங்களுக்கு தெரியுமா? அவர்களில் சிலரை பற்றி இனி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லேடி காகா

லேடி காகா

உலகின் முன்னனின் பாப் இசை பாடகியாக திகழும் லேடி காகா, தனது 19வது வயதிலேயே கற்பழிக்கப்பட்டுள்ளார். இவரை விட 20 வயது மூத்தவர் இவரை கற்பழித்ததாக காகா கூறியுள்ளார்.

கல்கி கோய்ச்லின்

கல்கி கோய்ச்லின்

அனுராக் காஷ்யப்பின் தேவ்.டி (Dev.D) என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் கல்கி கோய்ச்லின். இவர் ஓர் பிரபல செய்தி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், தான் சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். அனுராக் காஷ்யப் தான் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் அனுராக் காஷ்யப், தான் 11 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். ஓர் இளைஞன் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினான் என்றும், அது ஓர் தீய கனவுப் போல இருந்தது என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

சோபியா ஹயாத்

சோபியா ஹயாத்

சோபியா ஹயாத் என்பவர் ஓர் முன்னணி பிரிட்டிஷ் மாடல் ஆவார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் , ஓரிரு ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் பத்து வயதில் இருக்கும் போது, இவரது மாமா ஒருவர் இவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறியுள்ளார்.

அனௌஷ்கா சங்கர்

அனௌஷ்கா சங்கர்

பிரபல சிதார் இசை கலைஞரான அனௌஷ்கா சங்கர், குழந்தையாக இருக்கும் போதே தான் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபப்ட்டதாக ஓர் பெண்ணுரிமை நிகழ்ச்சியில் கூறியிருந்தார். ஓர் குடும்ப நண்பர் தான் இவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என இவர் மேலும் கூறியிருக்கிறார்.

ஆஷ்லே ஜட்

ஆஷ்லே ஜட்

அமெரிக்க திரை மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரமான ஆஷ்லே ஜட், பல முறை தனது குழந்தை பருவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். இவர், ஹாலிவுட்டின் மிக முக்கியமான நடிகை, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் இவர் ஒருவர் ஆவர்.

சோமி அலி

சோமி அலி

பாகிஸ்தானை சேர்ந்த முன்னால் பாலிவுட் நடிகை சோமி அலி, ஓர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், தான் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருந்தார். இவர் சல்மானின் முன்னால் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Who Were Sexually Abused As Children

Do you know about the Celebrities Who Were Sexually Abused As Children? Read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter