ஆஞ்சநேயரின் பிறப்பு பற்றிய ரகசியம்!

By: Ashok CR
Subscribe to Boldsky

பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயர் பிறந்த கதை, அவரது தாயார் அஞ்சனாவின் கதையுடன் தொடர்புடையது. அஞ்சனா கிரி மலைப் பிரதேசத்தில் அஞ்சனா என்ற பெண் குரங்கிற்கும், கேசரி என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் அனுமன் அவதரித்தார். அதற்கு முன், பிரம்மாவின் சபையில் அஞ்சனா ஒரு அப்ஸரஸாக இருந்தாள். ஒரு முனிவரின் தவத்தை களைத்ததற்காக அவள் சாபம் பெற்றாள்.

இங்கு ஆஞ்சநேயர் பிறப்பு பற்றிய கதை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாபம் பெற்ற அஞ்சனா

சாபம் பெற்ற அஞ்சனா

சிறிய வயதில் அஞ்சனா, ஒரு குரங்கு காலை ஆசனமிட்டு தவம் செய்து கொண்டிருப்பதை கண்டாள், அதை பார்த்தவுடன் குதூகலத்தில் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்தாள். சட்டென்று அந்த குரங்கு முனிவராக மாறி தவம் கலைந்து எழுந்தது. கடும் சினம் கொண்ட அந்த முனிவர், அஞ்சனா யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறி விடுவாள் என சாபமிட்டார். மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் அஞ்சனா. தனக்கு குரங்கு முகம் இருந்த போதிலும் தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும் அவள் கேட்டுக் கொண்டாள். சிவபெருமானின் அவதாரமே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்றும், அப்படி பிறந்தவுடன், தான் சாப விமோசனம் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

பூமியில் அவதரித்த அஞ்சனா

பூமியில் அவதரித்த அஞ்சனா

அதனால் சாப விமோசனம் பெற இந்த பூமியில் பிறந்தால் அஞ்சனா. ஒரு காட்டில் வாழ்ந்த அஞ்சனா, ஒரு நாள் ஒரு ஆடவனை சந்தித்து அவன் மீது காதலில் விழுந்தாள். காதலில் விழுந்த அந்த தருணமே அவள் குரங்காக மாறினாள். அவள் அருகில் வந்த அந்த ஆண், தன்னை கேசரி என்றும், தான் குரங்குகளின் அரசன் என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும் உரு மாற முடியும், குரங்காகவும் உரு மாற முடியும். இதை கண்டு ஆச்சரியமடைந்தாள் அஞ்சனா. தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அஞ்சனாவிடம் அவன் கோரினான். அந்த காட்டிலேயே அஞ்சனாவும் கேசரியும் திருமணம் செய்து கொண்டனர். சிவபெருமானை நினைத்து ஆழ்ந்த தவத்தில் இருந்தாள் அஞ்சனா. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவளுக்கு வரம் ஒன்றினை வழங்கினார். முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள்.

பிரசாதத்தை உட்கொண்ட அஞ்சனா

பிரசாதத்தை உட்கொண்ட அஞ்சனா

மறுபக்கம், அயோத்யாவின் அரசனான தசரத சக்கரவர்த்தியும் கூட பிள்ளை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தார். இதனால் மனம் குளிர்ந்த அக்னி தேவன், அரசனிடம் புனிதமான பாயாசத்தை கொடுத்து, அதனை அவருடைய மனைவிகளுக்கு கொடுத்து தெய்வீக தன்மையுள்ள பிள்ளைகளை பெற்றுக் கொள்ளும் படி கூறினார். தன் மூத்த மனைவியான கௌசல்யாவிற்கு அந்த பிரசாதத்தை கொடுக்கும் போது, அதில் சிறிதளவை ஒரு பறவை எடுத்துச் சென்றது. அஞ்சனா தவம் புரிந்த இடத்தருகே அந்த பாயாசத்தை அந்த பறவை விட்டுச் சென்றது. காற்றின் கடவுளான வாயுவிடம், அந்த பாயாசத்தை அஞ்சனாவின் கைகளில் போடுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை விழுங்கினாள். அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை அவள் உணர்ந்தாள்.

ஆஞ்சநேயரின் பிறப்பு

ஆஞ்சநேயரின் பிறப்பு

அதன் பின் குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள். அக்குழந்தை சிவபெருமானின் அவதாரமாகும். அந்த குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது - ஆஞ்சநேயா (அஞ்சனாவின் மகன் என பொருள் தரும்), கேசரி நந்தனா (கேசரியின் மகன் என பொருள் தரும்), வாயுபுத்திரா அல்லது பவன் புத்திரா (காற்றின் கடவுளான வாயு தேவனின் மகன் என பொருள் தரும்). தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் அனுமான். தன் தந்தை கேசரி மற்றும் தாய் அப்சரஸ் அஞ்சனாவின் சக்திகளை அவர் பெற்றார். வாயு தேவனின் மகன் என்பதால் காற்றை போல் மிக வேகமாக செயல்பட்டார். ஆஞ்சநேயரின் பிறப்பால், அஞ்சனா தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். ஆஞ்சநேயர் பிறந்தவுடன், சாபத்தில் இருந்து விமோசனம் பெற்ற அஞ்சனா, வான் உலகுக்கு திரும்பினாள்.

ராம பிரானின் தீவிர பக்தனான ஆஞ்சநேயர்

ராம பிரானின் தீவிர பக்தனான ஆஞ்சநேயர்

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவராகவும், ராம பிரானின் தீவிர பக்தனாகவும் விளங்கினார் ஆஞ்சநேயர். இலங்கையின் அரசனான ராவணனின் கையில் இருந்து சீதா தேவியை மீட்க ராமனுக்கு உதவினார் ஆஞ்சநேயர். நம்முள் புதைந்திருக்கும் நம் சக்திகளை அறிந்து கொள்ள உதவும் ஆஞ்சநேயரின் கதை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Birth Secret Of Lord Hanuman

The story of birth of Hanuman is related with the story of his mother Anjana. Lord Hanuman was born as the son of Anjana, a female monkey, and Kesari, a male monkey, in the Anjana Giri mountain.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter