For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள்!!!

By Ashok CR
|

பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது - அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், மற்றவர்கள் மனதில் பயத்தை உண்டாக்குவதற்கு மற்றொரு வழி என்றும் கூறலாம், இந்த வழக்கங்களின் அவசியத்தைப் பற்றி நம்மில் பலரும் கேள்வி எழுப்புவோம். இன்றைய நவீன உலகத்தில் இவைகள் எப்படி தொடர்புடையாதாக இருக்கும் என நாம் வியக்கவும் செய்வோம்.

இதற்கு முன்னால் பின்பற்றப்பட்டு வந்த இந்த பழக்க வழக்கங்களை நம்மில் பலரும் இன்றைய காலத்தில் மூட நம்பிக்கைகளாக கருதி புறக்கணித்து விடுவோம். ஆனால் அனைத்து இந்து மத மரபுகளும் மூடநம்பிக்கைகளா? இதற்கான பதில் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். இந்து மதம் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்டு, மூட நம்பிக்கைகள் மற்றும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளை ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இதற்கும் உண்மைக்கும் ரொம்ப தூரமாகும்.

இந்து மதத்தின் பல்வேறு சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த காரணங்கள் உள்ளது. கேட்க அர்த்தமற்றதாக இருக்கலாம். ஆனால் இதனை ஆழமாக பார்க்கையில், இந்த பழக்க வழக்கங்களுக்கான உண்மையான காரணம் புலப்படும். அதனை அறியும் போது நீங்கள் வியப்புக்குள்ளாவீர்கள். இந்து மத மரபுகள், அணிகலன்கள் அணிவது மற்றும் இந்துக் கோவில்களின் பின்புலத்தில் உள்ள அறிவியல் சார்ந்த காரணங்களைப் பற்றி நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். இப்போது சில விந்தையான இந்து மத மரபுகளின் பின்புலத்தில் இருக்கும் அருமையான அறிவியல் காரணங்களைப் பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரகண பயம்

கிரகண பயம்

பல இந்துக்களின் வீட்டில், கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பாக இந்நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும்; அப்போது தான் அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தை எந்தவித குறைபாடும் இல்லாமல் பிறக்கும். அதே போல் கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்பப்படுகிறது. சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இதனால் அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கிரகண பயம்

கிரகண பயம்

இதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், கிரகணத்தை நேரடியாக உங்கள் கண்களால் பார்த்தால், சூரிய ஒளியின் தீவிரத்தால் உங்கள் விழித்திரை வெகுவாக பாதிக்கப்படும். ஒளி உணர் அணுக்களுக்கும், கம்பிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதால், சில நேரங்களில் விழித்திரை எரிச்சல் கூட உண்டாகலாம். மேலும் கிரகணத்தின் போது, நுண்ணுயிரிகள் முனைப்புடன் செயல்பட்டு உணவுகளை கெடச் செய்யும். அதனால் உணவுகளில் துளசி இலையை போடும் போது, அதிலுள்ள மருத்துவ குணங்களால் உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

வடக்கை நோக்கி தலை வைத்து படுக்காதீர்கள்

வடக்கை நோக்கி தலை வைத்து படுக்காதீர்கள்

வடக்கு என்பது சாத்தானின் திசை என்பதே இதற்கு பின்னணியில் நீங்கள் அறிந்திருக்கும் ஒரே காரணமாக இருக்கும். அதனால் அந்த திசையை நோக்கி தலை வைத்து தூங்காதீர்கள் என கூறுவார்கள். இருப்பினும் இதற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா? வடக்கு திசையில் தலை வைத்து படுக்கும் போது, அது வட துருவம் என்ற காரணத்தினால், உங்கள் தலை ஒரு காந்தமாக செயல்படும். தூங்கும் போது வடக்கு திசையை நோக்கி தலை இருந்தால், உடலின் வட துருவமும் பூமியின் வட துருவமும் ஒன்றோடு ஒன்று தள்ளும். இதனால் உங்கள் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

இரவு நேரத்தில் அரச மரம் அருகில் போகாதீர்கள்

இரவு நேரத்தில் அரச மரம் அருகில் போகாதீர்கள்

இரவு நேரத்தில் அரச மரத்தில் பேய் குடி கொண்டிருக்கும் என்பதெல்லாம் பொய். அந்த நேரத்தில் தான் மரத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளிவரும். இது மனிதர்களுக்கு நல்லதல்ல. அதனால் இரவு நேரத்தில் அரச மரம் அருகில் போக வேண்டாம்.

எலுமிச்சை மிளகாய் திருஷ்டி கயிறு

எலுமிச்சை மிளகாய் திருஷ்டி கயிறு

எலுமிச்சை மிளகாய் திருஷ்டி கயிறு என்பது தீய கண்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய் மூடநம்பிக்கை தோன்ற காரணமாக இருந்தது என்னவென்று தெரியுமா? அவைகளுடைய குணப்படுத்தும் குணத்தினாலேயே. இவை இரண்டிலுமே பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் நம் முன்னோர்கள் அதன் பயனை விளக்கும் விதமாக அதனை சடங்குகளில் பயன்படுத்தினார்கள். அதுவே நாளடைவில் ஒரு புகழ் பெற்ற வழக்கமாக மாறி விட்டது.

ஈமச்சடங்கு முடிந்த பிறகு குளித்தல்

ஈமச்சடங்கு முடிந்த பிறகு குளித்தல்

பிரேத ஆத்மாக்கள் உங்களை பிடித்து விடும் என்ற மூட நம்பிக்கையைத் தான் இதற்கு காரணமாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அது நுண்ணுயிர்கள் சம்பந்தப்பட்டவையாகும். ஒருவர் இறந்த பிறகு அவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கும். ஈமச்சடங்கில் கலந்து கொள்பவர்கள் இறந்த நபருக்கு அருகில் தான் இருக்க வேண்டி வரும். இதனால் அழுகிக் கொண்டிருக்கும் இறந்த உடலில் இருந்து வரும் பாக்டீரியாக்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். அதனால் தான் ஈமச்சடங்கை முடித்த கையோடு, பிற வேலைகளை செய்வதற்கு முன் குளிக்க வேண்டும்.

பயணத்திற்கு முன் தயிரும் சர்க்கரையும் உண்ணுவது

பயணத்திற்கு முன் தயிரும் சர்க்கரையும் உண்ணுவது

வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், தயிரும் தேனும் கொடுப்பது இரு வழக்கமாக உள்ளது. இது அதிர்ஷ்டமானது என நம்பப்படுகிறது. தயிரில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது. கூடுவே இயற்கை சர்க்கரையும் சிறிதளவில் உள்ளது. இதனால் வயிற்றுக்கும், செரிமான அமைப்பிற்கும் நல்லதாகும். அதனால் வெளியே செல்லும் முன் இதனை உண்ணச் சொல்கிறார்கள். இதில் குளிர்ச்சி தன்மையும் உள்ளது. அதனால் அழுத்தம் நிறைந்த வேலைகளை செய்ய கிளம்புவதற்கு முன் இதனை உண்ண வைக்கிறார்கள்.

பாம்பை கொன்ற பிறகு அதன் தலையை நசுக்குவது

பாம்பை கொன்ற பிறகு அதன் தலையை நசுக்குவது

பாம்பை கொல்ல முயற்சி செய்பவரை பாம்பு அதன் கண்களால் படிந்து வைத்துக் கொள்ளும் என கூறுவார்கள். அதனால் அதன் தலையை நசுக்கி கொல்லுவார்கள். ஆனால் அதற்கு சொல்லப்படும் காரணம் தவறானது. பாம்பை கொன்ற பிறகும் கூட அதன் பல்லில் விஷம் இருக்கும். இதனால் அது இறந்தாலும் ஆபத்தானதே. அதனால் பாம்பின் தலையை நசுக்கினால் அந்த விஷம் அழிந்து விடும். துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை எதிர் செயலாற்றி, கடிக்க செய்யலாம்.

குடையை வீட்டிற்கு வெளியே திறப்பது

குடையை வீட்டிற்கு வெளியே திறப்பது

குடையை வீட்டிற்குள் திறக்க கூடாது. அதற்கான காரணம் மிகவும் சாதாரணமானவை. அந்த காலத்தில் குடிகளுக்கு கூர்மையான கம்பிகள் இருந்தது. இதனால் அதனை வீட்டிற்குள் திறக்கும் போது, அது பிறரை காயப்படுத்தலாம் அல்லது பொருட்களை உடைக்கலாம். அதுவே ஒரு வழக்கமாக மாறி நாளடைவில் மூடநம்பிக்கையாக மாறி விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Scientific Reasons Behind Hindu Practices

In this article we will discuss about the amazing scientific reasons behind some bizarre Hindu practices which often do not make sense to us.
Desktop Bottom Promotion