நடிகர் தனுஷ் நடித்த திரைப்படங்கள் கூறும் காதல் டிப்ஸ் - காதலர் தினம் ஸ்பெஷல்!

Posted By: Viswa
Subscribe to Boldsky

காதல்! சிலர் இனிமையானது என்பார்கள், சிலர் கொடுமையானது என்பார்கள். சிலருக்கு அது வரம். சிலருக்கு அது சாபம். உண்மையில் காதல் எந்த வகையை சார்த்தது, காதல் இனிக்க சர்க்கரையோ அல்ல கசக்க பாகற்காயோ அல்ல. சொல்லப்போனால் அது ஒரு அஞ்சறைப் பெட்டியைப் போல அனைத்தும் கலந்த ஒரு அற்புத உணர்வு தான் காதல். காதலிக்க காதலும், காதலியும் மட்டுமே போதும். ஆனால், காதலின் பயணத்தில் அதன் எதிர்பார்ப்பினையும், கனவுகளையும் நிறைவற்றிட பணமும் தேவைப்படும். ஆனால், பணம் மட்டுமே காதலாக அல்ல வாழ்க்கையாக இருந்தால் அது, நிஜமான காதலாகவோ, வாழ்க்கையாகவோ இருந்திட முடியாது.

இங்கு காதலர் தினத்தை முன்னிட்டு, நாம் நடிகர் தனுஷின் திரைப்படங்களின் மூலமாக காதலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்னவென்று தான் பார்க்க போகிறோம். காதல் என்பது தெய்வீகமானது தான் அதை எப்படி பூஜை செய்தால் வரம் கிடைக்கும் என காணலாம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துள்ளுவதோ இளமை

துள்ளுவதோ இளமை

காதல் என்பது வயதினை கடந்தது என்று நாம் அனைவரும் அறிந்ததே. பள்ளி பருவத்தில் காதல் கொண்டவரின் எண்ணிக்கை வானத்தின் நட்சத்திரங்களை காட்டிலும் அதிகம். தனுஷ் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை பள்ளி பருவ காதல் வகை ஆகும். பள்ளி பருவத்தில் மீசை அரும்புவதற்கு முன்னரே பல மாணவர்களுக்கு காதல் அரும்பிவிடுகிறது. காதல் தவறில்லை. ஆனால், அதன் பெயர் சொல்லி கூடலில் ஈடுப்படுவதுதான் தவறு.

காதல் கொண்டேன்

காதல் கொண்டேன்

கல்லூரி வாழ்கையில் காதல் கொண்டவர்களை விட, காதலை மறைத்தவர்களும், ஏதோ காரணம் காட்டி மறுத்தவர்களும் தான் அதிகமாய் இருகின்றனர். யார் எதிரில் வந்தாலும் அவள் ஐஸ்வர்யா ராய் தீபிகா படுகோனேவாக இருந்தாலும். தன் காதலி மட்டுமே உலக அழகியாய் தோன்றும் காலம், கல்லூரி காலம்.

திருடா திருடி

திருடா திருடி

காதல் மோதலில் ஆரம்பிக்கும் என கூறுவார்கள். ஆம், காதல் உறவு மட்டும் தான் மோதலில் ஆரம்பித்து காதலில் உருகி ஊடலில் முடிக்கிறது. சண்டை சச்சரவு இல்லாத காதல் உப்பு இல்லாத உணவை போல. சுவைக்காது!

தேவதையை கண்டேன்

தேவதையை கண்டேன்

காதலின் மூலம் வாழ்கையில் மாற்றங்கள் கண்டவர்களும் உள்ளனர், ஏமாற்றங்கள் கண்டவரும் உள்ளனர். வெற்றிகளுக்கு நிகராய் தோல்விகளையும் கொண்ட ஒரே உறவு காதல் தான். முன்பு ஆண்களினால் ஏமாற்றம் கண்ட பெண்களின் பழி வாங்கும் படலம் 21 ஆம் நூற்றாண்டில் நடைபெற்றுக் கொண்டிருகிறது.

திருவிளையாடல் ஆரம்பம்

திருவிளையாடல் ஆரம்பம்

என்னதான் காதலிக்க இரண்டு மனம் மட்டுமே போதும் என்ற போதிலும். அதில் வெற்றி கண்டு இல்லற வாழ்க்கையை தொடங்க பணமும் தேவைப்படுகிறது. திருமணத்தைப் பற்றி யோசிக்கும் முன், நமது வாழ்க்கையை எவ்வாறு, எந்த இடத்தில் இருந்து தொடங்க போகிறோம் என்று நினைவில் கொள்ளுங்கள். திருமணம் செய்த சில மாதங்களிலேயே வாழ்க்கை கசந்திட பணம் மட்டுமே காரணமாய் இருந்துவிட கூடாது.

யாரடி நீ மோகினி

யாரடி நீ மோகினி

சிலரது காதல் கதை கொஞ்சம் வேடிக்கையாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். ஏனெனில், நிச்சயம் ஆன பெண்ணைக் காதலித்து கரம் பிடிப்பவர்களுக்கு நெஞ்சில் கொஞ்சம் தில்லும் வேண்டும். அப்போதும் கூட உங்களுக்கு நல்ல வேலை இருக்க வேண்டும் என்பது நிபந்தனைக்கு உட்பட்டது.

படிக்காதவன்

படிக்காதவன்

காதலிக்கும் போது சிலர் செய்யும் தவறு, படிப்பை பாதியிலேயே விட்டு விடுவது. வாழ்க்கைக்கு காதல் மட்டும் போதாது நண்பர்களே, படிப்பும் தேவை. நீங்கள் நினைத்தபடி, ஆசைப்பட்ட படி, காதலிக்கும் போது இரவில் கொஞ்சி கொஞ்சி பேசியப்போது கனவில் கட்டிய வீட்டினை நிஜத்திலும் கட்டிட பணம் தேவை. அதற்கு படிப்பு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

காதலிக்கும் போது கொஞ்சம் பெற்றோரையும் நினைத்து பாருங்கள். உங்களைப் பெற்றெடுத்ததில் இருந்து, படிக்க வைத்தது வரை, அவர்களது இரத்தம் இன்றி ஒரு அணுவும் அசைந்துருக்காது. பெற்றோரின் ஆசிகள் இன்றி நீங்கள் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் வாழ்க்கை இனிக்காது.

மரியான்

மரியான்

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும் காதல் என்பார்கள். ஆனால், இன்றைய நிலையோ அந்தோ பரிதாபம். சின்ன சின்ன சண்டைகளைக் காரணமாக காட்டி பொத்தி பொத்தி வைத்திருந்த மொத்த அன்பையும் உடைத்தெறிந்து விட்டு சென்றுவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இச்சையை காதலென்று கூறித் திரியும் சிலர். தேசம் விட்டு ஹேசம் சென்றாலும், கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் மரித்துப் போகாது நிலைத்து இருப்பதே உண்மை காதல்.

அம்பிகாவதி

அம்பிகாவதி

இன்றைய இளைஞர்களின் மனநிலை மிகவும் குறுகியதாக இருக்கிறது. காதல் தோல்வி என்றால் அடுத்து அவர்களது மனதில் தோன்றுவது தற்கொலை அல்லது மனம் உடைந்து சோகமாக திரிவது. காதல் மட்டும் அல்ல காதல் நினைவுகளும் இனிமையானதுதான். மீண்டும் உங்களுக்கு ஒரு நல்ல இல்வாழ்க்கை அமையும் என்பது உறுதி. உங்களைச் சுற்றி உங்களை நேசிக்கும் மனங்களை நீங்களும் நேசியுங்கள் வாழ்க்கை சிறக்கும்.

அனேகன்

அனேகன்

அநேகமாக இதை படித்துவிட்டு, உங்கள் காதலை வரும் காதலர் தினத்தன்று முதல் புதியதாய், புத்துணர்ச்சியுடன் தொடங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன். தமிழ் போல்ட் ஸ்கை உங்கள் அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Love Tips From Dhanush Films

Do you know there are 10 love tips from dhanush films will help you to get success in love.
Story first published: Friday, February 13, 2015, 10:04 [IST]