கடக ராசி ஆண்களை புரிந்து கொள்ள வேண்டுமா? இத படிச்சு பாருங்க...

By: Ashok CR
Subscribe to Boldsky

கடக ராசி நண்டை குறிக்கும். ராசி நாள்காட்டி படி, கடக ராசியில் பிறந்தவர்கள், பொதுவாக தங்கள் குடும்பத்தையும். குடும்பத்தினரையும் விரும்புவார்கள். ஒட்டு மொத்த ராசிகளிலேயே கடக ராசி தான் கனிவான ராசியாகும்.

நிலாவால் ஆளப்படும் கடக ராசி ஆண்கள், ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாகும் தகுதியை பெற்றிருப்பார்கள். அதற்கு காரணம் அது அவர்களுடைய களமாகும். நம் அழகிய பூமியின் வரலாற்றை ஆய்வு செய்தால், மிக வெற்றிகரமாக திகழ்ந்த அரசியல்வாதிகள் எல்லாம் கடக ராசிக்காரர்கள் என்பது தெரியும்.

சிம்ம ராசிக்காரர்களை தனித்து காட்டும் அட்டகாசமான குணாதிசயங்கள்!!!

கடக ராசிக்காரர்கள் என்பவர்கள் மிகப்பெரிய ராட்சச கருமை நிறைந்த துவாரம் போன்றவர்கள். அவர்களின் உணர்ச்சிகளுக்கு முடிவே கிடையாது. உணர்ச்சியுள்ள, அக்கறையுள்ள மற்றும் உணர்ச்சிமிக்க பண்புகள் உடையவர்களாக இருப்பார்கள். வெளியில் இருந்து பார்க்கையில் ஆணவத்துடன் இருப்பதை போல் தெரிந்தாலும், உண்மையில் அவர்கள் அப்படி இல்லை. தங்கள் உணர்வுகளை மறைக்க நினைப்பவர்கள் அவர்கள்.

விருச்சிக ராசிக்காரர்களின் குணாதிசயங்கள்!

இப்போது கடக ராசி ஆண்களின் குணநலன்கள் பற்றி விரிவாக காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகப்படியான நண்பர்களை உருவாக்குவார்கள்

அதிகப்படியான நண்பர்களை உருவாக்குவார்கள்

பிறருடனான உறவில், கடக ராசி ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் நண்பர்களையும், காதலர்களையும் உருவாக்குவார்கள். தங்களை விட்டு செல்ல அவர்கள் தங்கள் நண்பர்களையும் காதலர்களையும் விடுவதில்லை. தங்கள் குணங்களை அவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுவார்கள்.

அதிகமாக நேசிப்பார்கள்

அதிகமாக நேசிப்பார்கள்

மனரீதியாக உணர்ச்சி மிக்கவர்களாகவும், அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பதால், மிகப்பெரிய இதயத்துடன் அவர்கள் பிறரை நேசிப்பார்கள். ஆனால் இதை அவர்களின் பலவீனமாக நீங்கள் நினைத்தால், நீங்கள் நினைப்பது தவறு. நிலாவினால் ஆளப்படும் அவர்கள் திடமான பாதுகாப்பு வளையத்தை கொண்டிருப்பதால், மற்றவர்களை அவர்கள் சுலபமாக கவனித்து, அதற்கேற்ப நடவடிக்கையை எடுக்கலாம்.

உணர்ச்சிமிக்கவர்கள்

உணர்ச்சிமிக்கவர்கள்

உறவு என்று வந்து விட்டால், கடக ராசி ஆண்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். சொல்லப்போனால், கடக ராசி ஆண்கள் ரொமாண்டிக்கான கதாநாயகர்கள். தன் காதலி அல்லது மனைவியின் தேவையை கடக ராசி ஆண்களால் உணர முடியும். அவர்கள் தாய்மை உள்ளம் கொண்டவர்கள் என்றாலும், நேரத்திற்கேற்ப ஒரு ஆண்மகனாக நடந்து கொண்டு தன் காதலியை இன்னல்களில் இருந்து காப்பார்கள்.

மணப்பவர் அதிர்ஷ்டசாலி

மணப்பவர் அதிர்ஷ்டசாலி

உங்கள் காதலன் கடக ராசிக்காரராக இருந்தால், நீங்கள் தான் இந்த உலகத்திலேயே அதிர்ஷ்டசாலி. நீங்கள் கடக ராசிக்காரரான ஒருவரை காதலித்தால், அவர் அவரின் தேவையை உங்களிடம் வெளிப்படுத்த விரும்ப மாட்டார். அதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் காயப்படப் போவது நீங்கள் தான்.

முரட்டுத்தனமான குணம் இருந்தாலும் மென்மையானவர்கள்

முரட்டுத்தனமான குணம் இருந்தாலும் மென்மையானவர்கள்

கடக ராசி ஆண்கள் அனைத்தையும் நேரடியாக செய்வார்கள். அதனால் நீங்களும் அதே போல் தான் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் விருப்பத்தை அவரிடம் காட்டுங்கள். அதை தான் அவர்களும் விரும்புவார்கள். கடக ராசி ஆண்களிடம் நீங்கள் அதிகமாக கடலை போட முடியாது. அவர்களும் அதனை விரும்ப மாட்டார்கள். கடக ராசி ஆண்கள் ஆக்ரோஷமான குணத்தை கொண்டிருக்கலாம். ஆனால் அதனை நீங்கள் புரிந்து கொண்டு அதனை பத்திரமாக கையாள வேண்டும். ஆனால் கடக ராசி ஆண்களின் உள்ளம் மிகவும் மென்மையானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வேலை விஷயம்

வேலை விஷயம்

கடக ராசி ஆண்கள் சிறந்த மருத்துவர்களாக வருவார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய அக்கறையான குணம். அவர்கள் மிகுந்த வெற்றிகரமான வக்கீலாகவும் நல்ல துப்பறியும் நிபுணர்களாகவும் இருப்பார்கள். அவர்களால் தெளிவாக பேசியும் வாதாடவும் முடியும். அதற்கு காரணம் அவர்களின் சித்தாந்தம் நேர்மறையான நீதியின் அடிப்படையில் அமைவதாலேயே ஆகும். மென்மையான அவர்களின் இதயத்தால், அடுத்தவர்களின் காதலை சுலபமாக பெறுவார்கள்.

கடக ராசிக்கு அரசியல் தான் சிறந்தது

கடக ராசிக்கு அரசியல் தான் சிறந்தது

கடக ராசி ஆண்களுக்கு சிறந்த தொழில் துறையாக விளங்குவது அரசியல். அதில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள். இதனை படிக்கும் நீங்கள் கடக ராசி ஆண் என்றால், கண்டிப்பாக உங்களின் குணத்தை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தீய அம்சங்களை உங்களால் சரிசெய்ய முடிந்ததென்றால், இந்த உலகத்தில் நீங்கள் தான் சிறந்த மனிதராக விளங்குவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நடைமுறையுடனான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Understanding The Cancer Man

The Cancer is represented by the symbol Crab. Those who are born under this Zodiac Sign (Karka), the 4th in the Zodiac calendar, usually love their homes and their roots. This is also the most empathetic Sign of the entire Zodiac.
Story first published: Friday, September 26, 2014, 11:34 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter