ராமாயணத்தைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

ராமாயணத்தை எழுதியது வால்மீகி முனிவராகும். இந்த மகா காவியத்தின் முழுக் கதையையும் நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ராமாயணத்தில் உள்ள சில அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பற்றி நமக்கு தெரிவதில்லை. ராமாயணம் என்பது சந்தேகேமில்லாமல் ஒரு தரமான இலக்கியம். இந்த காவியத்தின் ஒரு பக்கம் தர்மத்தின் (கடமை உணர்வு, உண்மையான குணம் போன்றவைகள்) முக்கியத்துவத்தை விளக்கும். இது நமக்கு தெளிவு மற்றும் அறிவூட்டும் வகையில் அமைந்துள்ளது. இதனை வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்தில் படிக்கும் போதும் அது பொருத்தமாகவே இருக்கும்.

ராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா?

நவீன காலத்தில் கூட, ராமாயணம் நமக்கு கற்று தந்துள்ள பாடங்கள் விலைமதிப்பற்றதாக விளங்குகிறது. விலைமதிப்பற்ற நம் பண்பாட்டைப் பற்றி பல முறை கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை கூறப்படும் போதும், அதன் மாயம் நம்மை இன்னும் அதிகமாகவே மயக்கிடும். அது தான் அதன் அழகே. அதனால் தான் பழங்கால நூல்களை நாம் மதித்து, அவைகளை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்.

இராவணனின் மகள் சீதா தேவியா...?

நேர்மை, உண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக ஸ்ரீ ராமர் விளங்கினார். அவரின் புனித எழுத்துக்களின் மூலம் சரியான பண்புகளை நாம் கற்றுக் கொள்ள முடியும். சொல்லப்போனால், பண்புள்ள மனிதருக்கு சிறந்த உதாரணமாக விளங்கியவர் தான் ராம பிரான். இதோ, ராமாயணத்தை பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லக்ஷ்மணரின் நேர்மை

லக்ஷ்மணரின் நேர்மை

14 வருடம் நீடித்த வனவாச காலத்தின் போது, ராம பிரானின் நேர்மையான சகோதரரான லக்ஷ்மணர் தூங்கவே இல்லை! ராமாயணத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களில் இதுவும் ஒன்றாகும். ராம பிரானை பாதுகாக்க தினமும் இரவு அவர் விழித்திருப்பாராம். இங்கே அவரின் நேர்மை தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உயரிய பண்பாகும்.

விடுதலையே ராவணனின் விருப்பம்

விடுதலையே ராவணனின் விருப்பம்

ராமபிரானின் கைகளால் ஒரு நாள் மரணிப்போம் என ராவணனுக்கு தெரிந்தது தான். ஆனாலும் கூட அப்படி இறப்பதற்கு அவருக்கு விருப்பமே. அதற்கு காரணம், கடவுள் அவதாரத்தின் கைகளால் இறப்பது அவருக்கு மோட்சத்தை (விடுதலை) அளிக்கும். ராமாயணத்தை பற்றி நமக்கு தெரியாத தகவல்களில் இதுவும் ஒன்றாகும். விடுதலையை தான் ராவணன் இலக்காக கொண்டுள்ளார் என நமக்கு தெரியாது. அதனால் தான் இறைதன்மையுள்ள ராமபிரானின் கைகளால் இறப்பதற்கு அவர் தயாராக இருந்தார்.

ராவணனின் கல்வி பின்புலம்

ராவணனின் கல்வி பின்புலம்

ராவணன் சிவாபெருமானின் வெறித்தனமான பக்தனாவார். அறிஞரான அவர் கலைகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ராமாயணத்தின் உண்மையான தகவல்களில் இதுவும் ஒன்றாகும். கண்மூடித்தனமான ஆசைகளை கொண்டவர் தான் ராவணன் என நம்மில் பலரும் நினைத்து கொண்டிருக்கிறோம். அவரின் அழிவுக்கு காரணம் அவரின் பேராசைகள் தான் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. ஆனாலும் கடவுள்களுக்கு எதிராக தனக்கு தானே குழியை வெட்டி கொள்வதற்கு முன்பு, அதிகமான கல்வி அறிவை பெற்றவராவார். இதன் மூலம் உலகத்தில் உள்ள சோதனைகள் மற்றும் அனைத்து தீயவைகளுக்கும் பேராசையே காரணமாக உள்ளது என்ற பாடத்தை நாம் கற்றுக் கொள்ளலாம்.

பாலம்

பாலம்

சமுத்திரத்தின் மீது கட்டப்பட்ட பாலம் வெறும் ஐந்து நாட்களில் முடிக்கப்பட்டது. ராமாயணத்தில் உள்ள சுவாரசியமான தகவல்களில் இதுவும் ஒன்றாகும். அந்த பாலத்தை கட்டிய ராணுவத்தின் கட்டுமான தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆற்றல்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். திட்ட மேலாண்மை ஆற்றல்கள் மற்றும் திட்டமிடும் உத்திகளுக்கு கரகோஷம் எழுப்பாமல் இருக்க முடியுமா?

தசரதனின் வயது

தசரதனின் வயது

தசரத மகாராஜா ராமபிரானை பெற்றெடுத்த போது அவருக்கு வயது 60. ராமாயணத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களில் இதுவும் ஒன்றாகும். அதற்கு காரணம் தசரதனை 30 வயது ஆளாகவே நாம் கற்பனை செய்து வைத்துள்ளோம்.

இன்னும் ஆழமாக பார்த்தோமானால், இந்த காவியம் இன்னும் பல சுவாரசியமான தகவல்களை அளிக்கிறது. அதையும் தாண்டி, அது கற்றுத் தரும் பாடங்கள் அனைத்தும் விலைமதிப்பற்றதாகும். சொல்லப்போனால், இன்றைய உலகத்தில் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கான கருவிகளாக கருதலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Facts About Ramayana

Ramayana was authored by the sage Valmiki. We all know the whole story of this great epic, but none of us know about some shocking facts about ramayana.