மகாபாரதத்தில் வரும் மிகவும் புகழ்பெற்ற காதல் கதைகள்!!!

Posted By: Staff
Subscribe to Boldsky

மிகப்பெரிய இதிகாசங்களுள் ஒன்று தான் மகாபாரதம். மகாபாரதமானது பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் மகன்களிடையே நடைபெற்ற பெரும் போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இந்த மகாபாரதத்தை வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக கூறப்படுகிறது. இத்தகைய மகாபாரதத்தைப் படிக்க ஆரம்பித்தால், கதைகள் வந்துகொண்டே இருக்கும். ஏனெனில் அந்த அளவில் இந்த இதிகாசத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன.

நாரதர் ஏன் விஷ்ணுவை சபித்தார்?

அதுமட்டுமின்றி, மகாபாரதத்தில் பல காதல் கதைகள் உள்ளது. அதிலுள்ள சில கதைகள் புகழ் பெற்றதாகவும், பலரும் அறிந்ததாக இருந்தாலும் கூட சில கதைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மகாபாரதத்தில் உள்ள பல கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த, நீங்கள் கேட்டிராத சில காதல் கதைகளைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரீ கிருஷ்ணாவும்.. அவரின் 16,108 மனைவிகளும்..

ஸ்ரீ கிருஷ்ணாவும்.. அவரின் 16,108 மனைவிகளும்..

16,108 பேர்களில் 16,000 பேர்கள் பல காலம் காத்திருக்காவிட்டாலும் கூட, ஸ்ரீ கிருஷ்ணரை மணக்க மறு அவதாரம் எடுத்து வந்தார்கள். தாங்கள் எப்படி காதலிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதன் படியே அவர்களை காதலிக்கும் சக்தியை கொண்டுள்ள ஒரே கடவுளாக கிருஷ்ணர் இருப்பதால், பிறரை சந்தோஷப்படுத்தும் முதன்மையான கடவுளாக அவர் விளங்குகிறார்.

திரௌபதியும்.. பாண்டவர்களும்..

திரௌபதியும்.. பாண்டவர்களும்..

ஐந்து பாண்டவ சகோதரர்களையும் திருமணம் செய்தவர் தான் திரௌபதி. ஒவ்வொரு கணவனுக்கும் அர்பணிப்பை அளிக்க வேண்டியது அவரது கடமையாக இருந்தது. அதுமட்டுமல்லாது நீதியை நிலை நாட்டிட சகோதரர்கள் அனைவரும் திரௌபதியை நம்ப வேண்டியதாயிருந்தது.

காந்தாரியும்.. திருதராஷ்டிரனும்..

காந்தாரியும்.. திருதராஷ்டிரனும்..

விசித்திரவீரியனின் மறைவிற்கு பிறகு தன் தாய் சத்யவதி தன் முதல் மகனான வேத வியாசரை அனுப்பி வைத்தார். தன் தாயின் விருப்பப்படி, விசித்திரவீரியனின் இரண்டு மனைவிகளையும் சந்தித்து, தன் யோக சக்தியால் ஒரு ஆண் குழந்தையை வரம் அளிக்க சென்றார். வியாசர் அம்பிகாவை (அம்பாவின் சகோதரி) சந்தித்த போது, கொழுந்து விட்டு எரியும் கண்களோடு அச்சமூட்டும் தோற்றத்துடன் அவர் காணப்பட்டார். பயந்து போன அம்பிகா தன் கண்களை மூடிக் கொண்டார். மகாபாரதத்தை எழுதியவர் வேத வியாசர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தாரி மற்றும் திருதராஷ்டிரன் அவர்களின் காதல் கதை அவர்களின் திருமணத்திற்கு பிறகே ஆரம்பித்தது. திருதராஷ்டிரனை சந்தித்த காந்தாரி அவர் கண் பார்வை அற்றவர் என்பதை உணர்ந்தார். தன் கணவனுக்கு கண் பார்வையால் கிடைக்கும் சந்தோஷம் கிட்டாத போது தனக்கும் அது தேவையில்லை என்ற முடிவை எடுத்தார். திருமணத்திற்கு பிறகு தன் வாழ்நாள் முழுவதும் தன் கண்களை கட்டிக் கொண்டே வாழ்ந்தார்.

அர்ஜுனனும்.. உலூபியும்..

அர்ஜுனனும்.. உலூபியும்..

உலூபி என்பவர் நாக இளவரசியாவார். அர்ஜுனன் மீது காதலில் விழுந்த போது அவரை கடத்தி கொண்டு சென்றார். திரௌபதியுடனான உறவில் மட்டும் தான் பிரம்மச்சரிய விதிமுறைகள் பொருந்தும்; பிற பெண்களுடனான உறவில் பொருந்தாது, என அவருடன் இணைவதற்காக, பின்னர் அவரை சமாதானப்படுத்தினார். தண்ணீரில் இருக்கும் போது அர்ஜுனனை தாக்க முடியாது என்ற வரத்தையும் அவர் பின்னர் அளித்தார்.

குறிப்பு: இது நடந்த போது, அர்ஜுனன் ஒரு வருட காலத்திற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

ருக்மணியும்.. ஸ்ரீ கிருஷ்ணரும்..

ருக்மணியும்.. ஸ்ரீ கிருஷ்ணரும்..

ருக்மணி குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொள்ள அவரை கடத்தினார் ஸ்ரீ கிருஷ்ணர். இருப்பினும் அவரோ ஸ்ரீ கிருஷ்ணர் மீது காதலில் தான் இருந்தார்.

அர்ஜுனனும்.. சித்ரங்கடாவும்..

அர்ஜுனனும்.. சித்ரங்கடாவும்..

சித்ரங்கடா என்பவர் மணிப்பூரின் இளவரசியாவார். காவேரி ஆற்றங்கரையில் தான் அர்ஜுனன் மணிப்பூர் ராஜ்யத்தை கண்டார். சித்ராவாஹனா தான் இந்த ராஜ்யத்தின் மன்னராவார். அவரின் புதல்வியான சித்ரங்கடா மிகவும் அழகிய பெண்ணாகும். அவரை பார்த்த நொடியிலேயே அவர் மீது காதலில் விழுந்தார் அர்ஜுனன். அவரை கரம் பிடிக்க அர்ஜுனன் அனுமதி கேட்ட போது, அவர்களுக்கு பிறக்க போகும் புதல்வன் மணிப்பூரில் வளர்க்கப்பட்டு, தனக்கு பின் மணிமகுடத்தை சூட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் அர்ஜுனன். அவர்களுக்கு பாப்ருவாஹனா என்ற புதல்வன் பிறந்தவுடன், தன் சகோதர்களுடன் சேர்ந்து கொள்ள, தன் மனைவியையும் புதல்வனையும் விட்டு விட்டு, இந்திரபிரசாதம் சென்றார் அர்ஜுனன். சித்ராவாஹனாவின் மரணத்திற்கு, மணிப்பூரின் அரசரானார் பாப்ருவாஹனா. மகாபாரத போருக்கு பிறகு, தன் சொந்த புதல்வன் பாப்ருவாஹனாவாலேயே அர்ஜுனன் தோற்கப்பட்டார்.

அர்ஜுனனும்.. சுபத்ராவும்..

அர்ஜுனனும்.. சுபத்ராவும்..

அர்ஜுனனும் சுபத்ராவின் சகோதரனான கடாவும் துரோணாச்சாரியாவிடம் ஒன்றாக பயிற்சி எடுத்தவர்கள். ஒரு வருடத்திற்கு நாடு கடந்தியிருந்த போது, துவாரகாவிற்கு சென்றிருந்த போது, சுபத்ராவின் இருப்பிடத்திற்கு அவர் அழைக்கப்பட்டார். அப்போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின் ஸ்ரீ கிருஷ்ணரின் தங்கையான சுபத்ராவை அர்ஜுனன் மணந்தார். சுபத்ராவை கடத்திச் செல்லுமாறு அர்ஜுனனுக்கு அறிவுரை வழங்கினார் ஸ்ரீ கிருஷ்ணர். திரௌபதியை சுபத்ரா சந்தித்த போது, தனக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த திருமணத்தை பற்றி உடனே அவரிடம் சொல்லவில்லை. அவருடன் நட்பு பாராட்டிய ஒரு மணிநேரம் கழித்து அந்த உண்மையை அவரிடம் கூறினார். திரௌபதியும் அவரை ஏற்றுக் கொண்டார்.

ஹிடிம்பாவும்.. பீமனும்..

ஹிடிம்பாவும்.. பீமனும்..

குந்தி தேவியின் புதல்வன் தான் பீமன். ஹிடிம்பா என்பவர் நர மாமிசம் உண்பவர். பீமனின் மீது காதலில் விழுந்த அவரின் வாழ்க்கை அதனால் அடியோடு மாறியது. திருமணத்திற்கு பிறகு, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். அதன் பின் பீமன் அவரை பிரிந்து சென்றார். அதன் பின் கதோட்கஜனை பெற்றெடுத்த ஹிடிம்பா, எதற்கும் வருத்தப்படாமல் அவரை தனியாக வளர்த்தார்.

சத்யவதியும்.. ரீதி பரஷரும்..

சத்யவதியும்.. ரீதி பரஷரும்..

பரஷர் என்பவர் நன்றாக அறியப்பட்ட, மதிப்புக்குறிய முனிவராவார். மிகுந்த பக்தியின் மூலமாக பல யோக சக்திகளை கொண்டவர் அவர். டாஷ்ராஜா என்ற மீனவரின் மகளான சத்யவதி, யமுனா நதியை கடக்க, படகின் மூலம் மக்களை அழைத்து சென்று வந்தார். ஒரு நாள் தன் படகில் பரஷர் முனிவரை அவர் அழைத்துச் சென்றார். அவர் அழகில் மயங்கிய முனிவர், அவருடன் உடலுறவில் ஈடுபடும் தன் விருப்பத்தை தெரிவித்தார். தன் மூலமாக சத்யவதி ஒரு மிகப்பெரிய நபரை குழந்தையாக பெற்றெடுக்க போவதாக அவர் தெரிவித்தார். அதற்கு சத்யவதி மூன்று நிபந்தனைகளை விதித்தார் - 1. அவர்கள் என்ன செய்கிறார்கள் என யாருக்கும் தெரியக் கூடாது - அதனால் அவர்களை சுற்றி செயற்கை மூடுபனி பரஷர் உருவாக்கினார். 2. தன் கற்பு அப்படியே இருக்க வேண்டும் - குழந்தையை பெற்றெடுத்த பின்னர் கற்பை மீண்டும் பெறுவார் என பரஷர் உறுதியளித்தார்; 3. தன் உடலில் இருந்து வந்து கொண்டிருந்த மீன் வாடையை நறுமணம் வீசும் வாசனையாக மாற்ற வேண்டும் - 9 மைல் தூரத்தில் இருந்தால் கூட, அவர் மீது இறைத்தன்மை மிக்க வாசனை வீசும் என பரஷர் உறுதியளித்தார். அத்தகையவர் தான் வேத வியாசரை பெற்றெடுத்தார்.

சத்யவதியும்.. சாந்தனுவும்..

சத்யவதியும்.. சாந்தனுவும்..

சத்யவதியின் நறுமணத்தில் ஈர்க்கப்பட்டார் சாந்தனு. அந்த நறுமணம் வரும் திசையை நோக்கி சென்ற சாந்தனு, படகில் அமர்ந்திருந்த சத்யவதியை கண்டார். படகில் ஏறிய அவர் தன்னை அக்கரைக்கு அழைத்து போக கேட்டுக் கொண்டார். அக்கரையை அடைந்தவுடன் மீண்டும் பழைய இடத்திற்கே அழைத்து போக சொன்னார். அன்றைய பொழுது போகும் வரையில் இது நடைபெற்றது. அன்று மட்டுமல்லாது தினமும் இது நடந்தது. கடைசியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி, சத்யவதியிடம் சாந்தனு கேட்டார். தனக்கும் விருப்பம் என்றாலும் கூட தன் தந்தையின் விருப்பப்படி தான் நடப்பேன் என கூறினார். தன் மகளுக்காக லட்சிய திட்டங்களை வைத்திருந்த அவரின் தந்தையை சாந்தனுவால் திருப்திப்படுத்த முடியவில்லை. பின் கங்கை மைந்தரும், சாந்தனுவும் விஷயங்களை எளிதாக்கினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Popular Love Stories From Mahabharat

There have many love stories in Mahabharat. While some of them are famous and known to most people, there are some, which no one is aware about. In this story, we will tell you about some unheard love stories of various charcaters of Mahabharat.
Story first published: Monday, December 1, 2014, 11:17 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter