மனதை குழப்பும் நேரத்தைப் பற்றிய தத்துவ ரீதியான மர்மங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

நம்மிடம் முறையான பதில்கள் இல்லாமல் ஒன்று இந்த அண்டத்தில் உள்ளதென்றால் அது தான் நேரத்தை (காலத்தை) பற்றிய அம்சமாகும். நேரம் என்பது ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ள மிகவும் மழுப்பலான கருத்துப்படிவாகும்.

"நேரம் என்றால் என்ன, நேரத்தை எப்படி அளப்பது, ஏன் நேரம் உள்ளது, நேரம் எப்போது முடிவுக்கு வரும், நேரம் எப்போது ஆரம்பித்தது" போன்ற நேரத்தை பற்றிய பல அடிப்படை கேள்விகளுக்கு யாரும் இன்னும் பதில் கண்டு பிடிக்கவில்லை. இன்று நேரத்தை பற்றிய கருத்தமைவை பற்றி ஆராய முயற்சிக்கலாம். அது மட்டுமல்லாமல் நேரத்தை பற்றி மனதை குழப்பும் சில கேள்விகளுக்கான பதிலையும் பார்க்கலாம். நேரத்தை பற்றிய சில அருமையான தகவல்களை பற்றி பார்க்கலாமா?

ஃபேஸ்புக்கைப் பற்றி நீங்கள் அறிந்திராத பத்து ஆச்சரியமான உண்மைகள்!!!

பெருவெடிப்பினால் இந்த அண்டம் உருவானது என கூறினாலும், எங்கு எப்போது நேரம் தொடங்கியது? இந்த பெருவெடிப்பு நடப்பதற்கு முன்பே நேரம் இருந்ததா, இல்லை இந்த அண்டம் உருவான பிறகு நேரம் தொடங்கியதா? அப்படியானால் நேரம் எப்போது முடியும்? இந்த அண்டத்தில் ஒவ்வொரு நிகழ்வையும் ஆள்வது, புரிந்து கொள்ள முடியாத எல்லையை கொண்ட நேரத்தின் அம்சமா?

தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான 10 வாழ்க்கைப் பாடங்கள்!!!

சரி, நேரத்தை பற்றிய இந்த கேள்விகளை பற்றி இப்போது பார்க்கலாம். சில தகவல்களை மேற்கோள்காட்டி சில கேள்விகளுக்கு பதிலளித்தாலும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடிவதில்லை. அவைகள் நேரத்தை பற்றிய மர்மங்களாகவே நீடிக்கிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதை போல், நேரம் என்றால் என்ன, நேரம் ஏன் உள்ளது, நேரம் எப்போது முடிவடையும் போன்ற கேள்விகளை நாம் எழுப்பி கொண்டே தான் இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் செய்யும் 10 மிகப்பெரிய தவறுகள்!!!

தத்துவ ரீதியான சில கேள்விகளைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம். நேரத்தைப் பற்றிய சில அருமையான தகவல்களை மேற்கோள்காட்டி தான் அவைகளை நாம் குறிப்பிடுகிறோம். இவைகளை நேரத்தைப் பற்றிய மர்மங்களாகவும் கருதலாம். சரி, தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரத்திற்கு உருவம் உள்ளது?

நேரத்திற்கு உருவம் உள்ளது?

உருவம் இருக்கிறதோ இல்லையோ, நேரத்தைப் பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். அதைப் பற்றி பேசுகையில், உருவம் கொண்ட எந்த ஒரு பொருளையும் வடிவியல் வடிவம் மற்றும் நிகழ்வுடன் தொடர்புபடுத்தப்படும். இருப்பினும், நேரத்தை பொறுத்த வரை, அதற்கு எந்த ஒரு வடிவியல் உருவமும் கிடையாது. அதனால் நேரத்திற்கு எந்த ஒரு வடிவமும் கிடையாது என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

நேரத்தின் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியுமா?

நேரத்தின் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியுமா?

நேரத்தை வட்ட வடிவில் வெளிப்படுத்துவது பொதுவான வழக்கமாகும். அப்படியானால், நேரம் எப்போது தோன்றியது என்ற தருணத்தை நாம் கடக்க வேண்டியிருக்கும். ஆனால் அதுவும் முழுமையான ஒன்று கிடையாது. அதன் தோற்றத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தாலும் அது முடிவதில்லை. நேரத்தை நேர்க்கோட்டில் வெளிப்படுத்தினாலும் கூட நேரத்தின் தோற்றத்தை நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

நேரத்தின் அவசியம் என்ன?

நேரத்தின் அவசியம் என்ன?

இந்த அண்டத்தில் அனைத்தையும் தீர்மானிப்பது நேரமே. அப்படியானால் நேரத்தின் அவசியம் என்ன? அதனை கூர்ந்து கவனித்தோமானால், விஷயங்களின் ஆரம்பத்திற்கும், முடிவிற்கும் நேரம் அவசியமாகிறது. மதத்தைப் பற்றியும், படைத்தல் மற்றும் அழித்தலைப் பற்றியும் பேசும் போது, அதனை தத்துவ ரீதியாக பார்க்கையில், படைப்பவரையும், அழிப்பவரையும் நேரமாக தான் பார்க்கின்றனர். உலகத்தை கருதுகையில், அதன் முடிவு எப்போது என்பதை நேரம் தான் கூறும்.

யார் அல்லது எது நேரத்தை கட்டுப்படுத்துகிறது?

யார் அல்லது எது நேரத்தை கட்டுப்படுத்துகிறது?

நேரத்தைப் பற்றிய மர்மங்கள் தீவிரமடைகிறது தானே? நேரத்தை கட்டுப்படுத்துவது யார் அல்லது எது என்ற கேள்விக்கு சத்தியமாக நம்மிடம் பதில் இல்லை.

நேரத்திற்கு ஓட்டம் உள்ளதா?

நேரத்திற்கு ஓட்டம் உள்ளதா?

நேரத்தைப் பற்றிய மிகப்பெரிய மர்மத்திற்கு வருவோமா? நேரம் என்பதற்கு ஓட்டம் உள்ளதா? நாம் எப்போதுமே கடந்த காலம், வருங்காலம் மற்றும் எதிர் காலத்தைப் பற்றி தான் பேசுகிறோம். ஒரு கட்டத்தில், வருங்காலம் என்பது கடந்த காலமாகும், வருங்காலம் என்பது நிகழ்காலமாகும். ஆனால் கடந்த காலமோ அல்லது வருங்காலமோ இல்லையென்றாலும், நாம் எப்போதுமே நிகழ் காலத்தில் தான் வாழ்கிறோம். இதிலிருந்து தெரியவில்லையா நேரத்திற்கு ஓட்டம் கிடையாது. என்ன குழப்பமாக உள்ளதா?

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mind-boggling Philosophical Mysteries About Time

We address them by citing a few incredible facts about time. These can also be viewed as mysteries about TIME. Read on...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter