இந்து கோவில்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் ரீதியான காரணங்கள்!

By: Ashok CR
Subscribe to Boldsky

இந்தியா என்ற இடம் பல விஷயங்களுக்காக அறியப்படுபவையாகும். அதில் முக்கியமான ஒன்றாக விளங்குவது நம் தனித்துவமான பண்பாடாகும். இந்த பண்பாடு பல விஷயங்களை சூழ்ந்துள்ளது: உணவு, ஆடை, சடங்குகள், நம்பிக்கை மற்றும் பல விஷயங்கள். நம்பிக்கையைப் பற்றி பேசுகையில், இந்தியா கண்டிப்பாக உங்களுக்கு பல ஆச்சரியங்களை அளிக்கும். நம் நாட்டில் பல நம்பிக்கைகள் மிக தீவிரமாக வளர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதில் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் தனக்கென தனித்துவமான ஒரு முகம் உள்ளது. உலகத்தில் உள்ள பல மக்களின் ஆவலை தூண்டும் விதமாக இந்த நம்பிக்கைகள் அமைந்துள்ளது; ஏன் இன்னமும் ஆவலை ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளது.

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!

உலகத்தில் உள்ள மிக பழமையான நம்பிக்கைகளில் ஒன்று தான் இந்து மதம். பல வித சடங்குகள், கருத்துக்கள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களின் கலவையாக விளங்கும் இந்து மதம் எப்போதுமே கவரும் வகையான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. இந்த அருமையான நம்பிக்கைகளுக்கு மிகப்பெரிய தூண்களாக விளங்குவது புகழ்பெற்ற நம் கோவில்களாகும். இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நீங்கள் பயணித்திருந்தால், ஒரு விஷயத்தை நீங்கள் அதிக எண்ணிக்கைகளில், பல வகைகளில், பரவலாக காணலாம்; அது தான் கோவில்கள்.

இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?

ஒவ்வொரு நாள் காலையிலும் மக்கள் கோவிலுக்கு செல்லும் காட்சி, இந்தியாவில் சாதாரணமாக நாம் காணக்கூடியதாகும். நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்திற்கும் கோவில்களில் தான் விரைவில் பதில் கிடைக்கும் என மக்கள் அதிகமாக நம்புகின்றனர். அதனால் தான் நம் இந்தியா கலாச்சாரத்தின் முக்கிய பங்காக விளங்கி வரும் இவ்வகை நேர்த்தியான கோவில்களைத் தான் இந்தியாவின் சுற்றுலாத்துறை தீவிரமாக நம்பியுள்ளது.

கடவுளை வழிப்படும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா?

மீண்டும் நம்பிக்கைக்கு வருகையில், கோவில்களுக்கு சென்றால் நம் பிரார்த்தனைகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா? இல்லை என்று புத்தி சொன்னாலும் ஆம் என்று நம் நம்பிக்கை கூறுகிறது. உங்கள் நம்பிக்கை தான் சரி; கூடவே உங்கள் புத்தியையும் சமாளித்து விடலாம் என நாங்கள் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை?

இந்து மதம் என்ற மதம், அது தொடங்கப்பட்ட காலம் முதல் எப்போதுமே அறிவியலைப் பின்பற்றி வருகிறது. நம்பிக்கையின் முக்கிய பங்கான கோவில்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்து கோவில்களின் கட்டுமான மற்றும் கட்டிடக்கலைக்கு பின்னணியில் அருமையான அறிவியல் அடங்கியிருப்பது உங்களுக்கு தெரியுமா? கோவில்களுக்கு பின்னணியில் உள்ள அறிவியல் உங்களுக்கு முழுமையான மற்றும் சந்தோஷமான ஆச்சரியத்தை தரும்.

இந்து கோவில்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் பற்றியும், தினமும் மக்கள் ஏன் கோவில்களுக்கு செல்கிறார்கள் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மறையான ஆற்றல் திறனின் கிடங்கு

நேர்மறையான ஆற்றல் திறனின் கிடங்கு

வட/தென் துருவ உந்துதலின் காந்த மற்றும் மின்னாற்றலுக்குரிய அலை விநியோகங்களால் நேர்மறையான ஆற்றல் திறன் அதிகமாக இருக்கும் இடத்தில் மூலோபாய முக்கியத்துவத்துடன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் மையப்பகுதியில் தான் மூலவரின் சிலை. இந்த இடத்தை கர்பாக்ரிஹா அல்லது மூலஸ்தானம் என அழைப்பார்கள். சொல்லப்போனால் மூலஸ்தானத்தைச் சுற்றி தான் கோவில்களே கட்டப்பட்டிருக்கும்.

நேர்மறையான ஆற்றல் திறனின் கிடங்கு

நேர்மறையான ஆற்றல் திறனின் கிடங்கு

மூலஸ்தானத்தில் தான் பூமியின் காந்த அலைகள் அதிகபட்சமாக இருக்கும். முன்னதாக, மூலவரின் சிலைக்கு அடியில் தாமிர தட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த தட்டுக்கள் பூமியின் காந்த அலைகளை உறிஞ்சி, அதனை சுற்றுபுறத்தில் பரவச் செய்யும். அதனால் நீங்கள் சிலைக்கு அருகில் நிற்கும் போது, உங்கள் உடலும் இந்த ஆற்றல் திறன்களை உள்வாங்கும். அதனால் உடலுக்கு தேவையான நேர்மறையான ஆற்றல் திறன்கள் நமக்கு கிட்டும்.

சிலை

சிலை

சிலை என்றால் கடவுள். இறைவனின் பௌதீக வடிவிலான தோற்றமே சிலை. இது மனிதர்களை ஒருமுனைப்படுத்த உதவும். மேலும் கடவுளை உணர்ந்து கொள்ளும் அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். கடவுளை வணங்குவதன் மூலமாக, அடுத்த கட்ட மன ரீதியான பிரார்த்தனைக்கு ஒருவர் அழைத்துச் செல்லப்படுகிறார். இறைத்தன்மையை எப்போது ஒருவர் உணர்கிறாரோ, அப்போது அவர் கடைசி நிலையை அடைகிறார். அதனால் ஒருவரை ஒருமுனைப்படுத்த சிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் கடைசி நிலையை அடையவும் இது உதவிடும்.

பிரதக்ஷணம்

பிரதக்ஷணம்

கடவுளை வணங்கிய பிறகு, சிலையை மூன்று முறை சுற்றி வருவது ஒரு மரபாகும். இந்த பழக்கத்தை பரிக்ராமா அல்லது பிரதக்ஷணம் என கூறுவார்கள். நேர்மறை ஆற்றல் திறன்களை கொண்டுள்ள்ள சாமி சிலைகள், அதன் அருகில் இருக்கும் அனைத்திற்கும் அதனை பரப்பும். இதனால் சிலையைச் சுற்றி பிரதக்ஷணம் செய்யும் போது, சிலையில் இருந்து பரவிடும் அனைத்து விதமான நேர்மறை ஆற்றல் திறன்களும் உங்களுக்கு வந்து சேரும். இது நோய்களை குணப்படுத்தி மனதை புத்துணர்ச்சி பெற வைக்கும்.

கோவில் மணிகளை அடிப்பது

கோவில் மணிகளை அடிப்பது

சாதாரண உலோகத்தில் செய்யப்படுவது அல்ல கோவில் மணிகள். கேட்மியம் (தகர உலோக வகை), ஜிங்க், ஈயம், தாமிரம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற பல உலோகத்தின் கலவையால் செய்யப்படுவதே கோவில் மணிகள். கோவில் மணியை உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகத்தின் விகிதத்திற்கு பின்னணியில் அறிவியல் அடங்கியுள்ளது. ஒவ்வொரு முறை மணி அடிக்கப்படும் போதும், ஒவ்வொரு உலோகத்தில் இருந்து தனித்துவமான ஒலி ஏற்படும் வகையில் ஒவ்வொரு உலோகமும் கலக்கப்பட்டிருக்கிறது. இந்த தனித்துவமான ஒலிகளால், நம் இடது மற்றும் வலது மூளையில் ஒற்றுமையை உண்டாக்கும். அதனால் மணியை ஒலிக்க தொடங்கிய அடுத்த நொடியிலேயே கூர்மையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்க கூடிய சத்தம் எழும். இந்த சத்தம் 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியோசையில் இருந்து வரும் எதிரொலி, உங்கள் உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தொடும். அதனால், மணி ஒலிக்கப்பட்ட உடனேயே, சில நொடிகளுக்கு உங்கள் மூளை வெற்றாக மாறி, நினைவிழந்த நிலையை அடைவீர்கள். நினைவிழந்த நிலையை அடையும் போது, உங்கள் மூளையின் வாங்குந்தன்மையும், உணர்வு திறனும் தீவிரமடையும்.

சக்தி வாய்ந்த கலவை

சக்தி வாய்ந்த கலவை

கோவில்களில் உள்ள சிலைகளை ஒரு வகை கலவையால் அபிஷேகம் செய்யப்படும். அதன் பின் 'சரணம்ரிடா' எனப்படும் அந்த அபிஷேக நீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படும். இதில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், இந்த குறிப்பிட்ட அபிஷேக நீர் சாதாரண கலவை கிடையாது. தண்ணீருடன் துளசி, குங்குமப்பூ, கற்பூரம், ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்க்கப்படும் கலவையாகும் இது. கடவுளுக்கு அபிஷேகம் செய்வது எதனால் என தெரியுமா? அப்படி செய்வதால் அந்த அபிஷேக நீரில் காந்த அலைகள் உள்ளேரிடும். இதனால் அதன் மருத்துவ மதிப்பு மென்மேலும் அதிகரிக்கும். பக்தர்களுக்கு 3 டீஸ்பூன் தீர்த்தம் வழங்கப்படும். காந்த தெரபியின் முக்கிய மூலமாக அமைகிறது இந்த நீர். இதுப்போக, அதிலுள்ள கிராம்பு பற்சொத்தை ஏற்படாமல் பாதுகாக்கும்; குங்குமப்பூவும் துளசியும் சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்கும்; ஏலக்காய் மற்றும் கற்பூரம் இயற்கையான வாய் சுத்தப்படுத்திகளாக இருக்கும்.

சங்கு ஊதுதல்

சங்கு ஊதுதல்

இந்து மதத்தில், ஓம் என்ற புனிதமான வார்த்தையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது சங்கில் இருந்து வரும் சத்தம். ஓம் என்பதே படைத்தலின் முதல் ஒலியாக நம்பப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிப்பதற்கும், ஒரு நல்ல தொடக்கமாக இருக்க சங்கு பயன்படுத்தப்படுகிறது. சங்கில் இருந்து வரும் ஒலியே மிகவும் புனிதமான உருவாக கருதப்படுகிறது. இது புத்துணர்வையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தும். கோவில்களில் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல் திறன்களை இது அதிகமாக்கும். அதனால் பக்தர்களின் மீது அருமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஆற்றல்களின் பரிமாற்றம்

ஆற்றல்களின் பரிமாற்றம்

நாம் அனைவரும் அறிந்ததை போல், ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. அதனை ஒரு உடலில் இருந்து மற்றொன்றுக்கு மாற்ற மட்டுமே முடியும். கோவில்களும் நமக்கு அதையே செய்கிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து நேர்மறை ஆற்றல்களை அவைகள் எடுத்து, பல வழிகளில் மனிதர்களின் உடலுக்குள் மாற்றுகிறது. அதனால் ஒரு நாளில் நீங்கள் இழக்கும் அனைத்து ஆற்றல்களும், கோவிலுக்கு தொடர்ச்சியாக செல்வதால் மீண்டும் வந்தடையும். கோவிலுக்கு செல்வதன் முக்கிய நோக்கம் கடவுள்களுக்கு காணிக்கை செலுத்துவதற்கு இல்லை. உங்கள் உணர்ச்சிகளை புதுப்பிக்கவே அதன் குறிக்கோளாகும். அதனால் வழிபாட்டிற்கு பிறகு சிறிது நேரம் நாம் கோவிலில் அமர்ந்திருக்கிறோம். கடவுளை வணங்குவதும், வழிபாட்டில் ஈடுபடுவதும் இங்கே முக்கியமாக கருதப்படுவதில்லை; கோவிலுக்கு சென்று சிறிது நேரம் அங்கே உட்காராமல் சென்றால், கோவிலுக்கு வந்த காரணமே பூர்த்தியடையாமல் போய் விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Science Behind Hindu Temples

The science behind the temples can leave you completely and pleasantly surprised. So, read on to find out about the science behind the Hindu temples and why people visit temples every day.
Subscribe Newsletter