காதல் மற்றும் துயரம் நிறைந்த கதை: தேவலோக அழகி ஊர்வசியும்... புருரவாவும்...

By: Ashok CR
Subscribe to Boldsky

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் பல கதைகள் நிறைந்தது தான் இந்து புராணம். அதில் ராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டில் மட்டுமே அத்தனை கதைகள் புதைந்திருக்கிறது. இந்தியாவில் அக்கதைகளை கேட்டு வளராத சிறுவர் சிறுமிகளே இருந்திருக்க முடியாது. நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அருமையான கதைகளைக் கொண்டுள்ள இந்த காவியங்கள் என்றுமே ஒரு வற்றாத மூலமாகும்.

நாரதருக்கும் காதலுண்டு! தெரியுமா உங்களுக்கு...

இக்கதைகளில் வரும் அரசர்கள், ராஜகுமாரிகள், பலசாலியான போர் வீரர்கள் மற்றும் வான தேவதைகள் போன்றவர்கள் நம்மை எப்போதுமே ஆட்கொண்டு விடுவார்கள். அன்பு, காதல், வெறுப்பு, ஆணவம், பேராசை போன்ற சில குணாதிசயங்களை மையமாக வைத்து தான் இதிலுள்ள பல கதைகளும் பின்னப்பட்டிருக்கின்றன. காலம் காலமாக, பல நூறு வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் இக்கதைகள், ஒரு தலைமுறை கடந்து அடுத்த தலைமுறைக்கு சென்று கொண்டே தான் இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் இன்றைய தலைமுறையினருக்கு மத்தியில் கூட இக்கதைகள் அதன் வசீகரத்தை இழக்காமல் இருக்கிறது.

பலருக்கு தெரியாத சிவபெருமானின் 5 காதல் கதைகள்!!!

இப்போது நாம் பார்க்கப்போவது அப்படிப்பட்ட ஒரு வசீகரமான கதையை தான். மகாபாரதத்தில் இருந்து வரும் இக்கதை ஊர்வசி என்ற தேவலோக அழகி மற்றும் புருரவா என்ற மனித அரசருக்கும் இடையேயான காதலைப் பற்றி தான். இந்து புராணத்தில் மனிதர்கள் மீது தேவலோக தேவதைகள் காதலில் விழும் கதைகள் புகழ்பெற்ற கதை கருவாக விளங்கியது. அதில் மேனகா-விஸ்வாமித்திரர், ரம்பா-சுக்ராச்சாரியா போன்ற சில காதல் கதைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

ராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா?

இந்த கதைகளை போல், மற்றொரு அழகிய காதல் கதை ஒன்றும் உள்ளது. அது தான் ஊர்வசி-புருரவா காதல் கதை. காதல், மனக்கிளர்ச்சி, பொறாமை மற்றும் இறுதியான பிரிவை கொண்ட கதை இது. இவர்களின் காதல் கதையைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புருரவா: சந்திர வம்சத்தின் அரசர்

புருரவா: சந்திர வம்சத்தின் அரசர்

புருரவாஸ் தான் முதல் சந்திர வம்ச (சந்திரவன்ஷி) அரசராவார். இவர் புத்தா மற்றும் இலாவின் புதல்வராவார். புத்தா என்பவர் சோம் (சந்திரன் அல்லது நிலவு) மற்றும் தாராவின் (ப்ரிஹஸ்பதி முனிவரின் மனைவியாவார்) புதல்வராவார். மிகவும் தைரியமான போர் வீரராக திகழ்ந்தார் புருரவாஸ். அசுரர்களுடனான போரின் போது உதவி புரிந்திட இந்திர தேவனால் பல முறை அழைக்கப்பட்டவர் தான் புருரவாஸ். ஒரு முறை இந்திரனின் சபையில் இருந்த தேவலோக ஊர்வசிக்கு மேலோகத்தில் அலுப்பு தட்டிய காரணத்தினால், மாற்றம் தேடி தன்னுடைய தோழிகளோடு பூலோகத்துக்கு வந்தார். மேலோகத்தில் எப்போதுமே சந்தோஷமாக வாழும் வாழ்க்கையை காட்டிலும், பூலோகத்தில் உணர்ச்சிகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ அவர் விரும்பினார். அப்படி பூமியில் இருந்து திரும்பி வந்த ஒரு பயணத்தின் போது, விடியல் வேளையில், ஒரு அசுரனால் அவர் கடத்தப்பட்டார்.

மந்திர ஸ்பரிசம்

மந்திர ஸ்பரிசம்

விடியலுக்கு சற்று முன்பு, தன் பிற தேவலோக தோழிகளுடன் சேர்ந்து ஊர்வசி மேலோகத்திற்கு திரும்புகையில், ஒரு அசுரனால் அவர் கடத்தப்பட்டார். இதை கண்ட புருவரா அந்த அசுரனை தன் தேரில் சென்று பிடித்து, அவனின் பிடியில் இருந்து ஊர்வசியை விடுவித்தார். இந்த நேரத்தில் ஏற்பட்ட அவர்களின் உடல் ஸ்பரிசம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டது. முதல் முறையாக மரணத்தை தழுவும் ஒரு மனிதனின் தசையின் வெப்பத்தை ஊர்வசி அனுபவித்தார். இதனால் அவருக்குள் ஒரு மோகம் பிறந்தது. இதே உணர்வு புருரவாவிற்கும் ஏற்பட்டது. இருப்பினும், இந்த உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதா என இருவருக்கும் உறுதியாக தெரியவில்லை.

காதல் மலர்ந்தது

காதல் மலர்ந்தது

ஒரு நாடகத்தின் போது, லக்ஷ்மி தேவியாக நடித்துக் கொண்டிருந்த ஊர்வசி, தன் காதலரின் பெயராக புருஷோத்தமன் (விஷ்ணு) என்று கூறுவதற்கு பதிலாக புருரவாவின் பெயரை கூறினார். இந்த நாடகத்தை இயக்கி கொண்டிருந்த பாரத முனிவருக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு மனிதனால் வசீகரிக்கப்பட்ட காரணத்தினால் ஊர்வசிக்கு அவர் சாபமளித்தார். அதன் படி, ஊர்வசியும் ஒரு மானிடனாக புருரவாவுடன் வாழ்ந்து குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். தேவலோக அழகிகளுக்கு தெரியாத ஒரு விஷயம் இது. ஆனால் புருரவாவுடன் கொண்ட காதலால் இந்த சாபத்தை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் மறுபுறம், ஒரு தேவலோக தேவதை பூலகத்திற்கு வந்து தன்னை நேசித்ததை நம்ப முடியாமல், புருரவா வருத்தமடைந்தார். தன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என ஏற்கனவே அவர் மன அழுத்தத்தில் வேறு இருந்து வந்தார். இந்த நேரத்தில் புருரவாவை தேடி வந்தார் ஊர்வசி. இருவரும் அவரவர் உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

நிபந்தைனைகள்

நிபந்தைனைகள்

தன் மீதி காலம் முழுவதும் புருரவாவுடன் இருந்து விட ஊர்வசி சம்மதித்தார். ஆனால் அதற்கு ஊர்வசி சில நிபந்தனைகள் வைத்திருந்தார். முதல் நிபந்தனை - தான் கொண்டு வரும் இரண்டு ஆடுகளின் பாதுகாப்பிற்கு அரசர் உத்திரவாதம் அளிக்க வேண்டும். இரண்டாம் நிபந்தனை - பூமியில் இருக்கும் காலத்தில் நெய்யை மட்டுமே அவர் உண்ணுவார். மூன்றாவது நிபந்தனை - உடலுறவு கொள்ளும் வேளையை தவிர பிற நேரங்களில் ஒருவரை ஒருவர் நிர்வாணமாக பார்த்துக் கொள்ள கூடாது. இந்த நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று மீறப்பட்டாலும் சரி, மீண்டும் மேலோகத்திற்கு சென்று விடுவதாக ஊர்வசி கூறினார். புருரவா இந்த நிபந்தனைகள் அனைத்திற்கும் ஒத்துக் கொண்டார். அவர்கள் இருவரும் காந்தமடன் தோட்டத்தில் ஒன்றாக வசிக்க தொடங்கினார்கள்.

கடவுள்களின் சதி

கடவுள்களின் சதி

மறுபக்கம், ஊர்வசி மற்றும் புருரவாவிற்கு இடையேயான காதலை கண்டு கடவுள்கள் பொறாமை கொண்டனர். ஊர்வசி இல்லாத சொர்க்கம் மந்தமாக காணப்பட்டது. அதனால் ஒரு சதிச்செயலை அரங்கேற்ற அவர்கள் முடிவு செய்தனர். ஒரு நடுநிசி வேளையில், ஊர்வசியின் ஆடுகளை கந்தர்வர்கள் தூக்கி சென்றார்கள். ஆடுகள் கத்த தொடங்கியவுடன், வருத்தமடைந்த ஊர்வசி அந்த ஆடுகளை உடனடியாக காப்பாற்றுமாறு அரசரிடம் கூறினார். அந்நேரத்தில் எந்த ஆடையும் அணியாமல் இருந்த புருரவா அவசரத்தில் அப்படியே எழுந்தார். அந்த ஒரு நொடியில், சொர்க்கத்தில் இருந்து ஒளியை அவர்கள் மீது பாய்ச்சினார்கள் கந்தர்வர்கள். இதனால் ஊர்வசியும், புருரவாவும் ஒருவரை ஒருவர் நிர்வாணமாக பார்த்து விட்டனர்.

அரங்கேறிய துயரம்

அரங்கேறிய துயரம்

மூன்றாம் நிபந்தனை மீறப்பட்ட காரணத்தினால், மீண்டும் சொர்க்கத்திற்கு செல்லும் நேரத்தை அடைந்தார் ஊர்வசி. கனத்த இதயத்துடன் அரசரை விட்டு பிரிந்தார் ஊர்வசி. இதை கண்டு உடைந்து போனார் புருரவா. இந்நேரத்தில் புருரவாவின் குழந்தையையும் தன் வயிற்றில் சுமந்தார் ஊர்வசி. ஒரு வருடம் கழித்து குருஷேத்ரம் பகுதிக்கு அருகில் வருமாறு அரசரை கேட்டுக் கொண்டார் ஊர்வசி. அங்கே வைத்து அவரின் குழந்தையையும் ஊர்வசி ஒப்படைத்தார். அதன் பின் பூமிக்கு மீண்டும் மீண்டும் வரும் சந்தர்ப்பத்தை ஊர்வசி பெற்றார். அப்படிப்பட்ட நேரத்தில் புருரவாவிற்கு மேலும் மேலும் பல குழந்தைகளை பெற்றுக் கொடுத்தார்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Tragic Tale Of Love & Passion: Urvashi & Pururava

A beautiful love story of Urvashi and Pururava. This is a tale of love, passion, jealousy and the ultimate separation. Let us hear out the story of Urvashi & Pururava.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter