வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் ஸ்மார்ட் போன்கள்!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. டி.வி., மொபைல், கம்ப்யூட்டர் என்று எல்லா எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு சில பேரிடம் மட்டும் தான் மொபைல் போன் இருந்தது.

ஆனால், கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும் மொபைல் போன் புரட்சி ஏற்பட்டது. நாட்டிலுள்ள ஒவ்வொரு சாதாரணக் குடிமகனும் மொபைல் போனைப் பயன்படுத்துவதற்கான சூழ்நிலை உருவானது. மேலும், கருப்பு-வெள்ளை போன்களும் கலர் போன்களாக மாறின. இதுவும் கடந்த 5 ஆண்டுகளில் பல பெரிய மாற்றங்களைச் சந்தித்தது. இதன் விளைவாக, ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உறவுகளுக்குக் குட்-பை சொல்ல வைக்கும் படா பேஜாரான விஷயங்கள்!!

இண்டர்நெட்டையும் ஸ்மார்ட் போனிலேயே பயன்படுத்தலாம் என்பதால் இமெயில், யூ-டியூப், வாட்ஸ்-அப், ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் புக்கிங் என்று சகலத்தையும் இதிலேயே முடித்து விட முடிகிறது. ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று நினைக்கும் அளவுக்கு அது பிரபலமாகியுள்ளது.

ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி பல நன்மைகளைக் கொடுத்தாலும் வாழ்க்கையை எளிமையாக்கினாலும், அது பலருடைய வாழ்க்கையைக் கெடுத்தும் வருகிறது. இதில் நிறையப் பேர் நேரத்தை வீணடித்து விடுகிறார்கள். தவறான விஷயங்களை எளிதாகச் செய்யும் அளவுக்குக் குற்ற விஷயங்கள் இதனால் பெருகியுள்ளன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா? இப்போது ஸ்மார்ட் போனை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான 10 காரணங்களை நாம் பார்க்கலாம்.

ஆண்களே! புரோஸ்டேட் வீக்கம் வராம இருக்கணும்ன்னா... இதெல்லாம் மனசுல வெச்சு நடந்துக்கோங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறவுகளைக் கொல்கிறது!

உறவுகளைக் கொல்கிறது!

ஆம், ஸ்மார்ட் போன் மூலம் டிவிட்டர் அல்லது ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் பலருடைய உறவு முறைகள் கடுமையாகச் சீரழிந்து போயுள்ளன. தேவையில்லாத விஷயங்களில் பிரச்சனைகள் உருவாகி, வளர்ந்து, கடைசியில் அந்த உறவுக்கே குட்-பை சொல்லும் அளவுக்குப் போய் விடுகிறது. அதனால், நாம் ஸ்மார்ட் போனுக்கு விரைவில் குட்-பை சொல்வது தான் நல்லது.

பாடி ஃபிட்னெஸ் பறி போகிறது!

பாடி ஃபிட்னெஸ் பறி போகிறது!

ஸ்மார்ட் போனில் அநியாயத்துக்கு லட்சக்கணக்கான கேம்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த விளையாட்டு வலையில் நாம் எளிதாகச் சிக்கி விடுகிறோம். இந்த கேம்களை விளையாடுவதாலும், சாட் செய்வதாலும் இதிலேயே டி.வி. பார்ப்பதாலும் இண்டர்நெட்டை மணிக்கணக்காகப் பயன்படுத்துவதாலும், கண்களுக்கும் விரல்களுக்கும் எவ்வளவு கெடுதல்கள் வரும் தெரியுமா? ஸ்மார்ட் போனைக் கொஞ்சம் தூக்கி எறிந்துவிட்டு, இயற்கையோடு ஒன்றுங்கள். வாக்கிங், ஜாக்கிங், ஸ்விம்மிங் என்று உடம்பைத் தேற்றுகிற வழியைப் பாருங்கள்!

அடிமையாக்குகிறது!

அடிமையாக்குகிறது!

நம்மில் நிறையப் பேர் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகித் தான் கிடக்கிறோம். டூ வீலரில் சென்று கொண்டே போனில் பேசிப் பேசி, போனில் பேசாத போதும் கூட தலையைத் தோளில் சாய்த்துக் கொண்டு தான் வண்டியை ஓட்டுகிறோம். யாருடைய போனோ ரிங் ஆனால் கூட நம் போனை எடுத்துப் பார்க்கிறோம். அந்த அளவுக்கு நாம் அதற்கு அடிமையாகிப் போய்க் கிடக்கிறோம்.

அளவுக்கு மிஞ்சினால்...

அளவுக்கு மிஞ்சினால்...

ஸ்மார்ட் போன் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது தான். ஆனால், ஏற்கனவே கூறியது போல், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகி விடும். ஸ்மார்ட் போனை அதிகமாகப் பயன்படுத்தினால் அது மூளைக்கு மிகவும் கெடுதல் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குழந்தைகளை சீரழிக்கிறது!

குழந்தைகளை சீரழிக்கிறது!

இப்போதெல்லாம் நம்மை விட நம் குழந்தைகள்தான் ஸ்மார்ட் போனைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதை நாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் வேதனையானது. நாம் சிறு வயதில் தெருக்களில் ஓடியாடி விளையாடுவோம்; வானில் பட்டம் பறக்க விடுவோம்; சைக்கிளில் சுற்றுவோம். இவையெல்லாம் நம் உடலைத் தெம்பாக வைத்திருப்பதற்கான வழிகள். ஆனால், நம் குழந்தைகளோ ஸ்மார்ட் போனில் டெம்பிள் ரன்னும், ஆங்க்ரி பேர்ட்ஸும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு? அவர்கள் சின்னஞ்சிறு வயதிலேயே சோடா புட்டிக் கண்ணாடி போட்டுக் கொண்டு வளைய வருகிறார்கள்!

விபத்துக்களை ஏற்படுத்துகிறது!

விபத்துக்களை ஏற்படுத்துகிறது!

ஆம், நம்மில் பலரும் ஸ்மார்ட் போனில் பேசிக் கொண்டே ரோட்டைக் கடக்கிறோம், கார் அல்லது பைக்கை ஓட்டுகிறோம். இதனால் வெகு சுலபமாக விபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன. இவை போதாதென்று, போனில் பேசிக் கொண்டே கடையில் பலசரக்கு வாங்குவது, கரெண்ட் பில் கட்டுவது என்று பலவிதமான அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறோம். பலர் இருக்கும் இடத்தில் சத்தம் போட்டு போனில் பேசுகிறோம். இப்படி நிறையப் பேரைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறோம்.

பதறச் செய்கிறது!

பதறச் செய்கிறது!

தன்னுடைய ஸ்மார்ட் போனைக் காணோம் என்றால் நம்மில் பலரும் நிறையவே பதறிப் போய் விடுகிறோம். சட்டைப் பை, பேண்ட் பாக்கெட், ஹேண்ட் பேக் என்று எல்லாவற்றையும் நோண்டி நோண்டித் தேடுவோம். மொத்தத்தில் அப்போது நமக்கு ஒரு மினி ஹார்ட் அட்டாக்கே வந்து விடும்.

பிரைவஸி பறிபோகிறது!

பிரைவஸி பறிபோகிறது!

நாம் ஏர்போர்ட்டில் நின்று கொண்டிருந்தாலும் சரி, மூத்திரச் சந்தில் நின்று கொண்டிருந்தாலும் சரி, நாம் இருக்கும் இடத்தை நம் ஸ்மார்ட் போன் அப்பட்டமாக அதை அனைவருக்கும் காட்டிவிடும். அதில் நாம் அப்படி செட் செய்து வைத்திருப்போம். இது நிச்சயம் நமக்கும் நம் பிரைவஸிக்கும் நல்லதல்ல!

நேரம் வீணாகிறது!

நேரம் வீணாகிறது!

நம் வாழ்க்கை முறைகளை எளிதாக்கிக் கொள்ளத் தான் ஸ்மார்ட் போன் தொழில்நுட்ப வளர்ச்சி உதவ வேண்டும். ஆனால், அதைப் பயன்படுத்துவதால், அதிலேயே நாம் மூழ்கி விடுவதால் நம்முடைய பொன்னான நேரம் முழுவதும் வீணாகப் போய் விடுகிறது. அன்றாடம் செய்ய வேண்டிய சில கடமைகளை இதனால் தவறவிடுகிறோம் அல்லது ஒத்தி வைத்து விடுகிறோம்.

செக்ஸ் தடைபடுகிறது!

செக்ஸ் தடைபடுகிறது!

அன்று தான் நம் துணையை ஒரு வழியாகத் தயார்படுத்தி, படுக்கையில் வீழ்த்த நினைத்திருப்போம். அதற்கான அனைத்து வகையான மூடுகளையும் இருவரும் செட் செய்து கொண்டிருப்போம். அப்போது நம் ஸ்மார்ட் போனில் ஒரு அழைப்பு வரும் பாருங்கள். அவ்வளவு தான்! நம் அனைத்து முயற்சிகளும் வீணாகி, உணர்ச்சிகள் எல்லாம் படுத்துத் தூங்கி விடும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Ways Your Smartphone Is Ruining Your Life

Smartphones have made lives easier, communication simpler and distances shorter, but as we know, a lot of sugar kills the taste of the tea. Here are 10 reasons why you would want to give your smartphone a break.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter