வழிந்து ஒழுகும் முகத்துடன் சிரமப்பட்டு வரும் மூதாட்டி!

Subscribe to Boldsky

நம்முள் மன அழுத்தம் அதிகரிக்கும் போது, உலகின் ஒட்டுமொத்த சோகமும், வலியும், துன்பங்களும் நமது தோள்களில் தாங்கிக் கொண்டிருப்பது போன்ற எண்ணம் எழும். ஆனால், அதை எல்லாம் தாண்டி வந்தால் தான் வாழ்க்கை. ஆனால், சிலர் நாம் கனவிலும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு சோகமான வாழ்க்கையை அனுதினமும் வாழ்ந்து வருகிறார்கள்.

அதில் ஒருவர் தான் இந்த மூதாட்டி. இந்த மூதாட்டியின் முகம் காண வழிந்து, ஒழுகுவது போல இருக்கிறது. இதை மிக அரியவகை மருத்துவ நிலை என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த மூதாட்டியின் நிலையை எண்ணி வருந்தி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தாலும், இவர் வேண்டாம் என மறுக்கிறார். இவருக்கு எங்கே நாம் இறந்துவிடுவோமோ என்ற அச்சம் அதிகமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய்லாந்து!

தாய்லாந்து!

இவர் பெயர் வியாங் பூன்மி. இந்த 63 வயது மூதாட்டி தாய்லாந்து பாங்காக்கின் வடகிழக்கு பகுதியில் வசித்து வருகிறார். இவரது தொழில் சாலை ஓரத்தில் மலர்கள் விற்பது. இவரது அரியவகை சரும பிரச்சனையால் கண்பார்வை இழந்துள்ளார். இதன் காரணமாக இவர் மலர்கள் விற்க இவரது மகள் உதவி தேவைப்படுகிறது. வீட்டில் இருந்து வேலைக்கு செல்லும் போதும், வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது மகளின் உதவி இல்லாமல் இவரால் நகர முடியாது.

அரியவகை!

அரியவகை!

இந்த மூதாட்டிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை ஆங்கிலத்தில் "Neurofibromatosis" என்கிறார்கள். இது ஒருவகையான மரபணு பிரச்சனை. இது இவருக்கு குழந்தை பருவத்திலேயே ஆரம்பித்திருக்க வேண்டும். இதை இந்த மூதாட்டியும் ஒப்புக் கொள்கிறார். சிறுவயதிலேயே இந்த தாக்கம் தென்பட ஆரம்பித்தது என கூறுகிறார் இந்த மூதாட்டி.

மறுப்பு!

மறுப்பு!

இந்த மூதாட்டியின் நிலையை கண்டு வருந்திய சுற்றுவட்டார மக்கள், இவருக்கு மருத்துவ உதவி அளிக்க ஆலோசித்தனர். அறுவை சிகிச்சை செய்ய தாங்களே பண ஏற்பாடு செய்து மருத்துவர்களையும் அழைத்து வந்தனர். ஆனால், முதல் முறை அணுகிய போதே நேரடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார் இவர்.

மேலும், இந்த நிலையிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் கூறி மருத்துவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.

அச்சம்!

அச்சம்!

மருத்துவர்கள் இவரை எத்தனையோ முறை அணுகி அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள பேசிப் பார்த்தனர். ஆனால், இவருக்கு அறுவை சிகிச்சை செய்துக் கொள்வதெனில் பயம். எங்கே ஆப்ரேஷன் செய்யும் போது இறந்துவிடுவோமோ என அஞ்சுகிறார். ஆகையால் தான், அறுவை சிகிச்சை வேண்டாம். இந்த நிலையிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறுகிறார்.

ஊடகங்கள்!

ஊடகங்கள்!

இந்த மூதாட்டியின் அரியவகை நிலையை கண்டு உள்ளூர் மக்களும் ஊடகங்களும் ஆச்சரியம் அடைந்து இவரை கண்டு பேட்டி எடுத்து பிரபலம் ஆக்கிவருகிறார்கள். சிலர் தங்க வியாபார ரீதியாக இவரை பயன்படுத்திக் கொண்டாலும், பலரும் இவரை கண்டு மனமுருகிப் போகிறார்கள்.

ஊர் மக்களில் ஒருவர்...

ஊர் மக்களில் ஒருவர்...

"இங்கே இருக்கும் மக்கள் அனைவரும் இந்த மூதாட்டி மீது அதீத அன்பு கொண்டுள்ளனர். இவரது வாழ்க்கை மிகவும் கடினமானது தான். அவரும் மிக கடினமாக தான் தினமும் உழைத்து வருகிறார். இவருக்கு பிச்சை எடுக்க மனமில்லை. ஆகையால் தான் மலர்கள் விற்பதும், வேறு சில சிறுசிறு வேலைகளும் செய்து வருகிறார். இவருக்கு பலரும் உதவ வரும் போதிலும், தன் சொந்த காலில் நிற்க இவர் முயற்சிப்பது பாராட்டுதலுக்குரியது." என கூறியுள்ளார்.

இது ஒன்றும் நாம் காணும் முதல் வகை அரிய பிரச்சனை அல்ல. தோல் மரம் போல மாறிய மனிதன், பாம்பு தோல் போல தினமும் சருமம் உறிந்து வரும் பிரச்சனை கொண்டிருந்த இந்திய சிறுமி, தேகம் முழுக்க முகம் உட்பட முடி அடர்த்தியாக முளைக்கும் பிரச்சனை கொண்டிருக்கும் பெண் என நமது உலகில் அரியவகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இதில் சிலரின் பிரச்சனை மருத்துவர்களுக்கே புதியதாக இருக்கிறது. சில பிரச்சனைகளுக்கு பெயர் மட்டும் தான் இருக்கிறதே தவிர, அதற்கான மருந்துகளோ, சிகிச்சைகளோ இல்லை.

இவர்களில் சிலர் இப்படி அவதிப்படுவதற்கு பதிலாக இறந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். சிலர், எப்படியாவது தங்களுக்கு மருத்துவ உதவி கிடைத்துவிடாதா என ஏங்கி காத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் மொத்தமாக எதிர்பார்க்கும் ஒரே விஷயம். தங்களை ஒதுக்கி வைக்காமல் அனைவரும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே ஆகும்.

All Image Source: Youtube

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Granny With A Melting Face Refuses To Undergo A Surgery!

    Granny With A Melting Face Refuses To Undergo A Surgery!
    Story first published: Monday, January 15, 2018, 13:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more