வேலை தருவதாக கூறி வாட்சப்பில் நடக்கும் ஆபாச உரையாடல்!

Posted By: Staff
Subscribe to Boldsky

இணைய பயன்பாடு இன்று அதிகரித்து வருகிறது. இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திய காலமெல்லாம் மலையேறி இப்போது இணையத்தை கொண்டே ஒருவரை எப்படி வீழ்த்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விதவிதமான திருட்டுகளும், துரோகங்களும் இந்த இணைய தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வழக்கம் போல இதில் அதிகமாக சிக்குவதும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

Woman Experience On Online Fraudulent

இணையக் குற்றங்களை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்ற காரணத்தாலும், தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்ள முடியும் என்ற வசதியும் இருப்பதால் இதனை எளிதாக பயன்படுத்துகிறார்கள். அதோடு இந்த இணையத்திருட்டு என்பது பெண்களை மானபங்கப் படுத்துவதாகவும் தங்களின் வக்கிர எண்ணத்தை தீர்க்க ஓர் இடமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் பல பெண்கள் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தாலும் ஒரு சிலர் தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாட்சப் :

வாட்சப் :

தற்போது இளைஞர்களிடத்தில் வாட்சப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாட்சப்பில் வந்து தன்னிடம் தவறாக பேசிய ஓர் இளைஞன் குறித்த உண்மை பக்கங்களை பெண்ணொருவர் வெளியிட்டிருக்கிறார். வேலை வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி பெண்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்ற அவரது உண்மைக் கதை படிப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்திடும்.

இப்படியும் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதால் வேலை வாய்ப்பிற்காக நீங்கள் விண்ணப்பிக்கும் போது ஜாக்கிறதையாக இருக்கவும்.

இது குறித்து தன்னை மிரட்டிய நபருடனான வாட்சப் சாட் மற்றும் இவர் சந்தித்தவற்றை எழுதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நம்யா என்ற பெண்மணி.

சென்னையில் :

சென்னையில் :

சென்னையைச் சேர்ந்த நம்யா என்ற பெண்ணின் வாட்சப் க்ரூப்பில் ஒருவர் உடனடி வேலை வாய்ப்பிற்கு இவரை தொடர்பு கொள்ளவும் என்று ஒரு தொலைபேசி எண்ணுடன் ஒரு ஃபார்வேர்ட் மெசேஜ் வந்திருக்கிறது.அதைப் பார்த்து , அந்த எண்ணுக்கு அழைத்து பேசி தனக்கு வேலையில் சேர விருப்பம் என்றும் மேற்கொண்டு விவரங்களை கேட்டிருக்கிறார்.

ஏர் ஃபிரான்ஸ் :

ஏர் ஃபிரான்ஸ் :

அதன் பின்னர், ஒருவன் போன் செய்து தான் ஏர் பிரான்சிலிருந்து அழைப்பதாக பேசியிருக்கிறான். நம்யா அந்த உரையாடலை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

அவன் ஆரம்பத்தில் மிகவும் அடிப்படையான வசிக்கும் இடம், கல்வி விவரங்கள் ஆகியவற்றை கேட்டிருக்கிறான்.

விளையாட்டு ஆரம்பம் :

விளையாட்டு ஆரம்பம் :

அப்படியே தொடர்ந்தவன், உங்களுடைய எடை என்ன, உயரம் என்ன, உங்கள் மார்பகத்தின் அளவு என்ன ? இடுப்பளவு என்ன என கேள்விகளில் ஆபாசத்தை நுழைத்திருக்கிறான்.

இதில் கோபமடைந்த நம்யா பதில் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார். இதனை உணர்ந்தவன் இது முதல் ரவுண்ட் தான். இரண்டாவது ரவுண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டால் இன்னொருவர் உங்களிடம் பேசுவார் என்று சொல்லியிருக்கிறான்.

இரண்டாவது ரவுண்ட் :

இரண்டாவது ரவுண்ட் :

அப்போதே கிட்டதட்ட அரைமணி நேரம் வரை வேலை குறித்தும், எப்படி பணியாட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், உங்களுக்கு என்ன வேலை இருக்கும் போன்ற தகவல்களை எல்லாம் நம்பும் படி விவரமாக சொல்லியிருக்கிறான்.

அதன் பின்னர் பத்து நிமிடங்களில் மீண்டும் அவனே கால் செய்து நீங்கள் இரண்டாவது ரவுண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள் என்று சொல்லி பேசியிருக்கிறான்.

வீடியோ கால் :

வீடியோ கால் :

வேறொருவர் பேசுவார் என்று சொன்ன போது அவனே பேசுவது நம்யாவுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், நேர்காணலுக்கு நீங்கள் வீடியோ காலுக்கு வர வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறான். அதோடு வீடியோ கால் செய்யும் போது அறையில் நீங்கள் மட்டும் தனியாக இருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறான்.

ஆபாசப் பேச்சு :

ஆபாசப் பேச்சு :

வீடியோ காலில் முதலில் போன் காலில் சொன்னது போல உங்களது உயரம் மற்றும் எடையை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் அதை காட்டுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

அதன் பின்னர் நீங்கள் எங்காவது டேட்டூ குத்தியிருக்கிறீர்களா? அந்த இடத்தை காட்டுங்கள் என்று சொல்லியிருக்கிறான். தொடர்ந்து, வயிற்றுப் பகுதியை காட்டுங்கள் என்று சொல்ல நம்யா மறுத்திருக்கிறார்.

டீ ஷர்ட் :

டீ ஷர்ட் :

அதோடு,தொடர்ந்து வற்புடுத்தி உடையை மாற்றி டீ ஷர்ட் அணிந்து வரச் சொல்லியிருக்கிறான் . பின்னர் உள்ளாடையை கழற்றிவிட்டு வெறும் டீஷர்ட் மட்டும் அணிந்து காட்டச் சொல்லியிருக்கிறான்.

நிப்பில் பெரிதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று அவன் சொன்னதும் நம்யாவிற்கு அருவருப்பாக இருந்திருக்கிறது. இதனால் உடனேயே அந்த வீடியோ காலை கட் செய்து விட்டார்.

மீண்டும் கால் :

மீண்டும் கால் :

வீடியோ காலை கட் செய்த சிறிது நேரத்தில் மீண்டும் அதே எண்ணிலிருந்து போன் வந்திருக்கிறது. தன்னை வேறொரு ஆளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியிருக்கிறான். அப்போது இந்த வேலைக்கு நான் பொறுத்தமில்லை என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறான்.

மிரட்டல் :

மிரட்டல் :

இந்த அத்தனை களேபரங்களும் நடக்கும் போது நம்யாவுடன் நண்பரொருவரும் இருந்திருக்கிறார். அவர்கள் எளிதாக பேசிய இரண்டு குரலும் ஒரே மாதிரி இருக்கிறது என்று சொல்ல உடனேயே பேச்சை மாற்றியிருக்கிறான். இவர்கள் விடாப்பிடியாய் கேட்க போன் கால் கட் செய்யப்பட்டிருக்கிறது.

பெண்களே எச்சரிக்கை :

பெண்களே எச்சரிக்கை :

இதையடுத்து வாட்சப்பில் நடந்த உரையாடலில் வீடியோ கால் எல்லாம் ரெக்கார்ட் செய்யப்பட்டுவிட்டது, நம்யா நீ முடிந்து விட்டாய். என்று மிரட்டியிருக்கிறான். வீடியோ காலில் தான் எதுவும் செய்யவில்லை, சொல்லவும் இல்ல என்று தைரியமாக உன் முகத்திரையை கிழிக்கப்போகிறேன் என்று நம்யாவும் தைரியமாக பதில் சொல்லியிருக்கிறார்.

பெண்களே வேலை வாய்ப்பு, உதவி என உங்களுக்கு மிகவும் அவசரத் தேவையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் நம்மைச்சுற்றிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களிடத்திலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync women life
English summary

Woman Experience On Online Fraudulent

Woman Experience On Online Fraudulent
Story first published: Tuesday, January 9, 2018, 15:14 [IST]