இன்னும் எத்தனை நாளைக்கு தான் சிங்கிலாவே இருக்க போறீங்க? - உங்க ராசி என்ன சொல்லுது?

Written By:
Subscribe to Boldsky

சிங்கிலாக வாழும் வாழ்க்கை தான் கெத்து என்று சொல்லிக் கொண்டு சுற்றித் திரிந்தாலும், உங்களது மனதின் ஏதாவது ஒரு மூளையிலாவது நம்ம மட்டும் ஏன் என்னும் சிங்கிலாகவே இருக்கிறோம்.. நம்மல விட சின்னஞ்சிறுசுக எல்லாம் லவ் பண்ணுது, நமக்கு என்னும் லவ் செட் ஆகலயேனு ஒரு கவலை இருக்கறது தெரியுது... இதற்கு என்ன தான் காரணமாக இருக்கும்..?

நமது குணம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா? நமது இயல்பை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் லவ் செட்டாகலாம்..! உங்ககிட்ட இருக்க எந்த ஒரு விஷயத்துனால நீங்க இன்னும் சிங்கிலாவே இருக்கீங்கனு உங்க ராசி சொல்லுது இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மேஷம்

மேஷம்

நீங்கள் உங்களை சுற்றியுள்ளவர்களால் நீங்கள் வெறுக்கப்படுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் எதனால் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அதனை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களை நீ

முதலில் நீங்கள் உங்களை நீங்களே காதலிக்க வேண்டியது அவசியமாகும். ஒருவேளை உங்களது முன்னால் காதல் முடிவடைந்திருந்தால் நீங்கள் அதற்கான காரணத்தை ஆராய்ந்து, இனி அதுபோல் நடக்கமால் பார்த்துக் கொள்வதால் உங்களது வருங்காலம் சிறப்பாக அமையும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொசசிவ்னஸ் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு இருக்கும் இந்த பொசசீவ்னஸ் காரணமாக அவர்களது துணை சற்று தன்னை தாழ்த்திக் கொண்டு நடந்தாக வேண்டியதிருக்கும். எனவே நீங்கள் இந்த பொசசீவ்னஸை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் உங்களது காதல் கைகூடும்.

மிதுனம்

மிதுனம்

நீங்கள் உங்களது காதலை வேகமாக ஆழ்ந்த காதலுடன் தொடங்கினாலும் கூட அது காலப்போக்கில் மாறிப்போகிறது. நீங்கள் காதலித்துக் கொண்டே இருப்பவராக இருந்தாலும் உங்களுக்கு சீக்கிரமாக காதலில் சளிப்பு வந்துவிடுகிறது. காதலை என்றுமே அதிகமாக வெளிப்படுத்த முடியாது தான்.. ஆனால் மனதிலும் செயலிலும் எப்போதுமே காதல் அதிகரித்து இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் சிங்கிலாக இருக்க காரணம் என்னவென்றால், இவர்கள் ரொமேண்டிக் மற்றும் சென்சிடிவ்வாக உள்ள துணையை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் உங்களது காதல் உறவில் அதிக எதிர்பார்ப்புகளை உங்களது துணையின் மீது சுமத்துவீர்கள் இந்த குணத்தை மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதலில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். இவர்களது தலைமை பண்பு இவர்களது காதல் வாழ்க்கைக்கு குறுக்கே நிற்கும். இவர்கள் எதிலும் சிறந்ததையே எதிர்பார்ப்பார்கள்.. இவர்களது வாழ்க்கையில் என்ன கிடைத்தாலும் மகிழ்ச்சியே அடைய மாட்டார்கள்..

கன்னி

கன்னி

நீங்கள் உங்கள் மனதிற்குள் அதிக காதலை வைத்திருப்பீர்கள் ஆனால் பிரச்சனை என்னவென்றால் அதை வெளிக்காட்ட உங்களுக்கு தெரியாது.. காதலை வெளிப்படுத்தினால் தானே உங்களது துணைக்கு நீங்கள் அவரை எவ்வளவு ஆழமாக காதலிக்கிறீர்கள் என்பது புரியும்? காதலை நேர்மறையான முறையில் வெளிப்படுத்துங்கள் வெற்றி நிச்சயம்!

துலாம்

துலாம்

நீங்கள் மற்றவர்களின் குற்றம் குறைகளை சுட்டிக் காட்டுவதில் சிறந்தவர்களாக இருப்பீர்கள்.. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பதற்கு ஏற்ப துணையின் குற்றங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி காதல் செட் ஆகும்? தவறு செய்யாதவர்கள் இந்த உலகில் இல்லை என்பதை நினைத்துப் பாருங்கள் உங்களது கண்ணிற்கு அனைத்தும் சரியாக தெரியும்.

விருச்சிகம்

விருச்சிகம்

பொறாமை குணம் உங்களுக்கு இருக்கும்.. ஆனால் நீங்கள் காதலில் சிறந்தவர்களாக தான் இருப்பீர்கள்.. எனவே உங்களது கோபம் மற்றும் பொறாமை குணத்தை தள்ளி வைத்து பாருங்கள் காதல் நிச்சயம் வெற்றியடையும்..

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் ஏன் சிங்கிலாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்களது மனதை சமாதானப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள்.. நீங்கள் செய்வது சரி என்று தெரிந்து விட்டால் நீங்கள் உங்களது இடத்தில் இருந்து சற்றும் மாறமாட்டீர்கள்.. நீங்கள் மிக சிறந்தவ ஒரு நபர் தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடக்க கற்றுக் கொண்டால்....!

மகரம்

மகரம்

சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் திறன் உங்களிடம் குறைவாக தான் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் அதனை புரிந்து கொண்டு நீங்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதே போல காதல் சில நேரம் இனிக்கும் சில நேரம் கசக்கும்.. இந்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டால் உங்களது காதல் வாழ்க்கை சிறக்கும்..

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்கார்கள் சிங்கிலாக இருக்க காரணம் என்னவென்றால், இவர்கள் தங்களது சுதந்திரத்தை மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.. தனக்கு எது சரி என்று படுகிறதோ, தனக்கு எது பிடித்த விஷயமாக இருக்கிறதோ அதனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் இப்படி இருந்தால், காதல் உறவு அதிக நாட்கள் நீடிக்காது.. எனவே உங்களது இந்த குணத்தை சற்று மாற்றிக் கொள்ளலாம்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் எதுவும் வேகமாக நடந்தாக வேண்டும் என்று நினைப்பார்கள்.. ஒருசில விஷயங்கள் நடக்க சற்று கால தாமதம் ஆக தான் செய்யும்.. எனவே இவர்கள் தங்களது வேகத்தை சற்று குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Are Single According To Your Sign

Why You Are Single According To Your Sign
Story first published: Thursday, January 4, 2018, 12:00 [IST]