ஒரு முறையாவது பீரியட் கறைப் படிஞ்ச நாப்கின் பாத்திருக்கீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

நான் திருமணம் ஆனவன். என் மனைவிக்கு மாதாமாதம் பீரியட் வருவதை வெறும் செயலாக மட்டுமே அறிந்துள்ளேன். அவருக்கு தேவையாக இருக்கும் என தெரிந்து முன் கூட்டியே நாப்கின் வாங்கி வைத்ததுண்டு. ஆனால், அந்த நாப்கின் எந்த நிலையில் குப்பைத் தொட்டியில் சென்று விழுகிறது என்று நான் அறிந்தது இல்லை. ஏன், நான் அதை ஒருமுறை கூட குப்பையில் வீசியது இல்லை. அதற்கு என் மனைவியும் என்னை அனுமதித்தது இல்லை.

பயன்படுத்திய நாப்கின் என்றில்லை... அந்த ஐந்து நாட்களில் அவர் உடுத்தும் உடையை கூட தொட என்னை அனுமதித்ததில்லை என் மனைவி. நான் பீரியட் நாட்களில் பெண்களை ஒதுக்கி வைப்பதை எதிர்ப்பவன். அவள் என்ன வலிக்கு ஆளாகிறாள் என்று என்னால் அறிய முடியுமே தவிர, ஒருமுறை கூட உணர முடியவில்லை. அது பெண்களால் மட்டுமே உணர முடியும் என்று கருதினேன்.

நேற்று ஃபேஸ்புக்கில் நான் கண்ட புகைப்படம் ஒன்று... பீரியட் நாட்களில் பெண்கள் கடந்து வரும் அந்த வலியானது எப்படியாக இருக்கும், எத்தகைய அசௌகரியங்களை பெண்கள் எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை உணர்த்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

முகநூல் பதிவு!

ஆயுஷி மிட்டல் என்ற டெல்லியை சேர்ந்த பெண் கடந்த ஒருவாரமாக சமூகத்தளங்களில் நடந்து வந்த #PadmanChallenge-ஐ எதிர்த்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார். நீங்கள் டிரெண்ட் செய்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமான ஒன்று. புதிய நாப்கின் ஒன்றை கைகளில் வைத்துக் கொண்டு #PadmanChallenge செய்து முடித்துவிட்டேன் என்று மார்தட்டிக் கொள்வது சரியானது அல்ல. உண்மையில் ஒரு நாப்கின் எந்த நிலையில் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

55,000 வருடங்களாக!

பெண்கள் கடந்த 55,000 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக மனித இனம் தோன்றியதில் இருந்து பீரியட் அனுபவித்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் புதிய தூய நாப்கின் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஏதோ பெரிதாக சாதித்ததுவிட்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவது மிகையானது. நான் அறிவேன் இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான விஷயம். ஆனால், விழிப்புணர்வு முழுமையாக, அதன் விளைவுகள் என்னென்ன என்பதுடன் மக்களை சென்றடைய வேண்டும்.

அருணாசலம் முருகானந்தம்!

அருணாசலம் முருகானந்தம்!

தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் நாப்கின் தயாரித்து அதை ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் உருவாக்கினார். வெறுமென படத்தை பிரமோட் செய்வதற்காக இப்படி ஒரு சவாலை உண்டாக்கி உலாவிடுவது முட்டாள்தனமாகவும், சோகமாவும் இருக்கிறது. என்றும் பதிவிட்டிருந்தார்.

நீங்க பார்த்திருக்கீங்களா?

நீங்க பார்த்திருக்கீங்களா?

சிறு வயதில் இருந்து நமது சமூகத்தில் நாப்கின் என்பதை ஆண்கள் தீண்ட தகாத பொருளாகவே உருவகப்படுத்தி வருகிறோம். வீட்டில் ஒரு சகோதரி இருந்தால், அந்த நாப்கினை மிக பத்திரமாக பீரோவில் பல துணிகளுக்கு இடையே மறைத்து வைத்துவிடுவாள் அம்மா. ஆண்கள் கண்முன் நாப்கின் இருக்கவே கூடாது என்பது நமது சமூகத்தில் எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது.

இதை பாருங்க!

இதை பாருங்க!

உங்களில் எத்தனை பேர் இவ்வளவு இரத்தப்போக்கு நிறைந்த நாப்கினை இதற்கு முன் கண்டிருப்பீர்கள் என்று தெரியாது. ஆனால், உங்கள் சகோதரி, மனைவி, மகள், அம்மா இதை தங்கள் வாழ்வில் எண்ணற்ற முறை பார்த்து, பார்த்து அலுத்திருப்பார்கள்.

இதை கண்டவுடன் நீங்கள் முகம் சுளிக்கும் நபராக இருந்தால். இத்துடன் இந்த கட்டுரையை க்ளோஸ் செய்துவிட்டு சென்று விடலாம். ஒருவேளை உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் சிறு வலி ஏற்படுகிறது எனில். நீங்கள் தொடர்ந்து படிக்கலாம்.

சின்ன காயம்!

சின்ன காயம்!

கிரிக்கெட், புட்பால் போன்ற ஏதாவது விளையாட்டு ஆடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து முட்டி, கைகளில் எங்காவது அடிப்பட்டால் நாம் பேண்டேஜ் போடுவது வழக்கமாக இருக்கும். காலையில் அடிப்பட்டு போட்ட பேண்டேஜ் மாலைக்குள் கழன்று விடும். இல்லையேல் ஆண்கள் சரியாகிவிட்டதா என்று பார்க்கவே அதை நோண்டி, நோண்டி கழற்றிவிடுவார்கள்.

காயத்துடன் இரத்தம் மற்றும் சீழ் உடன் கலந்த அந்த பேண்டேஜினை நம்மால் ஒருசில நொடிகளுக்கு மேல் கைகளில் வைத்து காண முடியுமா? முடியாது. ஒருமாதிரி அருவருப்பாக இருக்கும்.

இயற்கை தானே...

இயற்கை தானே...

பெண்ணாக பிறந்தால் மாதவிடாய் பீரியட் இயற்கை தானே... இதற்காக என்ன செய்திட முடியும் என்று சிலர் கருதலாம்... காடு இயற்கை தான், ஆனால் அதற்காக அதை அழிப்பவனை நாம் கண்டும், காணாமலுமா இருக்கிறோம்? அவனை பிடித்து தண்டிப்பதில்லை? காட்டை அழிப்பவனுக்கு அதன் அருமை தெரியாது... அது வளர, உருவாக எத்தனை காலம் ஆனது, அதனால் சமூகத்திற்கு விளையும் பலன்கள் என்னென்ன என்று தெரியாது.

ஒருவேளை காட்டை அழிப்பதாலும், காட்டின் வலியும், உணர்வும் புரிந்தால்.... காட்டை அழிப்பவனுக்கு இவற்றை புரியவைத்தால்... காடுகள் பாதுகாக்கப்படும் அல்லவா?

கற்பழிப்பு!

கற்பழிப்பு!

நாம் செய்யும் பெரும் தவறே, பீரியட் குறித்த புரிதலை, அந்த நாட்களில் பெண்கள் கடந்து வரும் வலியை ஆண்கள் துளி அளவும் அறியா நிலையில் ஏற்படுத்தி வைத்திருப்பது தான். கொலை செய்ய சென்றவனாகவே இருப்பினும், அந்நபர் துன்புற்றிருந்தால் உதவுகிறானோ இல்லையோ.. மனம் வருந்தி கொலை செய்யாமல் வந்துவிடுவான்.

அப்படியாக தான் பெண்களின் உணர்வுகளை ஆண்கள் முழுமையாக அறிந்தால்... மாதவிடாய் என்பது என்ன, அவர்களுக்கு ஏற்படும் வலிகள் என்ன என்பது அறிந்தால் கற்பழிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் குறைய வாய்ப்புகள் உண்டு.

சூழல் மட்டும் தான் காரணமா?

சூழல் மட்டும் தான் காரணமா?

பொதுவாகவே தவறுகளுக்கு சூழல்கள் தான் காரணம் என்று சிலர் கருத்து கூறுவதுண்டு. சரி ஒரு உதாரணம் எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் குடித்திருந்தாலுமே கூட தவறென ஆழ்மனதில் பதிந்த செயல்களை செய்வதில்லை. அப்படியாக தான், கவர்ச்சியோ, அழகோ, உடையோ, மனசஞ்சல தடுமாற்றமோ எக்காரணம் இருப்பினும்... அவன் ஆழ்மனதில் பெண்மையும், பெண்ணின் வலியும், உணர்வும் ஆழப் பதிந்துவிட்டால் அவன் கற்பழிக்க முயற்சிக்க மாட்டான்.

கற்பித்தல் வேண்டும்!

கற்பித்தல் வேண்டும்!

அறிவியல், சமூக அறிவியல் போன்றவற்றுடன் மனித உணர்வியல் என்று ஒரு பாடம் ஏற்படுத்தி ஆண், பெண் உணர்வுகள், உறவுகள் மத்தியிலான உணர்வுகள் குறித்த பாடமும் கற்பிக்க வேண்டும். நமக்கு இதை கூட்டுக்குடும்பத்தில் தாத்தா, பாட்டிகளே கற்பித்தனர். ஆனால், இன்றைய தனிக்குடித்தன வாழ்க்கையில் இதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன.

எனவே, இது போன்ற பாடம் வளரும் தலைமுறையை டச் ஸ்க்ரீன் அறிவோடு சேர்த்து ஒரு பெண்ணை ஒரு ஆண் எப்படி டச் செய்ய வேண்டும், எப்படி டச் செய்ய கூடாது என்ற அறிவையும் அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Padman Challenge is Ridiculously Sad? Because You Do Not Know the Real Pain of Period!

Why Padman Challenge is Ridiculously Sad? Because You Do Not Know the Real Pain of Period!
Subscribe Newsletter