மீண்டும் வைரலான ஒரு கார்டியாக் அரஸ்ட் - இம்முறை சீனாவில்!

Written By:
Subscribe to Boldsky

அவர் ஏற்கனவே தரையில் விழுந்துக் கிடக்கிறார், அவர் இரும, இரும இரத்தம் சிந்துகிறது. ஆனால், அவருக்கு உதவ ஒருவரும் வரவில்லை.

மெட்ரோ, புல்லட் என்று ரயில்களை போலவும், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற ஃபாஸ்ட்புட் போலவும் மனித வாழ்க்கையும் மிக வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. தன் முன் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த நபர் கீழே விழுந்தால் தூக்கிவிட ப்ரேக் போட நேரமில்லாமல் ஓடுகிறோம், சிக்னலில் முப்பது நிமிடம் காத்திருக்க முடியாமல் வேகமாக ஓடுகிறோம். காதலை மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச ஓடுகிறோம். ஓட்டுக்கு பணம் கொடுக்கிறான் என்றால் அரசியல் வாதியை தேடி ஓடுகிறோம்.

எதற்காக இந்த ஓட்டம். சீக்கிரம் சென்று புதைக் குழியில் படுத்து உறங்கவா?

மக்கள் கூட்டம் நிறைந்த சீன ரயில் நிலையத்தில் நெஞ்சு வலியில் கீழே விழுந்த நபரை, அவர் தன் காசை எடுத்து வீசும் வரையிலும் உதவ ஒருவர் வரவில்லையாம். இது என்ன கொடுமை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷிஜியாவூவாங்!

ஷிஜியாவூவாங்!

ஷிஜியாவூவாங் (Shijiazhuang) வடக்கு சீனாவில் இருக்கும் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் ஒரு பகுதி. இங்கே இருக்கும் ரயில் நிலையத்தின் வெளியே கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஒரு நபர் மாரடைப்பு வந்து திடீரென கீழே விழுந்தார்.

லீ!

லீ!

அவரது பெயர் லீ என்று செய்திகளின் மூலம் அறியப்படுகிறது. பெரும் கூட்ட நெரிசலுக்கு நடுவே குயின்ஹூவாங்டுவோவில் (Qinhuangdao) இருக்கும் உடல்நலம் குன்றிய தனது தாயை காண பயணச்சீட்டு வாங்க சென்றார்.

நெஞ்சு வலி!

நெஞ்சு வலி!

திடீரென லீக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்படியே கீழே விழுந்த அவருக்கு இருமலுடன் இரத்தம் கசிந்தது. இங்கே அதிர்ச்சி என்னெவெனில், அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டே கீழே விழுந்துக் கிடந்தப் போதிலும் கூட அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

மக்கள் அலட்சியம்!

மக்கள் அலட்சியம்!

மக்கள் அவரை கடந்து செல்கிறார்கள், பயணச்சீட்டு வாங்குகிறார்கள், சிலர் அவரை கண்டும், காணாதபடி வேகமாக நடந்து, கடந்து சென்றுக் கொண்டே இருக்கிறார்கள். யார் ஒருவரது மனதிலும் ஈரம் சுரக்கவில்லை. யாரும் லீயை தனது நண்பராகவோ, உறவினராகவோ, மனிதராகவோ, ஒரு சீன பிரஜையாக கூட மதிக்கவில்லை.

பணத்தை வீசினார்...

பணத்தை வீசினார்...

எங்கே தான் இறந்துவிடுவோமோ என்ற அச்சம் லீயின் மனதில் அதிகரிக்க துவங்கியது. அவர் மிகவும் பதட்டம் அடைந்தார். உடனே லீ தன்னிடம் இருந்து பணத்தை எடுத்து தன்னருகே வீச துவங்கினார். பாக்கெட்டில் இருந்து, பையில் இருந்து இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து வீசுகிறார் லீ.

உதவிக்கு வந்தனர்...

உதவிக்கு வந்தனர்...

மெல்ல, மெல்ல கூட்டத்தில் இருக்கும் சிலர் லீயை ஏறெடுத்துப் பார்கிறார்கள். அவரை அணுகுகிறார்கள். அதுவும், லீ மதுவருந்தி இருக்கிறாரா என்ற சந்தேகத்துடன் நெருங்குகிறார்கள். அவரை நெருங்கிய பிறகே லீ நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார், அவர் மோசமான நிலையில் இருக்கிறார் என்பதை உணர்கிறது மக்கள் கூட்டம்.

ரயில்வே அதிகாரி

ரயில்வே அதிகாரி

லின் க்ஷியாங்ஷேன் என்பவர், ஆரம்பத்தில் நாங்கள் லீ குடி போதையில் இருக்கிறார் என்று கருதினோம். பிறகு, கொஞ்ச நேரம் கழித்து அவர் அருகே சென்று பார்த்த போது தான் அவர் நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்ததை அறிந்தோம். என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அவசர உதவி

அவசர உதவி

பிறகு ரயில்நிலைய அதிகாரி க்ஷியாங்ஷேன் அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு லீக்கு முதல் உதவி அளித்து, அவரை இயல்பு நிலைக்கு திரும்ப வர செய்தனர். தனக்கு திடீரென நெஞ்சு வலி வந்தது என்றும். தன்னால் அதை ஆரம்பத்தில் உணர முடியவில்லை. நான் எனது தாயை சென்று பார்க்க வேண்டிய பதட்டத்தில் இருந்தேன் என்றும் லீ செய்தியாளர்களிடம் அறிவித்திருக்கிறார்.

மனித நேயம்!

மனித நேயம்!

என்னவாக இருந்தாலும், அவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு நபர் நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுவதை சற்றும் கவனிக்காமல் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போவது, மனிதர்களுக்குள் மனித நேயம் இறந்துவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்திருக்கிறது. இப்படியே போனால், மனிதன் மிருதன் ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: life வாழ்க்கை
English summary

Where is Humanity? Person Thrown Money To Seek Medical Help for Heart Attack!

Where is Humanity? Person Thrown Money To Seek Medical Help for Heart Attack!
Story first published: Saturday, March 3, 2018, 18:35 [IST]