காதலித்த பாவத்திற்கு ஒன்றரை ஆண்டு என்னை சைக்கோ ஆக்கினான் - My Story #162

Subscribe to Boldsky

நீங்கள் இதுவரை படித்தவைகளில் எனது வாழ்க்கை ஆங்காங்க வந்து சென்றிருக்கும். நான் ஒன்றும் புதியதாக கூறிவிடப் போவதில்லை. ஆயினும், என் கதை மூலமாக நீங்கள் உண்மையான காதல் என்றால் என்ன? உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் யார்? உங்களது துயரமான தருணங்களில் யார் உங்களுக்கு தோள் கொடுத்து அரவணைத்து கூட்டி செல்வார்கள் என்பதை புரியவைக்க முடியும்.

ஒவ்வொரு ஆண், பெண்ணுக்கும் அவர்களது கல்லூரி காலத்தில் ஒரு காதல் காலமும் இருந்திருக்கும். சிலர் கல்லூரி காதலையே கல்லறை வரை அழைத்து சென்றிருப்பார்கள். சிலருக்கு அந்த காதலே கல்லைறை கட்டியும் இருக்கும்.

இந்த காலத்தில் காதல் என்பதும் ஒரு ஆடம்பர பொருளாகிவிட்டது. ஒரு பொருள் பக்கத்து வீட்டுக்கார வாங்கினால் உடனே நாமும் அதை வாங்கி பயனப்டுத்திவிட வேண்டும் என்ற ஆவல் மக்களிடம் இருக்கிறது. இந்த ஆவல் தான் இக்காலத்து இளைஞர்களிடம் பெருகி வருகிறது. மற்றபடி காதல், மண்ணாங்கட்டி என எதுவும் இல்லை.

என் நண்பன் காதலிக்கிறான், என் தோழி காதலிக்கிறாள்.... நான் மட்டும் ஏன் காதலிக்க கூடாது என உடனே ஒருவருடன் உறவில் இணைய முனைப்புடன் இறங்கிவிடுகிறார்கள். இப்படியான உறவுகளில் 99% மோசமான விளைவுகளை சந்தித்து தங்களது வாழ்வில் ஓரிரு ஆண்டுகளை இழந்துவிடுகிறார்கள்.

அப்படியான ஒரு பெண் தான் நானும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லூரி காதல்!

கல்லூரி காதல்!

நான் அவனை முதன் முறையாக காணும் போது ஆந்திராவில் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தேன். நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் மட்டுமல்ல, முதல் இரண்டு வருட காலம் நண்பர்களாக தான் பழகி வந்தோம். எங்களுக்குள் காதல் என்ற எண்ணமே இருந்ததில்லை.

கல்லூரி முடிவில் நாங்கள் இருவரும் இனி ஒன்றாக இருக்க முடியாது, பெரிதாக பார்த்துக் கொள்ள முடியாது... பிரிய போகிறோம் என்ற நேரம் நெருங்கிக் கொண்டிருந்த போதுதான் எங்களுக்குள் காதல் இருக்கிறது என்பதை அறிய துவங்கினோம்.

பிரபோஸ்!

பிரபோஸ்!

முதலில் அவன் தான் தனது காதலை தெரிவித்தான். நேரம் தாழ்த்தாமல் அவனது காதலை ஏற்றேன். ஏனெனில், அவனை காட்டிலும் அவன் மீது அதீத காதலும், அன்பும் கொண்டிருந்தேன் நான்.

எப்படி இந்த இரண்டு ஆண்டுகள் அவன் மீது காதல் என்ற எண்ணம் கொள்ளாமல் இருந்தேன் என எனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டேன்.

காரணம் , அவனை போன்ற ஒரு ஆண்மகனை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. நான் தமிழ், அவன் தெலுங்கு என்ற ஒன்றை தவிர எனக்கும், அவனுக்கும் மத்தியில் எந்தவித வேறுபாடும் இருந்ததே இல்லை.

அழகானவன்!

அழகானவன்!

பேசுவதில், ஒருவரிடம் பேசுவதில், பெண்களிடம் டீசண்டாக நடந்துக் கொள்வதில்., ஒருவர் மீது அக்கறை காண்பிப்பதில், ஒருவருக்கு உதவுவதில் என அவன் மிகவும் அழகானவன்.

எப்போதுமே இனிமையாக பேசுவான். எங்களுக்குள் காதல் பரிமாற்றம் நடந்த பிறகு தான் அவன் மிகவும் ரொமாண்டிக்காவும் பேசுவான் என்பதை அறிந்தேன். அவனது உபயோகிக்கும் வார்த்தைகள் தனித்துவம் வாய்ந்திருக்கும். அவனுடன் பழகுவது இனிமையான நேரம். அவனது வார்த்தைகளால் என்னை இரண்டாண்டு காலம் கட்டிவைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

வேலை!

வேலை!

சரியாக இருவரும் கல்லூரி முடித்த போது, சென்னையில் வெவ்வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வெவ்வேறு கம்பெனியாக இருந்தாலும், ஒரே ஊர் தான் என்ற நிம்மதி இருந்தது.

ஆனால், அந்த நிம்மதிக்குள்ளும் ஒரு குண்டு விழுந்தது. அவன் என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் மெல்ல, மெல்ல குறைத்துக் கொண்டான். இது ஒரு பக்கம் என்றால், வீட்டில் இன்னொரு பிரச்சனை வெடிக்க துவங்கியது.

மாப்பிளை!

மாப்பிளை!

எங்கள் குடும்பம் கோடு போட்டு வாழும் பழக்கம் கொண்டிருப்பவர்கள். காலை எட்டு மணிக்கு உணவு சாப்பிட வேண்டம் என்பதில் துவங்கி ஒரு பெண் குழந்தைக்கு எப்போது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது வரை அனைத்தையும் பக்கவாக கரக்டான நேரத்தில் செய்ய வேண்டும்.

படித்து முடித்து வேலையில் சேர்ந்த உடனே மாப்பிளை பார்க்க துவங்கிவிட்டார்கள். இது எனக்குள் மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஒருநாள் பொறுக்க முடியாமல் கத்திவிட்டேன்.

கடைசியாக, சரி! நீயாக ஒப்புக்கொள்ளும் வரை மாப்பிள்ளை பார்க்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர்.

ஒரு ஞாயிறு!

ஒரு ஞாயிறு!

ஒருவழியாக இந்த பிரச்சனை முடிந்தது... அவனும் என்னை ஒரு நாள் காண வருகிறேன் என்றான். ஒரே ஊரில் இருந்துக் கொண்டு பல நாட்கள் கழித்து என்னை காண நேரம் ஒதுக்கினான். அவன் மீதிருந்த கோபத்தை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு. அவனை காணும் சந்தோசத்தை மட்டுமே எனது இதயம் முழுக்க நிறைத்துவைத்துக் கொண்டேன்.

சனிக்கிழமை எனக்கு தலைக்கு மேல் பல வேலைகள் இருந்தது. ஆனால், அவற்றை எல்லாம் வேறு நாளுக்கு தள்ளிவைத்துவிட்டு, இவனை காண போகும் சந்தோசத்தில் சனிக்கிழமையில் மிதந்துக் கொண்டிருந்தேன்.

மொக்கை காரணம்!

மொக்கை காரணம்!

ஞாயிறு அன்று காலை கால் செய்து என்னால் இன்று வர முடியாது என்றான். ஏன் என்று காரணம் கேட்டதற்கு., எனது பைக் ஆந்திரா ரெஜிஸ்டர் ஆனது. இங்கே ஓட்டிக் கொண்டு வந்தால் பிரச்சனை வந்துவிடும் என்றான். இத்தனை நாள் அதே பைக் ஓட்டியவனுக்கு அன்று மட்டும் ஓட்ட முடியவில்லை. அப்படியே இருந்தாலும், சென்னையில் பயணிக்க வேறு வழிவகையே இல்லையா என்ன?

வேண்டுமென்றே என்னை அவாயிட் செய்கிறான் என்பதை அறிந்துக் கொண்டேன். அத்துடன் அவனது நிறுவனத்தின் வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகுவதையும் அவனது தோழி மூலம் அறிந்துக் கொண்டேன்.

சைக்கோ!

சைக்கோ!

அடுத்த ஓரிரு வாரங்களிலேயே அவன் அந்த பெண்ணை காதலிக்கிறான் என்றும், அதற்காக தான் என்னை வெறுக்கிறான், ஒதுக்குகிறான் என்றும் அறிந்துக் கொண்டேன்.

அவனிடம் நேரில் போய் பேசினேன். என்னை சைக்கோ என்றும். என்னால் தான் அவனது வாழ்க்கை பொலிவிழந்து போய்விட்டது. அவனது வேலை நன்றாக அமையாமல் போனதற்கும் அவன் அடுத்த நிலைக்கு போகாமல் இருப்பதற்கும் நான் தான் காரணம் என கைக்காட்டினான்.

கெஞ்சினேன்!

கெஞ்சினேன்!

எந்த ஒரு சங்கோஜமும் இன்றி, வெளியிடத்தில் அவனிடம் கெஞ்சி மன்றாடினேன். ஆனால், அவன் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஒரு எல்லையில் அவனிடம் பிச்சைக் கேட்கும் அளவுக்கு கெஞ்சி, அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பதை புரிய வைத்தேன்.

அனைத்திற்கும் சேர்த்து... நீ சைக்கோ... உன்னை போன்ற ஒரு பெண்ணுக்கு என் வாழ்வில் இடமே இல்லை என்று கூறி நகர்ந்துவிட்டான்.

தற்கொலை?!

தற்கொலை?!

அப்படி ஒரு மன அழுத்தம் அதற்கு முன் என் வாழ்வில் நான் உணர்ந்தது இல்லை. அனைவரும் மீதும் கோபம் கொள்வேன், நாள் முழுக்க அழுதுள்ளேன். தற்கொலை செய்துக் கொள்ளவும் என்னுள் பல முறை எண்ணங்கள் எழுந்தன. ஏறத்தாழ ஓராண்டு காலம் யாருடனும் சிரித்து பேசாமல், நான் என் அறையில் தனிமையில் அழுத நாட்கள் பலவன உண்டு.

நான் ஒருவனை காதலித்தேன், அவன் என்னை ஏமாற்றி சென்றுவிட்டான் என்பதை எல்லாம் அறியாத எனது பெற்றோர், எனக்கு ஏதோ வேலை இடத்தில் அழுத்தம் இருப்பதால் இப்படி எல்லாம் செய்கிறேன் என நினைத்து எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தனர். என்னை பல சமயங்களில் தட்டிக்கொடுத்து வழிநடத்தினார்கள்.

உண்மையான காதல்...

உண்மையான காதல்...

வேறு ஒரு பெண் வந்ததும் என்னைவிட்டு சென்ற அவன் எங்கே, நான் செய்த தவறை கூட அறியாமல் என்னை அரவணைத்து சென்ற என் பெற்றோர் எங்கே.

என் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அந்த ஓராண்டு காலம் என்னுடன் மிகவும் நெருக்கமானார்கள். என் அம்மா எனக்கு நெருங்கிய தோழியாக மாறினாள். என் தந்தை நான் என்ன கூறினாலும் கேட்டார். அவரது எந்த ஒரு முடிவும் என் மனம் புண்பட்டுவிடும்படி நடந்துவிட கூடாது என பார்த்து, பார்த்து பேசுவார்.

திருமணத்தை பற்றி அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்னர்...

ஆறு மாதங்களுக்கு முன்னர்...

ஆறு மாதங்களுக்கு முன்னர்... நானாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். இது என்னை மகிழ்விக்கும் என்பதை காட்டிலும்.. என் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் என்பது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்பதை மட்டும் நான் நன்கு அறிந்திருந்தேன்.

அவர்களே எனக்கான நல்ல துணையை தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் எனக்கு திருமணமாகவுள்ளது. அவனது எண்ணங்கள் ஒவ்வொன்றையும் மிகுந்த வலியுடன் அழித்து வருகிறேன்.

எது தவறு...

எது தவறு...

இங்கே காதலோ, ஆண்களோ தவறானவர்கள் என்று நான் குறிப்பிடவில்லை. உங்கள் தோழி காதலிக்கிறாள் என்ற காரணம் கொண்டு நீங்களும் காதலில் குதித்துவிட வேண்டாம். நட்பை காதலென தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம். உண்மையான காதல் அதுவாக உங்களை இதயத்தில் வந்து குடியமரும்.

தவறான தலைவனை ஆட்சி பொறுப்பில் ஏற்றி வைப்பதை விட பலமடங்கு பெரிய தவறு, தவறான துணையை இதயத்தில் ஏற்றி வைப்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    When I Realized the True Love, He is not With Me!

    When I Realized the True Love, He is not With Me!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more