இரண்டு பவுர்ணமிகள் இந்த மாதத்தில் வருவது, உங்களது ராசிக்கு நன்மையா? தீமையா?

Written By:
Subscribe to Boldsky

இந்த 2018- ஆம் வருடத்தின் தொடக்கத்திலேயே இரண்டு பவுர்ணமிகள் வருகின்றன. முதல் பவுர்ணமியானது ஜனவரி மாதம் முதல் தேதியிலும் மற்றொரு பவுர்ணமி இந்த மாதத்தின் இறுதியில் அதாவது 31-ஆம் தேதியும் வருகிறது. பவுர்ணமி என்பதே விஷேசமானது தான்.. ஆனால் இரட்டை பவுர்ணமி வரும் மாதமானது எவ்வளவு விஷேசமானதாக இருக்கும் என்று பாருங்கள். இதில் முதல் பவுர்ணமியானது கடக ராசியிலும் இரண்டாவது பவுர்ணமியானது சிம்ம ராசியிலும் வருகிறது.

முழுநிலவானது உறவுகளை குறிக்கும். இந்த இரண்டு முழுநிலவுகளானது உங்களது இராசியில் என்னென்ன நன்மைகளை உண்டாக்க போகிறது என்பதை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த முழுநிலவு ஆனது உங்களது இராசிக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். இந்த முழுநிலவு காலத்தில் உங்களது காதல் உறவுகள் மற்றும் கணவன் மனைவி உறவுகள் மேம்படும். இல்லற வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கையில் இம்மாதத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போனாலும் அதனை நீங்கள் நேர்த்தியாக கையால்வீர்கள்.. பிரச்சனைகள் வந்த வேகத்தில் மறைந்து விடும். உங்களது எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் விரோதத்தை உண்டாக்கும் விஷயங்கள் கட்டுக்குள் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

முதல் பவுர்ணமி காலத்தில் உங்களது உறவுகளுக்கு இடையே உண்டான பிரச்சனைகளை மன்னித்துவிடுவீர்கள் இதனால் உறவுகளுக்கு இடையே அன்பும், அன்னியோனியமும் பெருகும். இரண்டாவது பவுர்ணமி காலத்தில் நீங்கள் அதிக பணிச்சுமையில் மாட்டிக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த இரண்டு பவுர்ணமிகளுக்கு இடைப்பட்ட காலங்களும் இன்பம், துன்பம் இரண்டுமே கலந்ததாக இருக்கும். மொத்ததில் இந்த பவுர்ணமி காலம் உங்களுக்கு வாழ்க்கையை எப்படி சமாளித்து வாழ்வது என்பதை கற்றுக் கொடுப்பதாக அமையும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த 2018-ஆம் வருடம் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் வேலை சார்ந்ததாகவே இருக்கும். இந்த முதல் பவுர்ணமி காலத்தில் இருந்து நீங்கள் உங்களது உடலை பிட்டாக வைத்துக் கொள்ளும் வழியையும், சத்தான உணவுகளை சாப்பிடுவதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வேலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

கடகம்

கடகம்

இந்த முதல் முழுநிலவு காலத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மதிப்புகள் எல்லாம் கிடைக்காமல் தள்ளி போவது போல தெரியும். ஆனால் நிச்சயமாக உங்களுக்கான வெகுமதிகள் உங்களை வந்து சேரும். இரண்டாவது முழு நிலவு காலத்தில் உங்களது பிரச்சனைகள் எல்லாம் விலகி தொழில், உறவு போன்றவை சுமூகமாக இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த முழுநிலவு நாள் நன்மையை கொடுக்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உங்களை இதுவரை ஏமாற்றி வந்தவர்களை நீங்கள் அடையாளம் காணுவீர்கள். பிறரின் உண்மையாக முகம் வெளிப்படும். இதுவரை நீங்கள் செய்து வந்த நல்ல காரியங்களுக்கான நன்மைகள் உங்களை தேடி வந்து சேரும்.

கன்னி

கன்னி

உங்களது வாழ்க்கையில் இதுவரை நடந்து வந்த தேவையற்ற விஷயங்கள் எல்லாம் இனி மறைந்து போகும். முதலாவது முழுநிலவானது உங்களது உறவுகளுக்கு இடையில் பல நல்ல மாற்றங்களை கொண்டுவரும். சிலருக்கு காதல் கைகூடும். இரண்டாவது முழுநிலவு காலத்தில் பல நேர்மறையான விஷயங்கள் உங்களை சுற்றி நடக்கும். உங்களது தேவைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். வாழ்க்கை இன்பமயமானதாகும்.

துலாம்

துலாம்

உங்களது வாழ்க்கை நல்ல பாதையை நோக்கி செல்லும் காலம் வந்துவிட்டது. இனி நீங்கள் உங்களது வாழ்க்கையில் உயரத்தை எட்டுவீர்கள். இதுவரை தடைப்பட்டு வந்த காரியங்கள் நல்ல படியாக நடக்கும். உங்களது நீண்ட நாள் கனவுகள் வெற்றியடையும். வாழ்க்கையில் உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்கள் நீண்ட நாட்களாக சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை செய்து, அதில் வெற்றி காண்பீர்கள். இந்த முழுநிலவு நாளில் நீங்கள் புதிய பாதையை தொடங்குவீர்கள். உங்களது மனது என்ன சொல்கிறதோ அதன் படி செயல்படுங்கள் இதனால் நீங்கள் வெற்றி பாதையில் செல்வீர்கள்.

மகரம்

மகரம்

செய்யும் வேலையில் கவனமாக செயல்படுவது அவசியமாகும். உயர் அதிகரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். எந்த காரியத்தை முதலில் செய்ய வேண்டும், எந்த காரியத்தை இறுதியில் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களை உணர்ந்து செயல்படுங்கள். செய்யும் செயல்களில் பொறுமை அவசியம். இந்த மாதத்தின் இறுதியில் உங்களது கஷ்டங்கள் விலகும். நேர்மறையான விசயங்கள் நடக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களை யாரையும் முழுமையாக நம்பாதீர்கள். உறவுகளுக்கு இடையே சிறுசிறு சிக்கல்கள் வந்தாலும் அவை விரைவில் சரியாகும். வாயை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். உங்களது சில குணங்களை ஒரு நல்ல காரியம் நடப்பதற்காக மாற்றிக் கொள்ளலாம். இந்த முழுநிலவு நாளானது உங்களது வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். மாற்றங்கள் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

இந்த முழுநிலவு வரும் காலத்தில் நீங்கள் உணர்வுபூர்வமாக சமநிலையில் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். நீங்கள் பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்களது கோபங்கள் மற்றும் உணர்ச்சி வசப்படுவது போன்றவற்றை கட்டுபடுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும்.

மீனம்

மீனம்

நீங்கள் யார் உண்மையான நண்பர்கள், யார் உண்மையான எதிரிகள் என்பதை இந்த காலகட்டத்தில் புரிந்து நடந்து கொள்ள வேண்டியது இருக்கும். உங்களது வாழ்க்கையின் இலட்சியங்கள் என்ன? உங்களது பொழுதுபோக்குகள் என்ன என்பது போன்றவற்றை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அதே சமயத்தில் உண்மையான காதல் என்றால் என்ன என்பது பற்றியும் நீங்கள் புரிந்து செயல்படுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is this full moons in January gives You Based on Your Zodiac Signs

What is this full moons in January gives You Based on Your Zodiac Signs