மாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்... சீனாவின் வினோத திருமண சடங்கு!

Subscribe to Boldsky

திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. இரண்டு வெவ்வேறு குடும்பத்தில் இருந்து மணப்பெண், மணமகன் இணைந்து ஒரு புதிய இல்வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும் அந்த தருணத்தில் இருந்து வாழ்நாள் முழுக்க அவர்கள் இருவரும் மகிழ்ச்சி நிறைந்து, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள்.

பொதுவாக மணப்பெண் திருமணமாகி கணவன் வீட்டுக்கு செல்லும் போது, பெண்ணின் உறவினர், அம்மா, அப்பா போன்றவர்கள் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள்.

இந்த ஒரு காரியம் மட்டும் தான் திருமண நிகழ்வில் நடுவே கொஞ்சம் சோகமானதாக இருக்கும். ஆனால், எங்காவது திருமண பெண்ணை வாரம் முழுக்க அழவிட்டு வேடிக்கை பார்த்து, என்ன என்ற கேட்டால்... இது திருமண சடங்கு என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதோ! உலகின் வினோத தேசமான சீனா... உங்களுக்கு மற்றுமொரு வினோதத்தை கற்றுக் கொடுக்கிறது.. அது தான் அவர்களது தனித்துவமான திருமண சடங்குகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜுவா டங்!

ஜுவா டங்!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் தான் ஜுவா டங் எனப்படும் இந்த விசித்திரமான திருமண சடங்க பின்பற்றப்பட்டு வருவதை காண முடிகிறது.

இந்த சடங்கின் போது, திருமண பெண், திருமண தேதியில் இருந்து சரியாக ஒரு மாத காலம் அழ வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. எல்லா நாளும் இரவு ஒரு மணி நேரம் அழ வேண்டும் என்று கூறுகிறார்கள்.

Image Source: DailyHunt

பத்து நாட்கள்...

பத்து நாட்கள்...

முதல் பத்து நாட்களில் மணப்பெண் மட்டும் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து அழுவார். பிறகு பத்து நாட்கள் கழித்து, மணப்பெண்ணுடன் அவரது அம்மாவும் சேர்ந்து உட்கார்ந்து அழுவார்.

அடுத்த பத்து நாட்கள் கழுத்து மணப்பெண்ணின் பாட்டியும் உடன் அமர்ந்து அழுவார். கடைசியாக அத ஒரு மாத காலம் முடிவடையும் போது உறவினர்களில் இருக்கும் அணைத்து பெண்களும் சேர்ந்து அழுவார்கள்.

Image Source: DailyHunt

பாடல்!

பாடல்!

அழுவார்கள் என்றாகள் ஒப்பாரி வைப்பது போல சத்தமிடுவது, கண்ணை கசக்கி கொண்டு அமர்ந்திருப்பது என்பபது போல அல்ல. அழுவதற்கு என தனி இடம் இருக்கிறது. அங்கே சென்று தான் அழுகிறார்கள்.

மேலும், அழும் போது அதற்கென தனி பாடல்கள் இருக்கின்றன. அதை பாடிக் கொண்டே தான் மணப்பெண்ணின் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் அழுகிறார்கள். ஒரு ரொமாண்டிக்கான நிகழ்வை... அழும் சடங்கை வைத்து மொத்தமாக மாற்றிவிடுகிறார்கள் இவர்கள்.

Image Source: DailyHunt

வேறு பெயர்!

வேறு பெயர்!

இது போன்ற சடங்குகள் முன்னொரு காலத்தில் இருக்கிறலாம்... இன்றுமா இதெல்லாம் இருக்கும்... உலகம் எங்கே போய் கொண்டிருக்கிறது... இப்போதெல்லாம் இப்படி இருக்க மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால்.. மன்னிக்கவும்... இன்றும் இந்த சடங்கு அப்பகுதி மக்கள் பின்பற்றி வருகிறார்கள். ஜுவா டங் அல்லது Sitting in the hall என்ற பெயரில் இந்த சடங்கை பின்பற்றி வருகிறார்கள்.

அந்த மணப்பெண்ணுக்கு திருமணம் பிடித்திருக்கிறதோ இல்லையோ... அழுக வேண்டியது கட்டாய சடங்காக காணப்படுகிறது இப்பகுதி மக்களிடையே!

இதுமட்டுமல்ல மக்களே... இன்னும் சில வினோத திருமண சடங்குகள் சீனாவில் இருக்கின்றன. அதையும் நீங்க தெரிஞ்சுக்கணும்...

அம்பு!

அம்பு!

இறக்கும் படி எய்வது அல்ல. மணமகன் மூன்று முறை அம்புகள் கொண்டு மணப்பெண்ணை நோக்கி எய்ய வேண்டும்.இந்த சடங்கு முடிந்தவுடன்... அந்த மூன்று அம்புகளை எடுத்து மணமகன் உடைத்து போட்டுவிடுவார். இதனால், மணமக்கள் இடையே காதல் எப்போதும் நீடித்திருக்கும் என்று சீன மக்கள் கருதுகிறார்கள்.

சிவப்பு!

சிவப்பு!

சிவப்பு என்பது சீன கலாச்சாரத்தை பொறுத்தவரை காதல், அதிர்ஷ்டம் மற்றும் தைரியத்தை குறிக்கும் நிறமாக காணப்படுகிறது. எனவே, இந்த நிறத்தை தங்கள் திருமண சடங்கிலும் சேர்த்துக் கொள்கிறார்கள் சீனர்கள்.

சில பிரிவு மக்கள் மணமகளின் முகத்தை சிவப்பு நிற துணி கொண்டு மூடி அழைத்து வருவார்கள். மணமகளின் அம்மா, சிவப்பு நிற குடை பிடித்து நடந்து வருவார். இந்த முறை இணக்கம் மற்றும் கருவுறுதலை குறிக்கிறது என்று கூறப்படுகிறது.

முதலிரவு!

முதலிரவு!

நம்ம ஊர் போலவே, திருமணமான முதலிரவன்று நிறைய சடங்குகள் பின்பற்றுகிறார்கள் சீனாவிலும். ஆனால், அங்கு தான் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். நம் ஊர்களில் முதலிரவன்று பால், பழம், நிறைய இனிப்புகள் வைத்திருப்பார்கள்.

ஆனால், சீனாவில் முதலிரவன்று மணமகள் பாதி வெந்த அளவில் சமைக்கப்பட்ட உணவை உண்ண வேண்டும். சைவமாக இருந்தால் பரவாயில்லை, இதுவே அசைவமாக இருந்தால்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Weird Wedding custom: Bride Must Cry for Weeks Before Marriage

    Weird Wedding custom: Bride Must Cry for weeks before marriage, check reason
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more