For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலியல் அடிமைகளைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்!

|

சீனாவில் உள்ள மிங் என்ற வம்சத்தினர் 276 ஆண்டுகள் வரை ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். மனித வரலாற்றில் நீண்ட காலம் நடைப்பெற்ற ஓர் மன்னராட்சி எனப்படுகிறது. இந்த ஆட்சியில் தான் மன்னர்கள் உலகளவில் ஆதிகக்ம் செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். நிறைய தொழில்நுட்பங்களை, வணிகத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

பல புதிய நடைமுறைகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்தார்கள். ஒரு பக்கம் இவர்கள் புகழப்பட்டாலும் இன்னொரு பக்கம் இவர்கள் மிகவும் கொடுமைக்காரர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சில மிங் வம்சத்தின் அரசர்கள் தங்களுக்கு என்று ஒன்பதாயிரம் பெண்களை அடிமையாக குறிப்பாக பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இவற்றில் பலரும் கடத்தி வரப்பட்ட பெண்களாகவே இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்த மிங் வம்சத்தினை துவக்கியவர் ஹோங்வ் என்ற மன்னர் சீனாவை ஆட்சி செய்த மன்னர்களில் மிகவும் முக்கியமானவராக இவர் இருக்கிறார். பொருட்களின் மீது பற்றில்லாத ஓர் துறவியாக வளர்ந்தவர் பின்னாட்களில் அராசாளும் மன்னரானார்.

இவர் ஆட்சி செய்த காலத்தில் தான் சீனாவில் ராணுவத்தை அறிமுகப்படுத்தினார்.

Image Courtesy

 #2

#2

மக்கள் மத்தியில் நிலையான ஓர் இடம் கிடைத்த பிறகு தன்னுடைய ஆட்சிக்கு மிங் வம்சம் என்று பெயர் வைத்துக் கொண்டார். ஒரு பக்கம் தன்னுடைய ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள ஏராளமான விஷயங்களை செய்தார்.

அதே நேரத்தில் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவற்றில் முதன்மையானதாக சொல்லப்படுவது இவர் ஏராளாமான பெண்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்தார், அவர்களுக்கு நிறைய கொடுமைகளையும், சித்திரவதைகளையும் செய்தார் என்பது தான்.

Image Courtesy

#3

#3

இந்த உலகையே கட்டியாள வேண்டும் எல்லாரும் தனக்கு கீழ் படிந்து நடப்பவராக வேண்டும் என்ற கொண்டவராக இருந்தார். இவருக்கு அடிமையாக இருந்த பெண்கள் அத்தனை பேரையும் தன் மரணத்திற்கு பிறகும் தானே உரிமை கொண்டாட வேண்டும் என்று நினைத்தவர் ஓர் காரியத்தை செய்தார்.

அதாவது அந்த அரசர் இறந்து அவரை எரியூட்டும் போது அதே நெருப்பில் விழுந்து இறக்க வேண்டும். அப்படியில்லையென்றால் நிர்பந்தித்தாவது அந்த பெண்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவார்கள் அதுவும் இல்லையென்றால் கொலை நிகழும்.

Image Courtesy

 #4

#4

இவருக்கு பிறகு அடுத்தடுத்து வந்த அரசர்களும் அதே பாணியை பின்பற்றினார்கள். கிட்டத்தட்ட இரண்டு அரசர்களுக்கு அடுத்து மூன்றாவதாக வந்த ஜெங்டாங் என்ற மன்னர் இந்த முறையை ஒழித்துக் கட்டினார். நம் நாட்டில் அந்தப்புரத்து அழகிகள் என்று சொல்வோமே.... அதே போலத்தான் இந்த பெண்கள். சீனாவில் மட்டுமல்ல பழங்கால வரலாற்றில் பல இடங்களில் மன்னர்கள், செல்வந்தர்கள் இது போன்ற பெண்களை காமத்திற்கான அடிமைகளாக வைத்திருப்பது சாதரணமான நடைமுறையாக இருந்திருக்கிறது.

இப்படியாக அதிகப்படியான எண்ணிக்கையில் பெண்களை தன்னுடைய அடிமையாக வைத்திருப்பது தங்களுக்கான ஓர் தகுதியாக நினைத்துக் கொண்டார்கள். சீனாவில் மட்டும் ஒரு அரசர் ஆயிரம் பெண்கள் வரை தன்னுடைய பாலியல் அடிமையாக வைத்திருந்தார்.

Image Courtesy

#5

#5

மெசபொட்டாமியா மற்றும் பாபிலோனியா போன்ற நாகரிகம் வளர்ந்த காலத்திலிருந்தே அப்போது வாழ்ந்த செல்வந்தர்கள் இது போன்ற பாலியல் அடிமைகளை வைத்திருந்ததாக அறியப்படுகிறது. பெரும்பாலும் இந்தப் பெண்கள் அடிமைகள் போன்றே நடத்தப்பட்டார்கள். இவர்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.

சில இடங்களில் இந்தப் பெண்கள் கடவுளுக்கு மிக நெருக்கமானவர்களாக பார்க்கப்பட்டார்கள். அவர்களிடம் உறவு வைத்துக் கொள்வது என்பது ஓர் சமூக அந்தஸ்த்தாக பார்க்கப்பட்டது.

Image Courtesy

#6

#6

மெசப்பொடாமியன் கலாச்சாரத்தில் இது போன்ற பாலியல் அடிமைகளிடத்தில் ஆண்கள் சென்று வருவதை மக்கள் ஓர் சமய சடங்காகவே பார்த்தார்கள். ஆண்களின் முக்கியமான கடமைகளில் அதுவும் ஒன்று என்ற அளவில் பார்க்கப்பட்டது.

பைபிளில் கூட இந்த பாலியல் அடிமைப் பெண்கள் குறித்து தகவல் இடம் பெற்றிருக்கிறது. மனைவியாக வேண்டும் என்பவள் வரதட்சனை கொண்டு வருவாள் ஆனால் இவர்கள் அதெல்லாம் இல்லை அது மட்டும் தான் இருவருக்கும் இடையிலான பிரதான வித்யாசமாக இருந்திருக்கிறது.

Image Courtesy

#7

#7

பைபிளில் குறிப்பிட்டிருந்தது. 1011 முதல் 931 கிமு வரை வாழ்ந்த மன்னர் சாலமன் என்பவருக்கு மூந்நூறு பாலியல் அடிமைப் பெண்கள் வரை இருந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு இது போன்ற பாலியல் அடிமை முறை கிறிஸ்துவத்தில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த பாலியல் அடிமைகளை யாரெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு நிறைய எடுத்துக் காட்டுகள் சொல்லப்பட்டிருக்கும். யூதர்களை பொருத்தவரையில் மன்னர்களுக்கு மட்டுமே இதற்கு அனுமதி சாதரண பொதுமக்களாக இருப்பவன் அவன் எவ்வளவு பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் பாலியல் அடிமைகள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

Image Courtesy

#8

#8

பொதுவாக இரண்டு வழிகளில் பாலியல் அடிமை பெற்றதாக கூறப்படுகிறது. முதலாவது போரில் தோற்ற நாட்டில் வாழ்ந்த பெண்களை சிறை பிடிக்கப்பட்டு அடிமைகளாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்கள்.

இன்னொன்று ப்ரீ இஸ்லாமிக் என்று அழைக்கப்படுகிற காலகட்டத்தில் மனிதர்களை அடிமைகளாக விற்பனை செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. அப்படியும் பாலியல் அடிமைகள் வாங்கப்பட்டார்கள்.

Image Courtesy

#9

#9

இந்த வழக்கம் உலகம் முழுமைக்கும் நடைமுறையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப கால க்ரீஸ் நாட்டில் தான் வைத்திருந்த பாலியல் அடிமையிடம் இன்னொரு ஆண் உறவு வைத்துக் கொண்டான் என்றால் அவன் குற்றவாளி என்று சட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.

இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நாட்டின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படமாட்டார்கள். இதே போல ரோமானிய கலாச்சாரத்தில் மனைவி அல்லாத பிற பெண்களிடத்தில் செல்வது அங்கீகரிக்கப்பட்டதாகவே இருந்திருக்கிறது. சமூக அந்தஸ்தில் கீழ் நிலையில் இருப்பவர்கள், வரதட்சனை கொடுத்து திருமணம் செய்ய முடியாதவர்கள் ஆகியோர் இது போன்ற பாலியல் அடிமைகளாக சென்றார்கள்.

Image Courtesy

#10

#10

இப்படி பாலியல் அடிமைகளாக இருப்பது ஓர் தரக்குறைவான விஷயமாக யாரும் நினைக்கவில்லை. தங்களுடைய மரணத்திற்கு பிறகு தான் ஒரு பாலியல் அடிமை என்று கல்லறையில் எழுதி வைக்கச் சொன்ன சம்பவங்களும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. சீனாவில் உள்ள மன்னர்கள் தங்களிடம் பாலியல் அடிமைகளாக இருந்த பெண்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் தரவரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

மனைவிக்குப் பிறகு அடுத்த அந்தஸ்த்தில் இருக்கக்கூடிய அடிமையிலிருந்து தனக்கு சேவை செய்யும் பணியாளப் பெண் வரை கிட்டத்தட்டு எட்டு அடுக்குகளாக அந்த பெண்களை தரவரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

Image Courtesy

#11

#11

இந்த பாலியல் அடிமைகளாக இருப்பவர்களை தன்னுடைய ஒரு பொருளாகவே.... தான் மட்டும் உரிமை கொண்டாடக்கூடிய ஒரு பொருளாகவே பார்த்தார்கள். தன்னைப் பார்க்க வேறு நாட்டு அரசரோ அல்லது தூதுவனோ வந்தால் அவனுக்கு கொடுத்தனுப்பும் பரிசுப் பொருட்களில் ஒரு பாலியல் அடிமையும் இடம்பெற்றிருக்கும்.

சில இடங்களில் பெண்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பாலியல் அடிமைகளாக இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களுக்கு என்ற ஓர் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். இன்றைக்கு இது போன்ற அடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லப்பட்டாலும் உலகில் ஆங்காங்கே இது மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse women
English summary

Unknown Facts About Concubines In Ancient History

Unknown Facts About Concubines In Ancient History
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more