Latest Updates
-
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடலால் உருவாகியுள்ள புதிய ஆபத்து என்ன தெரியுமா? -
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க... -
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம்
சாத்தானின் அடையாளங்கள் குறித்த மர்மங்கள்!!
தீமையான விஷயங்கள் குறித்து சாத்தான், பூதம், அரக்கன் என்று அனைத்து மதங்களிலும் சில கேரக்டர்களை நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நல்ல விஷயங்களை வலியுறுத்துவதற்காக இந்தத் தீமையானவற்றைப் படைத்து, அவை செய்யும் அநியாயங்களை நல்ல விஷயங்கள் மூலம் முறியடிப்பது புராண கால சங்கதிகள்!
சமயம் சார்ந்த 12 சின்னங்களும்... அதன் அர்த்தங்களும்...
அதை காலம் காலமாக இன்று வரை நாம் பின்பற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக அந்த சாத்தான்களின் வடிவங்களும், செயல்பாடுகளும் நிறைய மாறியுள்ளன. இதுப்போன்ற செயல்பாடுகள் சிலசமயம் முட்டாள்தனமாக இருந்தாலும், மக்களின் நம்பிக்கையும், அறியாமையும் அவற்றை நம்பத்தான் செய்கின்றன.
துர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களுக்கான அர்த்தங்கள்!!!
அப்படிப்பட்ட சாத்தான்களுக்கென்று பல அடையாளங்களையும், குறிகளையும் கூட உருவாக்கி வைத்துள்ளனர். பெரும்பாலும் அத்தகைய சின்னங்கள் உக்கிரமானவையாக இருக்கும். குட்டியான சிவப்புக் கொம்புகள் ஒரு உதாரணமாகும். அத்தகைய சில சாத்தான்களின் அடையாளங்கள் குறித்த விஷயங்களையும், அவை குறித்த மர்மங்களையும் இப்போது நாம் பார்க்கலாம்.

பெண்டாக்ராம்
பொதுவாக ஒரு பெண்டாக்ராம் என்பது ஐந்து முனைகளையுடைய ஒரு நட்சத்திரம் போல மேல் நோக்கித் திரும்பி இருக்கும். ஆனால், அந்த நட்சத்திரத்தைத் திருப்பிப் போட்டது போல் சாத்தானின் பெண்டாக்ராம் இருக்கும். மெட்டீரியல் பிரபஞ்சத்தின் நான்கு முக்கிய விஷயங்கள் மற்றும் ஒரு ஆவி ஆகியவற்றின் குறியீடாக இது கருதப்படுகிறது. மேலும், மனிதனின் இரு கைகள், இரு கால்கள் மற்றும் ஒரு தலை ஆகியவற்றைக் குறிப்பதாகவும் இது அமைந்துள்ளது. இயற்கை மற்றும் மனிதனின் கவுரவ அடையாளமாக மற்றும் கடவுளுக்கு எதிராக இது கருதப்படுகிறது.

சாத்தானின் சிலுவை
லெவியத்தான் சிலுவை என்றும் அழைக்கப்படும் இந்தச் சாத்தானின் சிலுவை, கிறிஸ்தவர்களால் நம்பப்படும் சாதாரண சிலுவையின் தலைகீழ் வடிவத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இது உண்மையல்ல என்று சொல்பவர்கள், இந்தச் சாத்தானின் சிலுவையின் அடிப்பகுதியில் இன்ஃபினிட்டி குறியீடும் இரு சிலுவைகளும் இருக்கும் என்றும் கூறுவதுண்டு. ஆண்-பெண்ணுக்கு இடையிலான சமநிலையையும், பாதுகாப்பையும் இந்த இரு சிலுவைகளும் குறிக்கின்றன. எல்லையில்லா ஓய்வு அல்லது மகிழ்ச்சியை இன்ஃபினிட்டி குறியீடு குறிக்கிறது.

சாத்தானின் எண் 666
'புக் ஆஃப் ரெவிலேசன்' என்ற புத்தகத்தின் அடிப்படையில், 'ட்ரிபிள் சிக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்தக் குறியீடு, மிருகத்தின் அல்லது சாத்தானின் எண்ணாகக் கருதப்படுகிறது. கலகத்தின் குறியீடாகக் கருதப்படும் இந்த எண்களைக் கண்டாலோ அல்லது பயன்படுத்தினாலோ சாத்தான்களுக்கு சந்தோஷமாக இருக்குமாம்!

சிங்க முத்திரை
மடிந்து போன தேவதைகளின் இளவரசரான லூசிஃபெரின் குறியீடாக இந்த முத்திரை கருதப்படுகிறது. மந்திர தந்திரங்களைப் பயன்படுத்தி சாத்தான்களை ஆட்டிப் படைக்கவும், தாங்கள் நினைத்ததைச் சாதிக்கவும் இந்த முத்திரையை மந்திரவாதிகள் பயன்படுத்துவார்களாம்!

சர்ப்பம் (பாம்பு)
சாத்தானின் முக்கியக் குறியீடாக சர்ப்பம் பயன்படுத்தப்படுகிறது. மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு காரணமான சர்ப்பத்தின் தூண்டுதல் அல்லது தந்திரத்தினால் தான் ஆப்பிளை ஏவாள் புசித்தாள் என்றும், அதனால் கர்த்தரின் சாபத்திற்கு ஆளானாள் என்றும் பைபிள் வசனங்கள் கூறுகின்றன. மேலும் இது நம் முதுகெலும்பின் அடியில் குண்டலினி என்னும் ஒரு ஆற்றலையும் குறிக்கிறது.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications