For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  முடியாட்டி தயவு செய்து Unfollow பண்ணிடுங்க.. போதுமட சாமிப் பட்டது எல்லாம்!

  |

  மாநில அளவுல இருக்கட்டும், தேசிய அளவுல இருக்கட்டும்... மக்களான நமக்கு ஒரு மாற்றம் அவசியமா தேவைப்படுது. நமக்கு பிடிக்காத தலைவர், கட்சி காரர் பத்தி ஏதாவது கேலி பண்ணி போட்டோ, வீடியோ வந்தா முந்துக்கிட்டு வந்து அத பகிர்ந்து நம்மளோட ஆக்ரோஷத்த தீர்த்துக்கிறோம்.

  எல்லாம் சரி... நம்மள்ல எத்தன பேரு சரியா இருக்கோம், நம்மள்ல எத்தன பேரு, நம்மள நாம முதல்ல மாத்திக்கணும்... ஆயிரம் ரூபா எங்க இன்கம்டாக்ஸ்க்கு மாசம், மாசம் பிடிச்சுடுவாங்களோன்னு செலவு பண்ணாத போலி மெடிக்கல் பில், கட்டாத வீட்டு வாடகைன்னு என்னென்னமோ முயற்சி பண்ணி, அந்த ஆயிரம் ரூபாய சேமிச்சு அப்பாடான்னு பெருமூச்சு விட்டுக்குறோம். இது தப்பு இல்லையா?

  Unfriend Me Immediately if You do These 13 Terrible Things

  முதல்ல நாம, நம்மக்குள்ள மற்றும் நம்மள சுத்தி இருக்குறவங்கல களையெடுக்கனும்... அந்த தவறுகள களையெடுக்கனும்... எப்படி மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் கெமிக்கல் இரசாயன உரம் நம்ம மண்ணை மலடாக்கிட்டும்ன்னு தெரிஞ்சா மனசு கொதிக்குதோ.. அதே மாதிரி.. கெட்ட எண்ணங்கள், மற்றும் சமூகத்துல நஞ்சு விதைக்கிற விசயங்கள நம்மகுள்ள இருந்து களையெடுக்கனும்...

  முக்கியமா இந்த 13 விஷயத்த நீங்க மாத்திக்கணும்... மத்தவங்கள மாத்த தூண்டனும்... இல்ல நான் அப்படி இருப்பேன்னு சொல்லி அடம்பிடிச்சா பாரபட்சம் பார்க்காம அவங்கள Unfriend, Unfollow பண்ணும். ஃபேஸ்புக்ல மட்டுமில்ல... ஃபேஸ்க்கு முன்னாடியும், வாழ்க்கையில இருந்தும்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  குப்பை!

  குப்பை!

  ஒரு நாளுக்கு முன்ன அனுஷ்கா ஷர்மா, விராத் கோலி அவங்க கார்ல போயிட்டு இருந்தப்ப ஒரு சம்பவம் நடந்துச்சு. ஆடம்பர கார்ல போயிட்டு இருந்த ஒருத்தர் தன்னோட கார்ல இருந்து அசால்ட்டா குப்பையா ரோட்டுல தூக்கிப் போட்டுட்டு போனாரு.. அவர விரட்டி பிடிச்சு அனுஷ்கா ஷர்மா லெப்ட், ரைட் வாங்கி அட்வைஸ் பண்ணி அனுப்பிச்சாங்க. இத விராத் கோலி வீடியோ எடுத்து பகிர்ந்திருந்தார். இதுக்கு எத்தனை பேரு ஆதரவு தெரிவிச்சாங்களோ அதே அளவுக்கு கேலி, கிண்டல் பண்ணி ட்ரால் பண்ணவங்களும் இருந்தாங்க.

  உங்களால நல்லது, மாற்றத்த கொண்டு வர முடியாட்டியும், கொண்டு வர முயற்சி பண்றவங்கள இப்படி மீம் டெம்பிளேட் மாதிரி பார்காதிங்கன்னு விராத் தன்னோட கருத்த பதிவு பண்ணி இருந்தார். ஒருவேளை நீங்களும் அதே நபர் போல ரோட்டுல தான் குப்பையா போடுவேன்னு அடம்பிடிச்சா...

  #Unfriend #Unfollow

  வேலை செய்ய முடியாதா...

  வேலை செய்ய முடியாதா...

  நம்ம ஊருல தப்பு பண்றவன விட, ஒருத்தனோட தப்பால பாதிக்கப்படுற நபர்கள் தான் ஒதுக்கப்படுறாங்க. உதாரணமா ஆசிட் அட்டாக் மற்றும் கற்பழிப்புக்கு ஆகுற பெண்கள். இவங்க என்ன தப்பு பண்ணாங்க. பெரும்பாலும் இந்த தப்பு பண்ணவனுக்கு கூட வெளிய வேலை கிடைச்சிடும். ஆனா, அதனால பாதிக்கப்பட்ட இந்த பெண்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வேலை கிடைக்காது.

  வேலை கிடைக்காது, கொடுக்க மாட்டாங்கன்னு சொல்றத விட, அவங்க கூட எப்படி வேலை பாக்குறதுன்னு ஒதுங்குற கூட்டம் ஒன்னு இருக்கு. அவங்கனால தான் இவங்களுக்கு நிறைய இடங்கள்ல வேலை கிடைக்கிறது இல்லை. ஒருவேளை நீங்கள் ஆசிட் அட்டாக் மற்றும் கற்பழிப்புக்கு ஆளான பெண்களை பார்த்தா ஒதுங்குற ஆளா இருந்தா...

  #Unfriend #Unfollow

  ஓரினச்சேர்க்கை

  ஓரினச்சேர்க்கை

  இங்க அசிங்க, அசிங்கமா கெட்ட வார்த்தை பேசுறவன், குண்டு வைக்கிறவன், திருடுறவன், சொந்த வீட்டுலையே கட்டுன, பொண்டாட்டி, பெத்த மகளை குடிச்சுட்டு வந்து அடிக்கிறவனுக்கு எல்லாம் சமூகத்துல இடம் இருக்கு. ஆனா, பிறப்பால ட்ரான்ஸ் பாலின பாதிப்பு இருக்குறவங்க, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இடமில்ல. அவங்களும் நம்மள மாதிரியான மனுஷங்க தான். நாம அவங்கள ஒதுக்குறதுனால தான் அவங்க, மேபலத்துக்கு கீழயும், சிக்னல்யும் நிக்க வேண்டிய அவசியம், காட்டாயம் ஏற்படுது.

  எத்தன நாள் நீங்க பசி தாங்குவீங்க? அதிகபட்சம் மூன்று நாள், நாலு நாள், அஞ்சாவது நாள் ஒன்னு குப்பை தொட்டியில இருந்து பொறுக்கி சாப்பிடனும், இல்ல திருடி தான் சாப்பிடனும். இது ரெண்டுக்கும் வழி இல்லன்னா பிச்சை தான எடுக்கணும். ஒருவேளை ட்ரான்ஸ் பாலியன தாக்கம் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை பார்த்தா உங்களுக்கு உடம்பு கூசுதுன்னா...

  #Unfriend #Unfollow

  ரேஸ்!

  ரேஸ்!

  2016ல மட்டுமே நம்ம நாட்டுல 4.5 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்திருக்கு... நூற்றுக்கணக்கான பேர் சாலை விபத்து காரணமா இறந்திருக்காங்க.

  ரோடு சரியில்ல, குடிச்சுட்டு வண்டி ஒட்டுனான்னு பதிவான குற்ற வழக்குகள விட, ஆக்ரோஷமா, வேகமா, சாலை விதிகள பின்பற்றாம வண்டி ஓட்டி விபத்து உண்டாக்கி, அப்பாவி உசுரு போக காரணமா இருந்த வழக்குகள் தான் அதிகம்.

  அப்படி என்ன நாம சாத்திச்சிட போறோம்... வண்டிய அவ்வளவோ வேகமா ஒட்டிதான் வாழ்க்கையில சந்தோசமா இருக்கனுமா? நான் அப்படி தாங்க.. எனக்கு வண்டி வேகமா ஓட்ட தான் பிடிக்கும்ன்னு சொல்ற ஆளா நீங்க இருந்தா...

  #Unfriend #Unfollow

  ஈவ்-டீஸிங்

  ஈவ்-டீஸிங்

  சிலர் எல்லாம் ஈவ் டீஸிங்கிறது பொண்ண கைய பிடிச்சு இழுக்கிறது இடுப்ப பிடிச்சு கிள்ளுறதுன்னு நெனச்சுட்டு இருக்காங்க.. பஸ்ல, பைக்ல போகும் போது அவங்கள கண்ணெடுக்காம பார்க்குறது... அவங்க பார்க்குற மாதிரி கூப்பிட்டு தொந்தரவு பண்றது... அவங்க அந்தரங்க பாகங்கள பார்த்து கமெண்ட் பண்றது எல்லாமே ஈவ் டீஸிங் தான்.

  சென்னை, பெங்களுரு, டெல்லி மாதிரியான பெரும் நகரங்கல ஒரு நைட்டு மட்டுமே ஆயிரக்கணக்கான பெண்கள் ஈவ் டீஸிங்க்கு ஆளாகுறாங்க. நம்ம கூட பொறந்த ஒருத்திக்கு இந்த நிலைமை வந்தா தான் நிறுத்துவோம்.. அதுவரைக்கும் என் சந்தோஷம் தான் முக்கியம்.. இதெல்லாம் தப்பான்னு நினைக்கிறவங்க...

  #Unfriend #Unfollow

  மதம்.

  மதம்.

  இன்னிக்கி இந்தியாவுல பல அமைப்புகள் மற்றும் சில பெரும் தலைவர்களால ஊக்குவிக்கப்படுற., கையில ஆயுதமா எடுக்கப்பட்டு கையாளப்படுற கருவி மதம், ஜாதி. என்னது தான் பெருசு, உன்னது சிறுசு.. என்னத்துக்கு மவுசு அதிகம்ன்னு வீண் வேலைய செஞ்சுட்டு இருக்காங்க.

  ஒரு பிரபலத்த மதப்பெயர் சொல்லி கூப்பிடறது. தங்களோட கருத்துக்கு எதிரா பேசுனா, நடந்துக்கிட்டா.. தவறுன்னு சொல்லி காண்பிச்சா.. அவன் இந்த மதத்தான், சாதிக் காரன் அதான் அப்படி பேசுறான்னு கேவலமா நடந்துக்குறது எல்லாம் எந்த மாதிரியான ஈனத்தனம்.

  எளிமையா சொல்லனும்னா மதம், ஜாதிங்கிறது அந்தரங்க உறுப்பு மாதிரி. எல்லாருக்கும் ஒன்னு இருக்கு. என்னது பெருசு, என்னது கலரா இருக்குன்னு எடுத்து வெளிய காமிச்சுக்கிட்டு சுத்துனா... அசிங்கம் காண்பிக்கிறவனுக்கு தானே தவிர, பாக்குறவனுக்கு இல்ல.

  எனக்கு என் மதம், என் சாதி தான் முக்கியம்ன்னு நினைக்கிறவங்க...

  #Unfriend #Unfollow

  வளர்ச்சி!

  வளர்ச்சி!

  இருக்குறதுலேயே மகா கேவலமான செயல் என்ன தெரியுமா? என் நாடு விளங்காது, என் நாடு வளராது, என் நாடு கேவலம்ன்னு சொல்ற விஷயம் தான். இப்படி பேசுற யாராச்சும் என் அப்பன் விளங்க மாட்டான், என் அப்பன் சரிப்பட மாட்டான், என் கலாச்சாரம் நல்லது இல்ல, என் வீடு குப்பைன்னு ஊரு முழுக்க தம்பட்டம் அடிச்சு சொல்வாங்களா?

  கேட்டா நான் ஒரு சோஷியல் பர்சன் மனசுல பட்டத பேசுறேன்னு சொல்றது.. நாடு முன்னேற எவனாச்சும் பாடுபட்டு வேலை பண்ணா.. இவன் எதுக்கு வேலை வெட்டி இல்லாம பண்றான்.. இவன் பண்ணிட்டா மட்டும் நாடு வளர்ந்திடுமான்னு கேட்பாங்க.. ஆகாதுங்க... அந்த ஒருத்தர் மட்டும் பாடுபட்டா நாடு வளராது மாற்றம் காணாது... இப்படி குறை பேசுற எல்லாரும் சேர்ந்து பாடுபட்டா தான் நாம மாறவும், வளரவும் முடியும்.

  நான் பாடுபட மாட்டேன், குத்தம் குறை தான் பேசுவேன்னு சொல்றவங்க...

  #Unfriend #Unfollow

  கலவரம்...

  கலவரம்...

  ஒரு பக்கம் அரசியல்வாதிங்க.. ஒரு பக்கம் மக்கள்.. இவங்களுக்கு நடுவுல ஒரு கூட்டம் இருக்கு... அவங்க தான் ஊரு அமைதியா இருக்குறத கெடுக்க முயற்சி பண்றவங்க... அதாவது போலியான தகவல், படங்கள், வீடியோக்கள் பரப்பி சும்மா இருக்க மக்கள் மத்தியில பீதியை கிளப்புறது தான் இவங்க வேலை. வயது கழுதைக்கு மேல இருக்கும்.. ஆனா, உண்மையா, போலியான்னு ஆராய தெரியாது... உடனே வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்ன்னு பரப்பி வைரல் ஆக்கிடனும்.. லைக்ஸ் வாங்கிடனும்...

  எவன திட்டுனா இன்னிக்கு லைக்ஸ் வாங்கலாம்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு சுத்துறாங்க... இவங்க தான் நம் நாட்டுல பரவி கிடைக்குற விஷ பூச்சிகள்...

  இந்த விஷத்துல ஒரு துளியா இருந்தாலும் கூட.. தயவு செஞ்சு...

  #Unfriend #Unfollow

  அரசு வேலை

  அரசு வேலை

  அரசியலா இருக்கட்டும், அரசாங்க வேலையா இருக்கட்டும்... அத ஏன் நாம சர்வீஸ்ன்னு சொல்றோம்...? மத்த வேலைய ஏன் ஜாப்ஸ்ன்னு சொல்றோம்..?

  காசுக்காக மட்டும் பண்றதுக்கு பேரு சர்வீஸ் கிடையாது. ஆனா, இங்க அரசியல், அரசு வேலை தான் பெரிய ஜாப்ஸா பார்க்கப்படுது. நோகாம இருக்கலாம், நிறையா சம்பாதிக்கலாம், கறுப்பு பணம் அதிகரிக்கலாம், சுகபோக வாழ்க்கை வாழலாம்ன்னு நினைக்கிறவங்க தான் இந்த இடங்கள்ல நிறைஞ்சு இருக்காங்க.

  இத எல்லாம் ஆதரிக்கிற, இல்ல இந்த கூட்டத்துல ஒருத்தரா நீங்க இருந்தா...

  #Unfriend #Unfollow

  பாலியல் துன்புறுத்தல்...

  பாலியல் துன்புறுத்தல்...

  அட அந்த பொண்ணு ட்ரெஸ் சரி இல்லைங்க... ஏங்க அப்படி துணி போட்டுக்கிட்டு வந்தா அவன் அப்படி தான் பண்ணுவான்.. அந்த பொண்ணு எல்லா பசங்க கிட்டயும் பேசுதுங்க.. கேரக்டர் சரியில்ல... அவ நடந்து வர அழக பார்த்தாலே யாரையோ மயக்க தான் வரான்னு தெரியிலன்னு... வாய் கூசாம ஒரு பொண்ண பத்தி, அவங்க கேரக்டர் பத்தி எப்படி வேணாலும் பேசுவேன்னு சொல்ற ஆளா இருந்தா... ப்ளீஸ்

  #Unfriend #Unfollow

  சுவாரஸ்யம்!

  சுவாரஸ்யம்!

  சுவாரஸ்யம்ன்னா என்ன லைசன்ஸ் இல்லாம வண்டி ஓட்டுறது, ஹெல்மட் போடாம போறது ட்ரிபிள்ஸ் போறது... ட்ராபிக் சிக்னல் போட்டிருந்தும் வீரிட்டு விர்ர்ர்ன்னு வண்டிய முறுக்கிட்டு போறது.. ரூல்ஸ் பிரேக் பண்றது தான் சுவாரஸ்யம்ன்னு நெனச்சீங்கன்னா தப்பு... ஒருத்தர் பண்ணா சாதனைய பீட் பண்ணுங்க.. நீங்களா புதுசா ஒரு சாதனை பண்ணுங்க... அப்பா, அம்மா போக... குடியிருக்க தெருவுல நாலு பேரு பெருமையா பேசுற மாதிரி வாழ்ந்து காட்டுங்க அதுக்கு பேரு தான் சுவாரஸ்யமான வாழ்க்கை.

  இல்ல நான் ரூல்ஸ் தான் ப்ரேக் பண்ணுவேன்னு சொன்னா

  #Unfriend #Unfollow

  லஞ்சம்!

  லஞ்சம்!

  குவாட்டர், பிரியாணி தரவன், இருபது ரூபா நோட்ட கொடுத்து ஒட்டு போட்டா இருபது ஆயிரம் தரேன்னு சொல்றவன்... இலவச பொருள் கொடுத்து ஒட்டு வாங்கிட்டு நாட்ட நாசம் பண்றவன்... அக்கவுண்டுல இலட்சக் கணக்கா பணம் போடுறேன்னு சொல்லிட்டு பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை எத்துறவன் தான் என் தலைவன்.. அவன நம்பி தான் நான் இருக்கேன்.. அவங்க என்ன தப்பு பண்ணாலும் நான் எத்துப்பென்னு சொல்ற ஆளா நீங்க இருந்தா.. இன்ஸ்டண்டா

  #Unfriend #Unfollow பண்ணிடுங்க..

  இந்த தப்பெல்லாம் பண்றவங்கல உங்க வட்டத்துல இருந்து ஒதுக்குங்க. ஒரு கட்டத்துல காக்கா கூட்டம் போல அவங்களே தானா கத்திக்கிட்டு சுத்தும் போதுதான்., அவங்க பண்ணது தப்புன்னு அவங்களுக்கு புரியும்.

  மாற்றம்ங்கிறது அரசியல் தலைவர்கள் கிட்ட இருந்து மட்டும் எதிர்பாக்குற நாம... முதல்ல நமக்குள்ள என்னென்ன மாற்றம் கொண்டு வரணும்ன்னு தெரிஞ்சுக்கனும்...!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  'Unfriend' Me Immediately if You do These 13 Terrible Things

  'Unfriend' Me Immediately if You do These 13 Terrible Things. So I request, if you do any of these, either up your standard or consider using the 'unfriend' button.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more