For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாதிரி ஒரு # Black Dot எதாச்சும் பொண்ணு கையில இருந்தா உடனே போலீஸுக்கு கால் பண்ணுங்க...

பிளாக் டாட் விழிப்புணர்வு பிரச்சாரம். வீட்டில் பெண்கள் துன்புறுத்தலுக்கு, கொடுமைகளுக்கு ஆளாவதை சமூகத்திற்கு தெரியப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு இரகசிய குறியீடு பிரச்சாரம்.

By Staff
|

கணவனால், அவனது குடும்பத்தால் வீட்டில் பெண்கள் துன்பம் மற்றும் கொடுமைகளுக்கு ஆளாவது டொமெஸ்டிக் வயலன்ஸ் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே ஏறத்தாழ 2.75 கோடி பெண்கள் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளி விபரம் மூலம் அறிய முடிகிறது. 15 - 49 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் இத்தகைய கொடுமைகளில் அதிகம் சிக்கித் தவிக்கிறார்கள்.

2012 தேசிய குற்றவியல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை மூலம், இந்தியாவில் பெண்கள் பாதிப்பிற்குள்ளாகும் பிரச்சனைகளில் கற்பழிப்பிற்கு பிறகு இரண்டாவது இடத்தில் இருப்பது இந்த டொமெஸ்டிக் வயலன்ஸ் தான் எனப்படுகிறது. இத்தகைய கொடுமைகள் இந்தியாவை காட்டிலும் அதிகமாக மேற்கத்திய நாடுகளில் நடப்பதாக கூறப்படுகிறது.

வெளியே சொல்ல முடியாத அளவிற்கு வீட்டில் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் சமூகத்துடன் தொடர்பு கொண்டு எப்படியாவது அதை வெளிக் கொண்டுவர வேண்டும் என்ற போது வெளிப்பட்ட ஐடியா தான் இந்த Black Dot விழிப்புணர்வு பிரச்சாரம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள்ளங்கை!

உள்ளங்கை!

வீட்டில் ஆண்களால் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் தங்கள் உள்ளங்கை நடுவில் மச்சம் போல பெரிய அளவில் ஒரு கரும் புள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும் போது, அவர்களால் வெளிப்படையாக கூற முடியாத சூழல் இருந்தாலும் கூட இந்த கருப்பு புள்ளி உள்ளங்கையில் இருப்பதை மற்றவர்கள் காணும் படி செய்தால்... மக்கள் அந்த பெண் டொமெஸ்டிக் வயலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டு, அவர் விபரங்கள் அறிந்து போலீஸில் கூறி உதவலாம் என விழிப்புணர்வு பிரச்சாரம் சமூக தளங்களில் காட்டுத்தீ போல பரவியது.

காட்டுத்தீ!

காட்டுத்தீ!

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை யார் துவங்கினார் என்ற தகவல் தெளிவாக இல்லை. யாரோ ஒருவர் துவக்கி வைத்த இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முகநூலில் காட்டுத்தீ போல கடந்த 2015ம் ஆண்டு பரவியது.

இந்த பிரச்சாரத்திற்கு பல பெண்கள் ஆதரவு அளித்தனர். தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் உள்ளங்கையில் ஒரு கருப்பு புள்ளி வரைந்து அதனுடன் ஒரு செல்ஃபி படம் எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் பகிர்ந்தனர்.

ஊடகங்கள்!

ஊடகங்கள்!

ஃபேஸ்புக்கில் காட்டுத்தீ போல பரவிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊடகங்களும் ஒளிப்பரப்ப தவறவில்லை. ஒருபக்கம் பலர் வரவேற்றாலும், சிலர் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வேண்டாதது என்ற கருத்தும் பகிர்ந்தனர்.

இதன் மூலம் அவசியம் இன்றி ஒரு பெண்ணின் முகம் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இது அவளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று கூறினார்கள். இதனால், அவள் மேலும் அபாயமான கொடுமைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்றும் கூறினார்கள்.

ஊக்கத்திற்கு உகந்தது அல்ல...

ஊக்கத்திற்கு உகந்தது அல்ல...

பிரிட்டிஷில் வாழ்ந்து ஒரு பெண் தான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஃபேஸ்புக்கில் துவக்கி வைத்துள்ளார். ஆனால், அவர் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது தனது விபரங்களை பகிர வேண்டாம் என்றுக் கேட்டுக் கொண்டார்.

மேலும், டொமெஸ்டிக் வயலன்ஸ் காரணத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கூறியதாவது.., நான் பாதிக்கப்பட்ட அந்த பெண் உதவி நாட தான் ஒரு கருப்பு புள்ளியை உள்ளங்கையில் வரைந்து குறியாக காண்பியுங்கள் என்று கூறினேனே தவிர, இதை பெருமையாக கொண்டு புகைப்படங்கள் பகிர கூறவில்லை என்று கூறியிருந்தார்.

முரண்!

முரண்!

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை உண்டாக்கிய பெண், இந்த குறி தான் பாதிக்கப்பட்டிருப்பதை நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அறிந்துக் கொள்ள உதவியாக இருக்கும். இதனால் இரகசியமாக உதவி கோரலாம் என்றே அறிமுகம் செய்தேன்.

கருப்பு புள்ளியானது எளிதாக உருவாக்கி, எளிதாக அழித்து விடலாம் என்பதற்காகவே தேர்வு செய்தேன். ஒரு பெண் என்பதால்... மஸ்காரா எடுத்துக் கொண்டு பாத்ரூம் என்று ஒரு புள்ளி வரைந்து அதை வெளியே இருப்பவரிடம் காண்பித்து மீண்டும் அழித்துக் கொண்டு வீட்டினுள் வந்துவிட இயலும். அதனால் அந்த பெண்ணுக்கு உரிய உதவி கிடைக்கப் பெறலாம் என்று கூறியுள்ளார்.

வேண்டாம்..

வேண்டாம்..

ஏற்கனவே அந்த வகையில் பாதிக்கப்பட்ட பெண் என்பதால் தான் நான் இப்படி ஒரு ஐடியாவை அறிமுகம் செய்தேன். ஒருவேளை... இந்த யோசனை தவறாக முடியும், சரிவராது என்றால் தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். நீங்கள் பாதிக்கப்பட்ட பெண் என்பதால் முட்டாள்தனமாக எதையும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும். அந்த பெண்மணி கூறியிருந்தார்.

செய்திகள்!

செய்திகள்!

டொமெஸ்டிக் வயலன்ஸ் குறித்து இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு அந்த பெண்ணுக்கு நிறைய வாழ்த்து செய்துகள் குவிந்துள்ளன. சிலர் கருப்பு புள்ளிக்கு பதிலாக , இந்த விழிப்புணர்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் Say No To Domestic Violence என்ற வாசகம் எழுதியும் சமூக தளங்களில் தங்கள் படங்களை பகிர்ந்து வந்தனர்.

இதனால், கருப்பு புள்ளி வைத்த நபர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், வாசகம் எழுதியோர் ஆதரவு அளிப்போர் என்றும் பிரித்துக் கொள்ளலாம் என்றும் சில காலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்தது.

கட்டுப்பாடு இன்மை!

கட்டுப்பாடு இன்மை!

இன்றைய சமூகத்தில் கட்டுப்பாடு என்பது யாருக்கும் இல்லை. உண்மையா, பொய்யா என்று அறியாமல் பகிர்ந்துவிட வேண்டும். ஏனெனில் எளிதாக டெலிட் செய்துவிடலாம் பாருங்கள். இதனால் சில வேளையில் நல்லவையும் பாதிக்கப்படுகின்றன. அப்படி பாதிப்பிற்குள்ளான ஒரு நல்ல விஷயம் தான் இந்த Black Dot.

சமூக தள பயனாளர்கள் சிலரின் அவசர புத்தியால் ஒருக்கட்டதில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அபாயத்திற்கு ஆளாக்குமோ என்ற அச்சம் ஏற்படுத்த செய்தது.

ஒருவருடம் கழித்து...

ஒருவருடம் கழித்து...

2015 செப்டம்பரில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஒரு வருடம் கழித்து மீண்டும் 2016 நவம்பர் மாதம் தொடங்கியது. அப்போதும் பல பெண்கள் தங்கள் கைகளில் கருப்பு புள்ளி வரைந்து படங்களை பகிர்ந்தனர். ஆனால், இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் அதிகமாக மேற்கத்திய நாடுகளில் தான் பரவின.

இப்போதும் மீண்டும் இப்போது (2018ல்) சில இணையத் தளங்களில் இந்த Black Dot பிரச்சாரம் பற்றி, மெல்ல, மெல்ல பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. பாதுகாக்கப்பட வேண்டியவர்களே தங்களை சீரழித்து கொடுமைப் படுத்தும் அபாயத்தில் சிக்கி இருக்கும் பெண்களுக்கு இப்படியான இரகசிய குறியீடுகள் தேவை தான். ஆனால், அவை அவர்களுக்கு அபாயமாக அமைந்துவிடக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Symbol of Domestic Violence. If you Notice this from Any Victim. Please Call Police Immediately

Secret Symbol of Domestic Violence. If you Notice this Black Dot from Any Victim. Please Call Police Immediately.
Desktop Bottom Promotion