முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் முக்கியமான நாளாக இருப்பதில்லை.. ஏதோ ஒரு சில நாட்களை தான் முக்கியமான நாட்களாக நாம் கருதுகிறோம்.. அந்த வகையில் ஒவ்வொருவருடைய பிறந்த நாளும் அவரவருக்கு மிகவும் முக்கியமான நாளாக உள்ளது..!

நாம் பிறந்த நாள் என்பது நமது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதாக உள்ளது.. பிறந்த நாள் மற்றும் நேரத்தை வைத்து தான் அவரது தற்போதைய வாழ்க்கையை கணிக்க ஜாதகம் கணிக்கப்படுகிறது.. ஆனால் இந்த பிறந்த நாளை வைத்து நீங்கள் உங்களது முந்தைய ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் என்பதையும் கூட கணிக்க முடியும் என்பது பற்றி தெரியுமா?

Past Life Based on Your Birth date

ஆம், ஒவ்வொரு நாளும் இந்த உலகில் பல பிறப்புகளும், இறப்புகளும் நடந்தவாறு தான் உள்ளது. அந்த வகையில் நமது பிறந்த நாளை வைத்து நமது கடந்த கால வாழ்க்கையில் நான் என்னவாக இருந்தோம் என்பதை கண்டறிய முடியுமாம்..! அதன் அடிப்படையில் உங்களது பிறந்த நாளை அடிப்படையாக கொண்டு நீங்கள் உங்களது கடந்த காலத்தில் என்னவாக பிறந்துள்ளீர்கள் என்பதை பற்றி இந்த பகுதியில் அறிந்து கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
14 - 28 ஜூலை | 23 - 27 செப்டம்பர் | 3 - 17 அக்டோபர்

14 - 28 ஜூலை | 23 - 27 செப்டம்பர் | 3 - 17 அக்டோபர்

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் தன்மை உள்ளது.. இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பார்கள்.. இவர்களுக்கு தலைமை குணம் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் பலருக்கு குருவாக இருப்பீர்கள்.. உங்களது வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பலர் விரும்புவார்கள்.

முன் ஜென்ம வாழ்க்கை

முன் ஜென்ம வாழ்க்கை

நீங்கள் தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் உதவி செய்ய காத்திருப்பீர்கள். நீங்கள் உங்களது கடந்த கால வாழ்கையில் நிச்சயமாக மற்றவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த 'குரு' ஆக இருந்திருப்பீர்கள்.. உங்களது மிகப்பெரிய மனதால் மற்றவர்களுக்கு பல உதவிகளை செய்திருப்பீர்கள்..!

22 -31 ஜனவரி | 8 - 22 செப்டம்பர்

22 -31 ஜனவரி | 8 - 22 செப்டம்பர்

நீங்கள் மிகவும் மென்மையான மனம் படைத்த ஒரு நபராக இருப்பீர்கள். நீங்கள் மற்றவர்களது மனதில் உள்ள எண்ண ஓட்டங்களை எளிதாக படிக்க கூடிய திறமைசாலியாக இருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் நீங்கள் பிறந்தது ஒரு இடத்திலும் வாழ்வது ஒரு இடத்திலுமாக இருக்கலாம்.. உங்களது பயணம் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும்..

உலகம் சுற்றுபவர்

உலகம் சுற்றுபவர்

உங்களது கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் ஒரு மிகச் சிறந்த உலகம் சுற்றும் நபராக இருந்து இருக்கிறீர்கள்.. பயணம் செய்வது தான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்...!

முன் ஜென்ம வாழ்க்கை

முன் ஜென்ம வாழ்க்கை

நீங்கள் கடந்த ஜென்மத்தில் மக்கள் தொடர்பு உள்ள துறையில் பணியாற்றுபவராக இருந்துள்ளீர்கள்.. அதாவது பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்களாக இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன...!

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை

உங்களது காதல் வாழ்க்கையானது சிறப்பான முறையில் அமையும். நீங்கள் காதலில் உங்களது துணையை சார்ந்து இருப்பீர்கள். உங்களது வாழ்க்கையானது மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்.. உறவுகளின் எண்ணங்களை புரிந்து செயல்படும் ஒரு நபராக நீங்கள் இருப்பீர்கள்.

1 - 10 மார்ச் | 27 நவம்பர் - 18 டிசம்பர்

1 - 10 மார்ச் | 27 நவம்பர் - 18 டிசம்பர்

நீங்கள் மற்றவர்கள் சொல்லும் படியாகவோ அல்லது மற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறோ நடக்கும் ஒரு மனிதராக இருக்க மாட்டீர்கள்.. உங்களது மனதிற்கு எது விருப்பமோ அதன் படி செயல்படும் ஒரு நபராக இருப்பீர்கள். நீங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை மிக அதிகமாக விரும்பும் ஒரு நபராக இருப்பீர்கள்.

முன் ஜென்ம வாழ்க்கை

முன் ஜென்ம வாழ்க்கை

காதல் வாழ்க்கை என்பது உங்களுக்கு அதி அற்புதமானதாக அமையும் ஏனெனில் நீங்கள் காதலில் ஒரு நடுநிலை தன்மையுடன் செயல்படும் ஒரு நபராக இருப்பீர்கள். உங்களது கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் கண்டிப்பாக ஒரு மிகச்சிறந்த பேரரசராக இருந்து இருப்பீர்கள்..!

2 - 29 பிப்ரவரி | 20 - 31 ஆகஸ்ட்

2 - 29 பிப்ரவரி | 20 - 31 ஆகஸ்ட்

நீங்கள் உங்களது முன் ஜென்மத்தில் மக்களுக்கு பிடித்த ஒரு மிக சிறந்த அரசனாகவோ அல்லது மற்றவர்களுக்கு கட்டளையிடும் ஒரு நபராகவோ பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் தற்போதைய வாழ்க்கையில் மிகவும் சென்சிடிவ் ஆன ஒரு நபராக இருப்பீர்கள்.

சவாலான விஷயம்!

சவாலான விஷயம்!

மற்றவர்கள் உங்களது விஷயத்தில் தலையிடுவது, உங்களை பற்றிய இரகசியங்களை அறிய முயல்வது போன்றவை உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயமாக இருக்கும். உங்களது மனதில் உள்ள விஷயங்களை வெளிப்படுத்துவது என்பது உங்களுக்கு ஒரு சவாலான விஷயமாக இருக்கும். நீங்கள் தனியாக வாழ்வதற்கு பயம் கொள்ளும் ஒரு நபராக இருப்பீர்கள்.

ஏப்ரல் 20 - 8 மே | 12 - 19 ஆகஸ்ட்

ஏப்ரல் 20 - 8 மே | 12 - 19 ஆகஸ்ட்

உங்களது தற்போதைய வாழ்க்கையில் நீங்கள் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்தக் கூடிய ஒரு நபராக இருப்பீர்கள். சுதந்திரத்திற்காக அதிகம் பாடுபடும் ஒரு நபராக இருப்பீர்கள். உலக நல்லொழுக்கம் தேவை என்பது உங்களது கருத்தாக இருக்கும். அதற்காக நீங்கள் உங்களால் முடிந்தவற்றை செய்வீர்கள்.

முன் ஜென்ம வாழ்க்கை

முன் ஜென்ம வாழ்க்கை

உங்களது காதல் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் சிறந்தவர்களாக இருந்தாலும் கூட உங்களது மனதில் பொறாமை எண்ணம் சிறிதளவாவது இருக்கும். நீங்கள் உங்களது கடந்த காலத்தில் ஒரு ' இரக்கமற்ற வெற்றியாளர்' ஆக இருந்துள்ளீர்கள்..!

9 - 27 மே | 29 ஜீன் - 13 ஜூலை

9 - 27 மே | 29 ஜீன் - 13 ஜூலை

உங்களது நிகழ்கால வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களை அதிகமாக நம்புபவராகவும், மிகச்சிறந்த ஒரு நல்ல மனிதராகவும் இருப்பீர்கள். பிறரிடம் நற்பெயரை பெறும் ஒரு நபராகவும் இருப்பீர்கள். நீங்கள் பேசுவதை கேட்காதவர்களை நீங்கள் வெறுப்பீர்கள்.. அவர்களை உங்களுக்கு பிடிக்காது..!

முன் ஜென்ம வாழ்க்கை

முன் ஜென்ம வாழ்க்கை

நீங்கள் நட்பினை ஒரு புனிதமான விஷயமாக நினைப்பீர்கள்.. நீங்கள் ஒரு நல்ல நண்பனாகவும் இருப்பீர்கள். நீங்கள் காதலில் உண்மையை எதிர்பார்க்கும் ஒரு நபராகவும், புதுமையை எதிர்பார்க்கும் ஒரு நபராகவும் இருப்பீர்கள். ரொமேண்ஸ் காதலில் நிறைந்திருக்க வேண்டும் என்பதும் உங்களது ஆசையாக இருக்கும். நீங்கள் கடந்த ஜென்மத்தில் ஒரு 'ஞானமுள்ள நபர்' ஆக இருந்திருப்பீர்கள்.

11 - 31 மார்ச் | 18 - 29 அக்டோபர் | 19 - 31 டிசம்பர்

11 - 31 மார்ச் | 18 - 29 அக்டோபர் | 19 - 31 டிசம்பர்

நீங்கள் கடந்த காலத்தில் ஒரு 'சிறந்த ஆணையாளர்' ஆக இருந்திருக்கிறீர்கள். அதாவது நீங்கள் ஒரு சிறந்த தீர்பு வழங்கும் ஒரு நபராக இருப்பீர்கள். நீங்கள் தற்போதைய வாழ்க்கையிலும் கூட ஒரு சிறந்த பேச்சாளராகவும், நியாயவாதியாகவும் இருப்பீர்கள். மனசாட்சி இல்லாத செயல்களை செய்யும் மக்களை நீங்கள் சற்றும் பொருத்துக் கொள்ள மாட்டீர்கள்.

சிறந்த நபர்

சிறந்த நபர்

நீங்கள் உங்களது வாழ்க்கையில் அனைத்து நபர்களிடமும் மிகவும் வலிமையான உறவில் இருப்பீர்கள். காதலில் உங்களுக்கு ஒரு வித பொறாமை எண்ணம் இருக்கும். மேலும் உங்களது சந்தேகங்களை அவ்வப்போது பேசி தீர்த்து கொள்ளும் ஒரு நபராக இருப்பீர்கள்.

28 மே - 18 ஜூன் | 28 செப்டம்பர் - 2 அக்டோபர்

28 மே - 18 ஜூன் | 28 செப்டம்பர் - 2 அக்டோபர்

நீங்கள் ஒரு மென்மையான இதயம் கொண்ட சாகசங்கள் செய்ய கூடிய நபராக உங்களது கடந்த ஜென்மத்தில் இருந்து இருக்கிறீர்கள். இந்த ஜென்மத்தில் நீங்கள் மிகவும் சுதந்திமான ஒரு நபராகவும், பலதரப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு கொண்ட ஒரு நபராகவும் இருப்பீர்கள்.

புதுமைகள் படைப்பவர்

புதுமைகள் படைப்பவர்

நீங்கள் புதுப்புது இடங்களை தேடுவதில் ஆர்வம் மிக்க நபராக இருப்பீர்கள். மேலும் அந்த இடங்களில் குடியேற வேண்டும் எண்ணம் மிக்கவர்களாகவும் இருப்பீர்கள். காதலில் மிகச்சிறந்த ஒரு துணையை தேடும் ஒரு நபராக நீங்கள் இருப்பீர்கள்.

1 - 19 ஏப்ரல் | 8 - 17 நவம்பர்

1 - 19 ஏப்ரல் | 8 - 17 நவம்பர்

இந்த ஜென்ம வாழ்க்கையில் நீங்கள் ஒரு உன்னதமான மற்றும் ஆளுமை திறன் மிக்க நபராக இருப்பீர்கள்.. உங்களது மூளையானது பல்வேறு சிக்கல்கள் மிக்க ஒரு மூளையாக இருக்கும். நீங்கள் ஒரு மனிதரை மிக வேகமாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒருவராக இருப்பீர்கள். மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை எளிதாக புரிந்து கொண்டு அதன் படி செயல்படும் ஒரு நபராகவும் இருப்பீர்கள்.

முன் ஜென்ம வாழ்க்கை

முன் ஜென்ம வாழ்க்கை

காதலில் நீங்கள் உங்களது துணைக்காக எல்லாவற்றையும் கொடுக்கும் ஒரு நபராக இருப்பீர்கள். அதே சமயம் உங்களை போலவே உங்களது துணையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். நீங்கள் கொடுத்தது எல்லாம் உங்களுக்கும் திரும்ப கிடைக்க வேண்டும் என்று நினைப்பவராக இருப்பீர்கள். உங்களது முன் ஜென்மத்தில் நீங்கள் கண்டிப்பாக ஒரு சிறந்த கிளர்ச்சியாளராக இருந்திருப்பீர்கள்.

1 - 7 ஜனவரி | 19 - 28 ஜூன் | 1 - 7 செப்டம்பர் | 18 - 26 நவம்பர்

1 - 7 ஜனவரி | 19 - 28 ஜூன் | 1 - 7 செப்டம்பர் | 18 - 26 நவம்பர்

உங்களது இந்த நிகழ்கால வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களுக்கு கடமை உணர்வுடன் செயல்படும் ஒரு நபராக இருப்பீர்கள். கடந்த கால வாழ்க்கையில் இருந்த பல நல்ல குணங்கள் உங்களுக்கு இப்போது இருக்கும் இந்த தற்போதைய வாழ்க்கையிலும் உள்ளது.

அறிவாளிகள்!

அறிவாளிகள்!

நீங்கள் மிகச்சிறந்த அறிவாளிகளாக இருக்கிறீர்கள். உங்களது ஆழ்மனதில் உள்ள எண்ண ஓட்டங்கள் நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டியது என்பது அவசியமாகும். உங்களது கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் கண்டிப்பாக ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானியாகவோ அல்லது அறிவு சார்ந்து செயல்படும் மிகப் பெரிய துறையிலோ இருந்து இருப்பீர்கள்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: life
English summary

Past Life Based on Your Birth date

Past Life Based on Your Birth date
Story first published: Thursday, January 25, 2018, 14:36 [IST]
Subscribe Newsletter