For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோ பிரா, நோ பிராப்ளம் - இதென்னைய்யா புதுசா கிளம்புறாங்க!

By Staff
|

எப்படி ஆண்கள் காண்டம் பற்றி சத்தமிட்டு பேச முடியாதோ, பெண்கள் நாப்கின் குறித்து சத்தமிட்டு பேச முடியாதோ. அதே போல, ஆண், பெண் இருவரும் நம் ஊர்களில் சத்தமிட்டு பேச முடியாத ஒரு சொல் தான் பிரா. பிரா என்பது ஒரு வகை உள்ளாடை அவ்வளவு தான். ஆனாலும், அது அந்தரங்க உறுப்பை மறைத்து இருப்பதால், ஏதோ கெட்ட வார்த்தை போல காணப்படுகிறது.

நம் ஊரில் இப்படி என்றால், சர்வதேச அளவில் ஏற்கனவே பிரா பெண்களுக்கு ஆரோக்கியமானதா? ஆரோகியமற்றதா? என ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஒரு பெரும் விவாதம் மற்றும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

இதன் நடுவே, சூசன் ஒபெர்பெக் என்ற பெண்மணி கடந்த 15 ஆண்டுகளாக பிரா அணியாமல் வாழ்ந்து வருகிறார். இதில் என்ன ஆச்சரியம், கிராமப் புறங்களில் பல மூதாட்டிகள் இன்னும் இப்படி தானே வாழ்ந்து வருகிறார்கள் என்று நீங்கள் கருதலாம்.

ஆனால், இந்த பெண் வெறும் கீழ் உள்ளாடை அணிந்து மட்டுமே 15 வருடமாக வாழ்ந்து வருகிறார், தான் இசை நிகழ்ச்சிக்கு செல்லும் இடம் எல்லாம் இப்படியே உலாவி வருகிறார் என்பது தான் ஆச்சரியமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூசன் ஒபெர்பெக்!

சூசன் ஒபெர்பெக்!

இந்த பெண்மணியின் பெயர் சூசன் ஒபெர்பெக். இவர் கடந்த 15 ஆண்டுகளாக லைக்ரா ஷார்ட்ஸ் எனும் ஆடை மற்றும் இதழுக்கு மேல் ஒட்டு மீசை மட்டுமே தனது உடலில் உடுத்தி வருகிறார். அதைத்தவிர இவரது உடலில் வேறு எந்த உடல் பாகத்தையும் மறைக்க இவர் விரும்புவதில்லை. ஏறத்தாழ முக்கால் நிர்வாணமாக வாழ்ந்து வருகிறார்.

2003ல் இருந்து...

2003ல் இருந்து...

சூசன் ஒபெர்பெக் கடந்த 2003ல் இருந்து இப்படியான நிலையில் தான் உலாவி வருகிறார். இவரை புதியதாக பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் விசித்திரமாக தான் இருக்கும். ஆனால், இவரது சுற்றம் மற்றும் நண்பர்களுக்கு இது பழகிவிட்டது.

ஆண் போன்ற பெண்...

ஆண் போன்ற பெண்...

நான் பல வகையிலான சூழலை கடந்து வாழ்ந்து வருகிறேன். ஆனால், எதிலுமே என்னால் ஒட்டியிருக்க முடியவில்லை. ஒரு Aandrogynous-ஆக இருப்பதால் (ஆண் போன்ற பெண்) என்னால் என்னை நோக்கி வரும் எந்த ஒரு விசையும் எதிர்த்து செயல்பட முடிகிறது என்று கூறியிருக்கிறார்.

இப்படியான ஒரு மாற்றத்தில் தான் சூசன் ஒபெர்பெக் தனது மேலாடையை கழற்றி எறிந்தார்.

தலைப்பு செய்தி!

தலைப்பு செய்தி!

சூசன் ஒபெர்பெக்கின் இந்த நோ பிரா, நோ பிராப்ளம் புரட்சி துவக்கிய போது தி சண் சர்வதேச இணையத்தில் இவர் குறித்து தலைப்பு செய்தி வெளியானது. மேலும், தனது இந்த செயல் குறித்து இவர் கூறிய விளக்கமும் பலதரப்பட்ட மக்களை ஈர்த்தது.

கருத்து!

கருத்து!

வித்தியாசமாக ஒன்றை செய்கிறோம் என்று விசித்திரமான தென்படவோ, தோற்றம் அழிக்கவோ கூடாது. நீங்கள் செய்யும் செயலுக்கான சரியான காரணம் இருக்க வேண்டும். என்று கூறியிருந்தார். ஆண் போன்று வாழும் பெண் என்ற இவளது வாழ்க்கை முறைக்கும், இவரது செயலுக்கும் இது பொருந்தலாம். ஆனால், இதை அனைவராலும் பின்பற்ற முடியாது. அப்படியாக பின்பற்றினால், நிச்சயம் சூசன் ஒபெர்பெக்கின் கூறுவது போல விசித்திரமாக தான் தென்படுவார்கள்.

கலைஞர்!

கலைஞர்!

சூசன் ஒபெர்பெக்கின் ஒரு இசை கலைஞர் இவர் தான் தோன்றும் மேடைகளில் இப்படியான தோற்றத்தில் தான் தோன்றுகிறார். இப்படியே தான் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கிறார். இவரைத் தொடர்ந்து சில பெண்கள் இந்த நோ பிரா நோ பிராப்ளம் என்ற இனைய புரட்சியை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ரோஷமான...

ஆக்ரோஷமான...

சூசன் ஒபெர்பெக்கின், "தான் மேலாடை இன்றி இயல்பாக இருக்கும் ஆண்களிடம் ஒரு ஆக்ஸ்ரோஷம், வேகம் கண்டுள்ளேன். அதை நானும் விரும்பினேன். அவ்வாறாக நானும் இருக்க வேண்டும் என்று கருதினேன். அதனாலேயே பிரா அணிவதை தவிர்க்கிறேன் என்கிறார்.

சக்திவாய்ந்ததாக மாறுகிறது!

சக்திவாய்ந்ததாக மாறுகிறது!

இது போன்ற எண்ணம் கொண்ட பெண்கள் பலர் இருக்கிறார்கள். இப்படியான ஒரு சவால் விடுத்தால் அதில் முன்னின்று கலந்துக் கொள்ள ஆர்வம் காட்டும் பெண்களை மேற்கத்திய நாடுகளில் நாம் அதிகம் காணலாம். ஆனால், இதையே ஒரு கலைஞர் செய்தால் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது.

சூசன் ஒபெர்பெக்கின் தனது பாடல்களின் எழுத்துக்களில் பாலின சமநிலை மற்றும் ஒற்றுமை குறித்து காதலுடன் பல குறிப்புக்கள் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன்!

ஆன்லைன்!

சென்ற வருடம் ஜூவிக் என்ற இளம் பட்டதாரி பெண்மணி, இது போல நோ பிரா, நோ பிராப்ளம் என்பது போன்ற, பிரா அணிவதை தவிர்ப்பது குறித்து ஒரு பதிவிட்டு ஃபேசபுக்கில் மிகவும் வைரலானார். அவர் பற்றியும், அவரது செயல் குறித்தும் பல சர்வதேச ஊடகங்களில் செய்திகள் பதிவிடப்பட்டிருந்தன.

நோ பிரா, நோ பிராப்ளம்!

நோ பிரா, நோ பிராப்ளம்!

இது போக இந்த நோ பிரா, நோ பிராப்ளம் போல, ப்ரீ தி நிப்பிள், ப்ரீ தி பிரா என சில ஆன்லைன் சவால்கள் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை ஆகும். இதுப் போன்ற சவால்களில் பல பெண்கள் மிக ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டு தங்கள் அந்தரங்க பாகங்கள் வெளிப்படுவது போன்ற அரைநிர்வாண படங்களை வெளியிட்டு அந்த சவால்களை வைரல் ஆக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உதிரித் தகவல்!

உதிரித் தகவல்!

பெண்கள் இதுப் போன்ற நோ பிரா புரட்சிகள் செய்வது சில பேருக்கு அசௌகரியம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம். இதுங்கெல்லாம் எங்க இருப்பட போகுதுன்னு திட்டவும் செய்யலாம்.

ஆனால், மருத்துவ அறிவியல் ரீதியாகவே பெண்கள் பிரா அணிவதால் உடல் ரீதியாகவும், ஆரோக்கியம் ரீதியாகவும் சில அசௌகரியங்கள், சிரமங்கள் எதிர்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

All Image Source: instagram/therealnobra

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

No Bra, No Problem - An Internet Movement by Women!

No Bra, No Problem - An Internet Movement by Women!