வைரமுத்து பேசியது தவறு என்றால் இது மட்டும் சரியா?

Posted By: Staff
Subscribe to Boldsky

சில நாட்களுக்கு முன்பு வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசிய பேச்சுக்களும் அதற்கு பலரது எதிர்ப்புகளும் கிளம்பி அது பெரும் விவாதப்பொருளாக மாறி வந்து கொண்டிருக்கிறது.

இப்போது நாம் ஆண்டாள் குறித்தோ வைரமுத்து பேசியது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் எல்லாம் செல்ல வேண்டாம், தேவதாசி என்ற முறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆம், வருகிறது தான். இன்றளவும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில இடங்களில் தேவதாசி முறை அமலில் இருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பே தேவதாசி முறையை ஒழிக்க சட்டங்கள் வந்து விட்டது, அதெல்லாம் ஒழித்தாகி விட்டது என்று சொல்பவர்கள் தொடர்ந்து இந்த கட்டுரையை அவசியம் படியுங்கள். கடவுளின் பெயரைச் சொல்லி பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவது குறித்தோ, தேவதாசி முறையை ஒழிக்க அரசாங்கம் இயற்றியிருக்கும் சட்டம் மட்டும் போதாது என்பதை பொட்டில் அடித்தார் போல சொல்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலங்காரங்கள் :

அலங்காரங்கள் :

அம்மா..... அப்பறம் நான் இங்க வரமாட்டேனா? உங்கள எல்லாம் பாக்ககூடாதா என்று கேட்கிறாள்.

அழக்கூடாது பாப்பா.... கொஞ்ச நாள் கழிச்சு உன்னை இங்க கூட்டிட்டு வந்திடுவோம். நீ போகலன்னா சாமிக் குத்தம் ஆகிடும்.அப்பறம் நோவு வரும் என்று பயமுறுத்தி பட்டுப்பாவடைய உடுத்திக் கொள்ள செய்து,நேர்த்தியான அலங்காரங்களை செய்து விட்டாள் அம்மா.

Image Courtesy

பிடிச்சிருக்கும்மா :

பிடிச்சிருக்கும்மா :

இதுவரையில் ஒரு வேளை உணவுக்கே திண்டாடிக்கொண்டிருந்த சமயத்தில் திடிரென்று இத்தனை உணவுப்பண்டங்கள், புதுத் துணி,நகைகள் என ஒரே நாளில் நடந்த மாற்றங்கள் குறித்து அந்த சிறுமிக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விதவிதமான உணவுகள் அவளுக்கு முன்பாக பறிமாறப்பட்டது. முழு அலங்காரத்தில் தன் முன்பாக விரிக்கப்பட்டிருந்த வாழையிலையில் இருந்த பதார்த்தங்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

அத்தனையும் எனக்கா? சாப்டவா? என்று கேள்விகள் அவளால் நம்பவே முடியவில்லை. இனிப்பை அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.

பிடிச்சிருக்கா? என்ற அம்மாவின் கேள்விக்கு

ரொம்ப பிடிச்சிருக்குமா.... தினமும் இப்டியே சாப்டலாம்மா என்றாள் வெள்ளந்தியாக.

Image Courtesy

எல்லம்மா :

எல்லம்மா :

ஐந்து நாட்கள் சடங்குகள், சம்பிரதாயங்கள் முடிந்து கோவிலுக்குள் செல்ல வேண்டிய நாள் அது.

அம்மா வேணாம்மா.... நம் வீட்லயே இருக்கேன் இந்த நகையெல்லாம் கூட எனக்கு வேணாம், தினமும் இனிப்பு கேக்கமாட்டேன். பள்ளிக்கூடத்துக்கு போகணும்னு அடம்பிடிக்க மாட்டேன் என்று கெஞ்சியழ சமாதானம் செய்து, மிரட்டி ,கெஞ்சி கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

Image Courtesy

மூன்று வருடங்கள் :

மூன்று வருடங்கள் :

அங்கே மூன்று வருடங்கள், பாட்டு நடனம் கற்றாள், கோவிலை சுத்தம் செய்தாள், வீட்டில் இருந்த நாட்கள், நண்பர்களுடன் விளையாடிய பொழுதுகளெல்லாம் நினைவில் வந்து போனது.

விடியற்காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை அவளுக்கு அங்கே வேலைகள் கொடுக்கப்பட்டது. கடவுளுக்கு செய்ற பணி இத நீ செஞ்சே ஆகணும் என்று சொல்லி சொல்லியே அவளது உழைப்பு சுரண்டப்பட்டது.

Image Courtesy

அம்ம்மா... :

அம்ம்மா... :

மூன்று வருடங்கள் முடிந்து ஒரு நாளில் அவளை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தாள். மகளுக்கோ ஏக சந்தோஷம். மீண்டும் வீட்டிற்கு செல்கிறோம் இனி இந்த நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற சந்தோஷம் அவளை துள்ளியெழுந்து கிளம்ப வைத்தது.

வீட்டிற்கு வந்தாள். அன்றைக்கும் தடாபுடல் விருந்து.

Image Courtesy

பேசாம தூங்கணும் :

பேசாம தூங்கணும் :

இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் அம்மாவின் அருகில் படுத்திருக்கிறேனா என்று நினைப்பில் அவளுக்கு தூக்கமே வரவில்லை.... அன்னக்கி என்னாச்சு தெரியுமா? என்று கோவிலில் விடப்பட்ட நாட்களின் கதையை அளக்க ஆரம்பித்தாள்.

காலைல பேசிக்கலாம் பேசாம தூங்கு. இரண்டு பேர் நீட்டி படுத்தால் நிறைந்து போகும் அறை அது. அம்மாவும் மகளும் நீட்டி படுத்துக் கொள்ள அவர்களுக்கு இடையில் கடைக்குட்டியான தம்பியொருவன் புகுந்து கொண்டான். அம்மா பக்கத்துல நான் தான் படுப்பேன் இவ்ளோ நீ தானடா படுத்த என்று தம்பியை எழுப்பினாள். இரண்டு குழந்தைகளுக்கு நடுவில் அம்மா படுத்துக் கொண்டாள்.

இவர்களின் தலைமாட்டிற்கு மேலே அப்பாவும் இன்னொரு தம்பியும் படுத்துக் கொண்டார்கள். இப்போது ஒருவர் எழுந்தாள் கூட அடுத்த அடி எடுத்து வைக்க படுத்திருப்பவர்கள் சற்று நகல வேண்டும். முழு வீடும் நிறைந்தது.

Image Courtesy

வாசலில் காத்திருக்கிறோம் :

வாசலில் காத்திருக்கிறோம் :

நடு இரவில், இரண்டு மகன்களையும் தூக்கி வெளித்திண்ணையில் படுக்க வைத்து போர்த்தி விட்டாள். இப்போது மகள் மட்டும் உள்ளே படுத்திருக்கிறாள். அந்த ஊரின் பெரும் செல்வந்தர் என்று அடையாளப்படுத்தப்பட்ட அந்த நபர் வர, இவர்களிடம் ஒரு கட்டு பணத்தை கொடுத்து விட்டு உள்ளே செல்கிறான்.

இரண்டாவது நொடி மகளின் அலறல் சத்தம் கேட்டது.

Image Courtesy

உன்னை வெறுக்கிறேன் அம்மா :

உன்னை வெறுக்கிறேன் அம்மா :

அம்மா.... திருடன் அப்பா..... காப்பாதுப்பா அம்மா..... தம்பி என்று தன் குடும்பத்து உறுப்பினர்களை கத்தி கதறி அழைத்தாள். காதை இறுக்க மூடிக் கொண்டார்கள்.

அம்மா உள்ள அக்கா அழுவுதும்மா என்று பேச்செடுத்த தம்பியின் வாயை அழுத்தப் பொத்தினாள். அது சாமி கண்ண மூடிட்டு தூங்கு என்று பயமுறுத்த இறுக்க கண்களை மூடிக் கொண்டான்.

உள்ளேயிருந்து பயந்து கொண்டு கதவாக நினைத்து தடுத்து நிறுத்தப்பட்டிருந்த தட்டியை தள்ளிவிட்டு அம்மாவிடம் ஓடிவந்தாள் மகள். அம்மா அங்க பாரு யாரோ வீட்டுக்குள்ள வந்துட்டாங்க என்று அழுது கொண்டே சொல்ல.... அழமா போ பாப்பா எல்லம்மா சாமிக்கு பணிவிடை செய்ற மாதிரி நினச்சுக்கோ இப்டி எல்லாம் அழக்கூடாது உள்ள போ என்று உள்ளே தள்ளிவிடப்பட்டாள்.

Image Courtesy

தேவதாசிகள் :

தேவதாசிகள் :

தேவதாசி என்று அழைக்கப்படும் பெண்கள் கடவுளின் சேவகர்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையையே கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் பல்வேறு கலைகளை கற்றுத் தேர்ந்து, தங்கள் கலையை செல்வந்தர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பொருள் ஈட்டுவார்கள்.

Image Courtesy

திருமணம் :

திருமணம் :

தேவதாசியை பொறுத்தவரையில் அவர்கள் கடவுளையே திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் சக மனிதர்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது, அதோடு உதவிகளையும் பெறக்கூடாது.

ஆனால் தேவதாசிகள் ஆண்களிடத்தில் உறவு வைத்துக் கொள்ள அனுமதியுண்டு. அது திருமணமான அல்லது திருமணாகாத ஆண்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த உறவு குறுகிய காலமோ அல்லது நெடுங்காலமோ தொடரலாம்.

Image Courtesy

குழந்தை தேவதாசிகள் :

குழந்தை தேவதாசிகள் :

ஏழாம் நூற்றாண்டில் அறிமுகமாகி வேகமாக பரவிய இந்த தேவதாசி முறையில் துவகக்த்தில் தேவதாசிகள் சமுதாயத்தில் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர், மதிப்புடன் நடத்தப்பட்டனர். ஆனால் இன்றைக்கு அவர்கள் பாலியல் தொழிலாளர்களாக மட்டுமே பார்க்கபப்டுகின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால் சொந்த குடும்பத்தினராலேயே நான்கு அல்லது ஐந்து வயது குழந்தைகள் எல்லாம் தேவதாசியாக கோவிலில் விடப்படுகிறார்கள் பிஞ்சுக் குழந்தைகள்.

Image Courtesy

ஏன் குழந்தைகள் :

ஏன் குழந்தைகள் :

தேவதாசியாக அடையாளப்படுத்தப்படும் குழந்தைகள் யாவரும் மிகவும் பின் தங்கிய சமுதாயத்திலிருந்து , தீண்டத்தகாத சாதி என்று அடையாளப்படுத்தப்பட்ட சில சாதிகளிலிருந்தே வருகிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் ஊருக்குள் நுழையவோ, படிக்கவோ, வேலை பார்க்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தங்களது வருமானத்திற்காக தங்கள் குழந்தையை இப்படி தேவதாசி முறைக்குள் வலுக்கட்டாயமாக சேர்க்கின்றனர்.

சில நேரங்களில் பெற்றோர்களே குழந்தைகளை பாலியல் தொழில்புரியவைக்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

Image Courtesy

பெண் தெய்வம் :

பெண் தெய்வம் :

புனிதம் என்று அவர்கள் நினைக்கிற ஒரு நாளில் தங்களுடைய பெண் குழந்தைகளை அலங்கரித்து எல்லம்மா பெண் தெய்வத்தின் கோவிலுக்கு அழைத்து வந்து அர்பணிக்கிறார்கள். அங்கே இருக்கக்கூடிய மூத்த தேவதாசிகள் சடங்குகள் செய்து,பெற்றோர்களின் அர்பணிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.

Image Courtesy

குடும்பச் செலவு :

குடும்பச் செலவு :

சில இடங்களில் தங்கள் குழந்தை பருவத்தை எட்டியவுடன் ஊருக்கு தகவல் சொல்கிறார்கள். பெரும் வசதி படைத்த செல்வந்தர்கள் இந்த குழந்தைகளை தங்களின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு அதற்காக அந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு அன்றாடச் செலவுகளுக்கான பணத்தை வழங்குகிறார்கள்.

Image Courtesy

வெளிவர முடியாத நிலை :

வெளிவர முடியாத நிலை :

பன்னிரெண்டு வயதுகளில் பருமெய்தும் பெண் குழந்தைகள் பதினைந்து வயதிற்குள்ளாகவே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பாலியல் நோய்கள்,எயிட்ஸ்,இளவயதில் குழந்தை பெற்றுக் கொள்வதால் ஏற்படுகிற உடல் உபாதைகள் போன்றவற்றை சமாளிக்க மருத்துவ செலவு,அன்றாட உணவுக்கும், தங்களின் குழந்தைகளுக்காகவும் தேவதாசி முறையிலிருந்து வெளி வர முடியாத சூழல் உருவாகிறது.

Image Courtesy

பாலியல் தொழில் :

பாலியல் தொழில் :

சிறுவயது முதலே உன் உடம்பைக் காட்டி தான் பிழைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட குழந்தை வளர்ந்ததும் வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயம். அதுவும் இங்கே கன்னிப்பெண்கள்,இளவயது பெண்களுக்கு மட்டும் தான் மவுசு.முப்பது வயதை நெருங்கிவிட்டாளே முதிர்ந்தவள் என்று வெளியேற்றப்படுகிறார்கள்.

அதோடு சாதிய பேர்களைச் சொல்லி அவர்களை ஊருக்குள்ளேயே வரக்கூடாது என்று மறுக்கும் போது அவளுக்கு வேறு வழி இல்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். இந்திய நெடுஞ்சாலைப் பக்கம் சென்றால் பெண்கள் கைதட்டி அழைப்பார்கள் என்று கேவலமான ஒரு பார்வையுடன் சிரிக்கிறோமே.... அவர்கள் கைதட்டி அழைப்பது உடல் சுகத்திற்காக அல்ல, தங்கள் குழந்தையின் பசியாற்றுவதற்காக.

Image Courtesy

என்ன சொல்கிறது சட்டம் :

என்ன சொல்கிறது சட்டம் :

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்த தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்டது, சுதந்திரத்திற்கு பின்பும் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த தேவதாசி முறை முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஆனால் இன்றளவும் சில இடங்களில் தேவதாசி முறை கடைபிடிக்கப்படுவதாகவும், தேவதாசியாக குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தேசிய மனித உரிமைகள் ஆய்வுகள் கூறுகிறது.

என்ன செய்யலாம் :

என்ன செய்யலாம் :

சமூகத்தில் நடக்கிற அவலநிலையை ஒழிக்க கடுமையான சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. தேவதாசியாக நாம் இருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று கூட தெரியாது அறியாமையில் சிக்கியிருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும். கல்வியும் வேலை வாய்ப்பும் உடனடியாக வழங்க வேண்டும். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life women
English summary

Life Story Of Devadasi in India

Life Story Of Devadasi in India
Story first published: Saturday, January 13, 2018, 11:18 [IST]