14 வயது மாணவியை வினோத காரணம் கூறிக் கொடுமை செய்த பள்ளி நிர்வாகம்!

Subscribe to Boldsky
Just 14 Years Old Niamh Baldwin Was Isolated in School Because of Weird Reason!

இன்றைய வாழ்க்கை சக்கரத்தில் நல்லவர்கள், தானதர்மம் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. அதனால் தான் யாரெல்லாம் நல்லவை செய்ய முனைகிறார்களோ அவர்களை எல்லாம் பாராட்டி மகிழ்ந்து ஊக்கவிக்கிறது இன்றைய உலகம்.

ஆனால், எதிர்பாராதவிதமாக சமூக சேவையாக ஒரு பதின் வயது பெண் செய்த காரியத்திற்கு அவர் படித்து வந்த பள்ளியே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரை மற்ற மாணவர்களிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தி கொடுமை செய்துள்ளனர்.

All Image Source: Niamh Baldwin / Facebook

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியாம் பால்ட்வின்

நியாம் பால்ட்வின்

நியாம் பால்ட்வின் எனும் 14 வயது பெண் செய்த அந்த நல்ல காரியம் தனது கூந்தலை தானம் செய்தது தான். இதற்காக தான் நியாம் பால்ட்வினை தண்டித்துள்ளது அவரது பள்ளி நிர்வாகம். இன்று பல பெண்கள் துணிந்து செய்து வரும் காரியம் இது. புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தங்கள் கூந்தலை பல பெண்கள் தைரியமாக தானம் செய்து வருகிறார்கள்.

ஆனால், இந்த பள்ளியின் இந்த எதிர்ப்பு செயல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பள்ளி நிர்வாகம்!

பள்ளி நிர்வாகம்!

பெந்ஸ்யாந்ஸ்ல் இருக்கும் மவுண்ட்ஸ் பே அகாடமியில் பயின்று வருகிறார் நியாம் பால்ட்வின். கூந்தல் தானம் செய்த நியாம் பால்ட்வின், மொட்டை தலையுடன் பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால், அந்த பள்ளி நிர்வாகம். நியாம் பால்ட்வின் கூந்தல் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவாக இருப்பதால் ஸ்கார்ப் அணிந்து வர கூறியுள்ளது.

தானம்!

தானம்!

நியாம் பால்ட்வின் கிறிஸ்துமஸ் அன்று தி லிட்டில் பிரின்சஸ் என்ற அமைப்புக்கு தனது கூந்தலை தானமாக கொடுத்துள்ளார். இதன் மூலம் புற்று நோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு விக் (Wig) செய்ய உதவியுள்ளார் நியாம் பால்ட்வின்.

பேட்டி:

பேட்டி:

இதுகுறித்து நியாம் பால்ட்வின் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

"நான் கடந்து ஒரு வருடமாக இது குறித்து ஆலோசித்து வந்தேன். 14 வயதில் நான் முழுநீள கூந்தல் கொண்டிருக்கிறேன். ஆனால், 10 வயது கூட நிரம்பாத சிறுமிகள் சிலர் தங்கள் நோய் காரணத்தால் கூந்தல் இன்றி இருப்பது என்னுள் வலியை ஏற்படுத்தியது. அதற்காகவே எனது கூந்தலை தானம் செய்தேன்" என கூறியுள்ளார் நியாம் பால்ட்வின்.

விடுமுறை முடிந்து...

விடுமுறை முடிந்து...

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்த நல்ல காரியம் செய்த மனநிறைவோடு பள்ளிக்கு சென்றுள்ளார் நியாம் பால்ட்வின். ஆனால், அவர்கள் பாராட்டாமல், நியாம் பால்ட்வின் செய்தது தவறு என்பது போல கூறி, எதிர்மறையாக பேசியுள்ளனர்.

பள்ளி நிர்வாகம் குறித்து நியாம் பால்ட்வின் கூறுகையில்,

"எனது பள்ளி நிர்வாகத்திற்கு எனது செயல் பிடிக்கவில்லை போல. உடனடியாக என்னை தனிமைப்படுத்தினார்கள். நான் எதற்காக கூந்தல் தானம் செய்தேன் என்பதை என்னை முழுமையாக அவர்கள் விளக்கம் தர கூட அனுமதிக்கவில்லை.

உண்மையை கூற வேண்டும் எனில், என் பள்ளி நிர்வாகம் நான் செய்த காரியத்தை கெட்ட செயலக உணர வைக்கிறது. இது தவறல்ல என்பதை நான் அறிவேன். ஆனாலும், தொண்டு நிறுவனத்துக்கு சமூக சேவையாக செய்த செயலை எதிர்மறையாக காண்பது தவறு தானே" என நியாம் பால்ட்வின் கூறியுள்ளார்.

ஸ்கார்ப்!

ஸ்கார்ப்!

இப்போது பள்ளிக்கு வரும் போது கட்டாயம் ஸ்கார்ப் அணிந்து தான் வர வேண்டும் என நியாம் பால்ட்வினுக்கு கட்டாயமாக கூறியுள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர்.

இதை அசௌகரியமாக உணர்வதாக கூறுகிறார் நியாம் பால்ட்வின்.

"நான் ஸ்கார்ப் அணிந்து வந்தால் தான் அனைவரும் என்னை உற்று நோக்குவார்கள் என நான் கருதுகிறேன். இது ஒரு மோசமான சூழலை உருவாக்கும் என கருதுகிறேன்" என தான் அளித்த பேட்டியில் நியாம் பால்ட்வின் கூறியுள்ளார்.

சமூக தளம்...

சமூக தளம்...

நியாம் பால்ட்வின் அம்மா பள்ளியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து முகநூலில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதில்,

தைரியமான முடிவு வெடுத்து துணிச்சலுடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழும்படி ஒரு செயலை செய்த மாணவியை ஒரு சென்டிமீட்டருக்கு குறைவாக கூந்தல் இருக்கிறது என கூறி தனிமைப்படுத்தியது தவறு. இது என் மகளின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் இருக்கிறது.

என் மகளை இந்த காரணம் காட்டி விளையாட்டு மைதானம் மற்றும் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்காமல் தனிமைப்படுத்தி கொடுமை செய்துள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர். இது கண்டிக்க தக்கது.

நியாம் பால்ட்வின் ஒரு அற்புதமான பெண். கூந்தல் அலங்காரம் சரியில்லை என ஒருவரை குற்றவாளி போல ட்ரீட் செய்வது கொடுமை. என் மகளை எண்ணி நான் பெருமிதம் அடைகிறேன். அவளை நினைத்து எங்கள் குடும்பமும், அவளது தோழமை உறவுகளும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

என்ன பாலிசி?

என்ன பாலிசி?

கூந்தல் இந்த அளவுக்கு இருக்க வேண்டும். இல்லை என்றால் ஸ்கார்ப் அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும் என்பது பள்ளியில் பாலிசி என்கிறார்கள். இது எத்தைகைய பாலிசி. இது போன்ற ரூல்ஸ் ஐரோப்பிய நாடுகளில் சகஜமாக காணப்படுகிறது.

மொட்டை அடித்த நிலையில் யாரேனும் மாணவர் பள்ளிக்கு வர வேண்டும் என்றால். குறிப்பிட்ட அளவு முடி வளரும் வரை தனி அறையில் தான் இருக்க வேண்டும் என்பது எக்ஸ்ட்ரீம் கொடுமை.

நியாம் பால்ட்வின் இந்த காரியத்தை எண்ணி பள்ளி பெருமை பட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் தண்டித்துள்ளனர். இது யார் பார்வையிலும் ஏற்புடையதாக இல்லை."

எனக் கூறி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் நியாம் பால்ட்வின் அம்மா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Just 14 Years Old Niamh Baldwin Was Isolated in School Because of Weird Reason!

    Just 14 Years Old Niamh Baldwin Was Isolated in School Because of Weird Reason!
    Story first published: Monday, January 15, 2018, 12:05 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more